Wednesday, April 30, 2008

பழம் பாடல் புதுக்கவிதை பரணி, நளவெண்பா

     ஒரு  உண்ர்வே  இரு  புலவர்  உள்ளம்  தன்னில்
          உருவாகும்  என்பதற்கு  உவமையாக
     தருகின்றேன்  இரு  செய்யுள்  உங்களுக்கு
          தமிழன்னை  கொடைகளினால்  உளம் ம்கிழ்வீர்



     இல்லாத  இடை  கொண்ட  பெணணொருத்தி
          இரு மார்பைத் தாங்கி  மெல்ல  நடக்கின்றாளாம
     பொல்லாத  மார்பதனின்  சுமைகள்  தன்னால்
           பொறுக்காமல்  இடையதுவும் ஒடியும் என்றே
     நில்லாமல்  ஒலி  எழுப்ப  என்றே  அந்த
          நெடுங் கண்ணாள்  சிலம்பிரண்டும சத்தமிட்டு
     எல்லோரும்  வாருங்கள்  இனிய பெண்ணின்
          இடை முறியும்  முன்னாலே  காக்க என்று

     குய்யோ  முறையோ  என்று  கூச்சலிட்டுக்
          கூப்பிடுமாம்  ஊரையெல்லாம்  உறவையெல்லாம்
     அய்யோ  இதைப் போன்ற  அழகுச் செய்தி
          அளிப்பதுவோ  இரு புலவர்  நமக்கு அய்யா
     மெய்யாக  வெண்பாவிற்  கொருவரென்று
          மேன்மை  கொண்ட புகழேநதிபபுல்வரோடு
     பொய்யாத  செயங்கொண்டான்  பரணியிலே
          புகலுகின்றான்  இச் செய்தி  காண்போம் வாரீர்

                              நளவெண்பா

     மோட்டிளங்  கொங்கை  முடியச் சுமந்தேற
     மாட்டாது  இடையென்று  வாய்  விட்டு  -  நாள்த் தேன்
     அலம்புவார்  கோதை  அடியிணையில்  வீழ்ந்து
     புலம்புமாம்  நூபுரங்க்ள்  பூண்டு

                          கலிங்கத்துப் பரணி

     உபய  தனமிசையில்  ஒடியும்  இடை ந்டையை
     ஒழியும் ஒழியும்  என  ஒண்சிலம்பு  
     அபயம்  அபயம்  என  அலற  நடை பயிலும
     அரிவை  மீர்  கடைகள்  திறமினோ்


     

        

படித்த வழி நடக்க வேண்டும்

     பதவியிலே  இருக்கின்ற  படித்தவர்கள்
          படித்த வழி  நடப்பதுவே நிலை  உயர்த்தும்
     உதவுகி்ன்றார்   உங்களுக்கு  ஏழை மக்கள்
          உழைத்த பணம்  வரியாக்கி  பல விதத்தில்
     கதவடைத்து பணம்  படைத்தார் அடிமைகளாய்
          கையூட்டில்  வாழ்வது உங்கள் குலம் கெடுக்கும்
     விதம்  விதமாய்ப் பொருட்கள் உங்கள்  வீடு  வரும்
          வினையாலே  நோய்களுமே  கூட  வரும்

    ஏய்க்காமல்  இருப்பதனால்  ஏழையானார்  
          இருந்தாலும்  நிம்மதியில் செல்வரானார்
     போய்ப் பாரும்  அவர்  பெண்டு  பிள்ளையெல்லாம்
          புரியும்  நீர்  செய்கின்ற  அநியாயங்கள்
     காய்த்திட்ட  கைகளினால்  கஷ்டப்பட்டு
          கடமை செய்து  உங்க்ளையே காத்து நிற்பார்
     ஏய்க்காதீர்  ஏழைகளை  ஏய்த்தால்  உம்மை
           இழி  நிலைக்கு  தள்ளிடுவாள் விதியாம்  தாயும்
         

Tuesday, April 29, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

   சொற்களுக்குள்  அடங்காதாம்  காமம்  என்னும்  
          சுவையதுவும் சொல்லுகின்றான் கம்ப  நாடன்
    விற்பிடித்த இராமனவன்  சென்றான்  அங்கே
          விழி கொண்ட பெண்ணொருதி  கண்டு விட்டாள்  
  பொற் பதத்தாள்   படுகின்ற  துயரம் தன்னைப்
          புகலுகின்றான்  கம்பனவ்ன்  மெல்லக் கேட்பீர்
   கற்பனையை  விரிக்கின்றான்   விரித்த  போதும்
          கனித்தமிழர்  பண்பாடும்  காத்து  நின்றான்
      



     எழுத்துக்குள்  அடங்காத  காமம்  தன்னை
          எடுத்தெழுதி வெற்றி  கண்ட  ஒவியம் போல்
     துளிர்த்தங்கு  நிற்கின்றாள்  பெண்ணொருத்தி
          துடிக்கின்றாள்  ராமனையே கண்ட பின்னர்
     கழுத்தோடு  உறவு கொண்ட அணி கலன்கள்
          கை கால்கள்  இடுப்பிலுள்ள  அணிகலன்கள
     பொருப்பாகும்  மார்பகத்தின்  அணிகலன்கள்
          பொன் நகைகள்  அத்தனையும் பறித் தெறிந்தாள்

     நெருப்பாகி  மேனியெல்லாம்  தகி தகிக்க
          நெஞ்சுக்குள்  பெருந்தீயே  கொதி கொதிக்க
     சுருக்கான இடைக்குள்ளோ  சூடு  ஏற
          சொருகுகின்ற விழிகளுக்குள்  இராமன்  ஆட
     மிடுக்கான  இராமன்  அவன்  தந்த  நோயால்
          மேனி படும்  பாட்டில்  அவள்  ஆடினாலும்
     பொறுப்பாக  தன்  உடலை  ம்றைப்பதற்காய்
          போட்டிருந்தாள் ஆடையொன்று  மேனிமேலே 

     தன்னை  இழந்தாள்  எனறே  ஒதுகின்றான்
          தங்க நகை துறந்ததையும்  ஒதுகின்றான்
     மென்நகையை  இழந்தாள்  என்றோ துகின்றான்
          மேனி தாங்க முடியாள்  என்றோ துகின்றான்
     அன்னவெல்லாம்   ஒதியவன்  ஒதுகின்றான்
           அழகு மயில்  தாங்கி  நின்ற   தொன்றே யென்று
     மென்நகையாள் ஆடை மட்டும்  தாங்கினாளாம்
           மேன்மையுறு  தமிழினம்  தான்  என்பதனால்

     கன்னலெனும்  தமிழ்க் கவிதைக்  கம்பனவன்
          காட்டி நின்ற்   இப்பெருமை உள்ளம் தன்னில்
    மின்னலென  வெட்டி நிற்கும் மெய் சிலிர்க்கும
          மேன்மை கொண்ட  தமிழினத்தைப் போற்றி நிற்கும்
     அன்னவனின்  கவிதையினைக்  க்ற்கக்க்ற்க
          ஆடி நிற்கும்  பாடி நிற்கும்  நம் மனது
     சொல் நல்ம்  கடந்ததென்ற  அந்தப்  பாடல்
          சொலலு்கின்றேன்  இதன்  பின்னர் அதனைப் பாரும்

     சொல்நல்ம்  கடந்த  காமச்சுவையை  ஒர்  உருவம்  ஆக்கி
     இன்நலம்  தெரிய  வல்லார்  எழுதியது  என்ன நின்றாள்
     பொன்னையும்  பொருவு  நீரால்,  புனைந்தன  எல்லாம் போக
     தன்னையும்  தாங்கலாதாள்  துகில் ஒன்று  தாங்கி நின்றாள்
         

         
          

தமிழைப் படியுங்கள்

அன்புடையீர்.
வணக்கங்கள்.நேற்றும் இன்றும் தமிழ் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள்
அதிகாலையிலேயே என்னைக் காண வந்தவர்கள் கணிப்பொறியில் அமர்ந்த
உடன் நான் கவிதைகளை தட்டச்சு செய்வதனைக் கண்டு வியந்தனர்.
இதில் வியப்பதற்கு ஒன்றுமேயில்லை.தமிழைப் படித்துக் கொண்டேயிருந்தால்
இது எளிது என்று அவர்களுக்குச் சொன்னேன்.தமிழ் மாணவர்களூக்கு
மட்டுமல்ல.கவிதையோ கதைகளோ கட்டுரைகளோ எழுத விருப்பம் கொள்ளும்
அனைவருக்கும் எனது வேண்டுகோள் இதுவே.படியுங்கள் படியுங்கள் படித்துக்
கொண்டேயிருங்கள் என்பதுதான்.வாழ்க தமிழுடன்.

தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்

மரணம் வரை படித்தான்

     நாடாளுமன்றத்தில்   குண்டு  வீசி  
          நாடனைத்தும்  தனை நோக்க  வைத்த  வீரன்
     கேடான  சைம்னையே  எதிர்த்து  மக்கள்
          கிளர்ச்சி   கொள்ள எழுச்சி பெறச் செய்த  தோழன்
     வீடல்ல நாடேதான்   பெரிது  என்று
          வீரர்களும்  உருவாகச் செய்த  சூரன்
     ஆடல்ல  மாடல்ல  நாங்கள் என்று
          ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப்  பாடியவன


     ம்ரணமே  தணடனையாய்ப்  பெற்ற  போதும்
          மகிழ்ச்சியுடன்  அதை  ஏற்ற மாம்னிதன
     உரம்  நெஞ்சில்  கொண்டவனாய்  உயர்ந்ததாலே
          உடல்  எடையும்  தினம் தினமும்  கூடிற்றம்மா
     கரம்  கூப்பி நின்றார்கள்   வெள்ளையர்கள்
          காணவொண்ணாக் காட்சி இதைக் கண்டதாலே
     சிரம் தன்னைத் தூக்கினிலே  சேர்ப்பதற்காய்
          செய்கின்றார்  ஏற்பாடு அச்சத்தோடு

     கீழ் நீதி  மன்றத்தின்  தீர்ப  பெதிர்த்தான்
          கேட்டு நின்றான் மேல்  நீதி மன்றத் தீர்ப்பை
     வாழ  விடு  என்ற்ல்ல  நாடு  காக்க
          வந்ததனால்   தூக்கு   என்று  சொல்லச் சொன்னான்
     கேடுகெட்டார்  கிரிமினல் என்று அவனைச்  சொன்னார்
          கீழ் நீதி மன்றத்தில்   அதை  எதிர்த்தான்
     நாடு  காக்க  வந்ததனால்  தூக்கு  என்று
          நாடறியச்  சொல்க  என்றே கேட்டு  நின்றான்


     ம்ரணமதை  உறுதியாக்கக்  கேட்டு  நின்ற
          மாவீரன்  தூக்கு  மேடை  ஏறும்  வரை
     விரதம்  ஒன்று  கொண்டிருந்தான்மேலும் மேலும்
          வேண்டும்  பல  நூற்களையே கற்று நின்றான்
     அருகிருந்த  நண்பர்  இதைக் கேட்ட  போது
          அவன்  ஆசை  ம்ரணம்  வரை கற்றல்  என்றான்
     பெரு விருந்து  கல்வி  அதைப்  பெற்றதால் தான்
          பேடி  வாழ்க்கை  வாழாமல்  வீரம்  கொண்டான்


     தூக்கு மேடை  ஏறுகின்றான்  அருகிருந்த
          தூய  உடை  நீதிப்தி தன்னைப்  பார்த்து
     பாக்கியம்  நீர்  செய்துள்ளீர்  உலகம்  உம்மைப்
          பார்க்கும்  வழி  கொண்டுள்ளீர் புரிகிறதா
     ஆர்க்கின்ற  மனத்தோடு   முக மலர்ந்து
          அன்னை யவள்  நாட்டிற்காயுயிர்  துறக்க
     வேர்க்கின்ற்  உடலின்றி  மிகத் தெளிவாய்
          வீரன்  நான் உயிர்  துறக்கக் காண்பீர்  நீரே

     மூடியிடா  முகத்தோடு அச்சமின்றி
          முடிகின்ற வாழ்க்கை  தாய்  நாட்டிற்கென்று
     வாடிவிடா  முகமின்றி  நெஞ்சு முற்ற
          வாழ்ந்திருந்த   மகிழ்வினையே  முகத்தில் கொண்டு
     பேடிகளாய்  வாழாமல்  இளைய  தோழர்
          பெரு வீரர்  ஆவதற்காய்  தனையே தந்த
     கோடிகளில்  ஒருவரென  வாழ்ந்த  வீரன்
          கொள்கை  பகத்சிங் அவரைப் போற்றுவோமே
     

Monday, April 28, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

     பழம் பாடல்  புதுக்கவிதை  என்று  ஒரு
          படைப்புத்தி  தந்திருந்தார்  கண்ணதாசன்
     உளம் கொண்ட  அவ்வழகு  வடிவம் தன்னில்
          உலகத்துத்  தமிழினத்தார்  அனைவருக்கும்
     தள வழியாய்ப்  பழம்  பாடல்  அழகையெல்லாம்
          தருவதற்கு நானும்  இங்கு  ஆசை கொண்டேன்
     வழி வ்ழியாய்  வந்த  தமிழ்ப்  புலமை யெல்லாம்
          வருகிறது  இவ்வழியில்  வாழ்த்த வேண்டும்


     கம்பனெனும் மாக்கவிஞன்  காட்டுகின்ற  காதலினை
          அம்புவியின் தமிழன்பர்  அனைவருக்கும்  தர  விழைந்தேன்
     கொம்பு  முலைக் கூட்டத்துக் கோலவிழிப் பெண்ணொருத்தி
          வெம்புகின்ற  தன்னுடலின் வெப்பமது  தாங்காமல்
      நம்பி  நின்ற நாயகனை  நாள்  பலவாய்க்  காணாமல்
          வம்பு செய்யும்  தன் உடலின்  வாட்டமது  தாங்காமல்
     தெம்பு  தர வருவானோ  தீண்டி வெப்பம்  தீர்ப்பானோ
          தெங்கிள நீர்  மார்பகத்தைச் சேர்ந்திடவே மாட்டானோ

     நொந்து  நின்றாள்  பெண்ணவளும்  நோவதனைத் தீர்ப்பதற்கு
          வந்து விட்டான்  நாயகனும்  வரவேற்றாள்  தாழிட்டாள்
     செந்தமிழின்  சிவப்புதட்டால்  சேர்த்தே  இறுக்குகின்றாள்
          வந்தவனோ  ம்ன்மகிழ்ந்தான்  வரவிலுள்ள தாமதத்தால்
     நொந்தவளும்  தன்னை  நோகடிப்பாள்  என நினைந்தால்
          அந்தி மழைக்  காலத்து அரவணைப்பால்  நெருக்குகின்றாள்
     தந்து விட்டாள்  தன்னை தாமதத்தால்  ஏக்கத்தால்
          என்றே கருதி  நின்றான்  இடையுறூ  வந்ததங்கு

     பல  காலம்  காத்திருந்த  ஏக்கம்  தன்னில்
          பனி மொழியாள்  தழுவி விட்டாள் தெளிந்த பின்னர்
    சில  பலவாம்  கேள்விக்ளால்  என்னை  அவள்
          சிக்கலுக்கு  ஆளாக்கக் கூடும்  என்றே
   வெல வெலத்து நிற்கின்றான்   அவளோ மெல்ல
          விலகுகின்றாள்  அவன்  முதுகைத் திருப்பிப் பார்த்தாள்
    பல  பலவாய்  எண்ணங்கள்  படையெடுக்க
          பாவி மகன்  துடிக்கின்றான்   அவளைப் பார்த்தான்

     கல கல்வென்றே   சிரித்தாள்  கண்ணசைத்தாள
          கலங்கியவன்  புரியாமல்  சிரித்து  வைத்தான்
     வல   இடமாய்  அவன் தன்னை  ஆட்டி ஆட்டி  தன்
          வடிவழகால்    கொல்லுகின்றாள சொல்லுகின்றாள
     முலை  இரண்டும்  உந்தன்  திரு  மார்பை  குத்தி
          முதுகுக்கு  வந்திருக்கும   என நினைத்தேன்
     சிலை மார்பே  உன்  மார்பு   என்றுணர்ந்தேன்
          சிரிப்பென்ன  வா  என்றே  தழுவிக் கொண்டாள்


     கம்பனது  கற்பனையைக் காட்டும்  பாடல்
          காட்டுகின்றேன்  படியுங்கள் மேலும் மேலும்
     தெம்பளிக்கும்  தமிழ்ப்பாடல்  பலவும்  தந்து
           தினம்  உம்மை  வணங்கி நிற்பேன் எனை  வாழ்த்த்ங்கள்

     கொலை உரு  அமைந்தெனக்  கொடிய  தோற்றத்தாள
     கலை உரு  அல்குலாள்  கணவர்ப் புல்குவாள்
     சிலை உரு வழி தரச் செறிந்த  மார்பிற் தன்
     முலை உருவின்  என  முதுகை  நோக்கினாள்

       தங்கள்  அன்பின் அடிமை    நெல்லைக்கண்ணன்

தமிழர் காமராஜர்

     தமிழ்த் தாயார்  ஈன்றெடுத்த  காமராஜர்
          தாய் நாட்டைக்  காக்க வந்த  பீமராஜர்
     அமிழ்தான தமிழ் மொழிக்கு உண்மை ராஜர்
          அகிலமெல்லாம்  தமிழ்  கொணடு சென்ற ராஜர்
     வட புலத்தில்  காங்கிரஸின் தலைவராகி
          வாயாடி நின்ற தன்புத்  தமிழிலேதான்
     கடல் கடந்து  ரஷ்ய நாட்டில்  நின்ற போதும்
          கனித் தமிழே  பேசி நின்ற தனித் தமிழர்

     தான் பெறவே இயலாமல்   போன  கல்வி
          தமிழ்  ஏழை அனைவருக்கும் தந்த தெய்வம்
     ஊன் உடம்பு  உயிர் தந்த தாய்க்குக் கூட்
          உண்மைக்குப் புறம்பாக உதவாத்  தேவன்
     ஏன்  என்று  எதனையுமே கேட்டுக் கேட்டு
          ஏழைகட்காய்ச்  செய்து நின்ற  மாமனிதன்
     வான்  சென்றான்  என்கின்றார்  இல்லையில்லை
          வாழ்கின்றான்  எம்மோடு  இன்றும்  இங்கே

     ஏழையெனப் பிறந்தான் தான் உயர்ந்த போதும்
          ஏழையென்றே வாழ்ந்தான்  காண்  தோல்வி தந்தார்
     கோழையென  அழுதானா  இல்லை என்னைக்
          கூப்பிடுங்கள்  என்றெல்லாம்  குமுறினானா
     வாழையடி  வாழையென  காந்தி  பேரை
          வாழ்விக்க வந்தவன் காண்  செல்வனான்
     கூழையென நின்றார்க்கு கல்வி யெனும்
          கொடை அளித்தான்  அதனாலே செல்வனான்

     ஏழையென்று  சொல்லாதீர்  அவனை  எங்கும்
          ஏற்றங்கள்  அவனாலே பெற்ற  நீவிர்
     வாழையடி  வாழையென  கல்வி  இன்று
          வந்ததுங்கள்  வீட்டிற்குள்  அவனால்ன்றோ
     பேழையென  நெய்வேலி  திருச்சியிலே
          பேர் சொல்லும் மிகுமின் நிறுவனம் தான்
     வாழ்வதற்கு  அனைவருக்கும்  உணவளிக்கும்
          வயற்காட்டுத்  தோழருக்காய் அணைகள் தந்தான்

     ஊழை  வெல்ல  முடியாராய்  ஒடுக்கப் பட்டோர்
          ஒய்ந்திருந்த  நேரத்தில்  எழுந்து  வந்தான்
     கோழை மனம்  விட்டவரும்  கொடிகள் ஏந்தி
          கொள்கை கண்டு  வெற்றி பெற வழிகள் செய்தான்
     ஏழையல்ல செல்வன்  அவன்  என்றே  சொல்வேன்
          ஏனென்றால்  செழுங் கிளையைத்  தாங்கி  நின்றான்
     நாளை  வரும்  இளைஞ்ருக்கு இந்தச் செய்தி
          நல்கி நிற்பீர்   ந்ன்றி  கொல்லா நற்றமிழீர்

காந்தியடிகளும் தமிழும்

     தமிழ்த்தாயாம்   தில்லையாடி  வள்ளியம்மாள்
          தான் தந்த  போராட்டப்  பேருணர்வே
     அமிழ்ந்திருந்த  இந்தியத்  தாய்  விடுதலைக்கு
          ஆளாக்கித்  தந்ததெனை  வணங்குகின்றேன்
     தமிழன்னை  பெற்றெடுத்த தவப்புதல்வர்
          தங்க  நிகர்  வள்ளுவரின்   திருக்குறளை
     தமிழிலேயே கற்றுவிட  ஆசை  கொண்டேன்
          தரவில்லை இறைவன்  அந்தப் பேரருளை
     அமிழ்தான தமிழ்முதை  இந்தியத்தார்
          அனைவருமே   கற்று விட்டால் ஒன்றாயாவார்

     இவையெல்லாம்  காந்தி  மகான்  வார்த்தையாகும்
          ஏற்றிருந்தால்  இந்தியாவே வென்று  நிற்கும்
     கவைக்குதவா  வேலையெல்லாம்  செய்து நிற்பார்
          கண்ட்தில்லை  நல்ல்தெல்லாம்  என்ன் செய்ய
    அவையினிலே  வெல்லுதற்கு  அனைவருமே
          அன்னை மொழி த்னில்  கல்வி கற்றல் வேண்டும
     சுவையதுவே  என்று  சொன்னார்  அண்ணல்  அவர்
          சுத்தமாக  மறந்து இன்று  தமிழ்  ஒழித்தோம்
   
     

Sunday, April 27, 2008

வாருங்கள்

     வாருங்கள்  நண்பர்களே   அன்பு   செய்து
          வாழ்க்கையினைச் சுகமாக்கி மகிழ்வு   கொள்வோம்
     சேருங்கள்  அனைவரையும்  அன்பினுக்குள்
           சிறு தவறு  அனைத்தையுமே பொறுத்து  வெல்வோம்
     பாருங்கள்  நல்லதையே   வெற்றி   சேரும்
          பாரனைத்தும்  உறவாகும்  பண்பு  கூடும்
     தேருங்கள்  சிறப்பனைத்தும்  தேர்ந்து ஒர்ந்தால்
          தெய்வங்கள்  நீங்கள் தான்  வேறொன் றில்லை


அன்புடயீர்     வண்க்கம்.  நேற்று  காரைக்குடி  அருகில்  பல்வான்குடி  சிவன்
கோயிலில்  உரை நிகழ்த்தச் சென்றிருந்தேன்.அன்பே  வடிவான்  அந்த மக்கள்
அவர்தம்  விருந்தோம்பல்.மனம்  நிறைந்தது.சிங்கப்பூரிலிருந்து இனிய  நண்பர்
சிதம்பரநாதன்  நண்பர்  பால்சசந்திரன்  பழனியப்பன்  நண்பர்  கோவைக்கண்ணன்
மூலமாக  சிறபபான  ஏற்பாடுகள் செய்திருந்தார்.அருமையான் கூட்டம்.பேசி
முடித்துப்  பார்க்கின்றேன்.இரண்டரை  மணி  நேரம்  பேசியிருக்கின்றேன்.
அண்ணன்  குமரி  அனந்தன்   ஒரு முறை  தூத்துக்குடி  மாநாட்டில்  சொன்னார்
கண்ணனை  ஆய்ச்சியர்  உரலில்  கட்டிப் போடுவார்கள்.நமது  கண்ணனோ
மக்களை  தனது  உரையால்  கட்டிப் போடுவார்   என்று.அதனை எனது உதவியாள்ர்  நினைவு  படுத்திப்  பெருமை சேர்த்தார்.நன்றி.

த்ங்கள்  அன்பின்   அடிமை       நெல்லைக்கண்ணன்

Saturday, April 26, 2008

கிருஷ்ண லீலை வாமீத முலை நூலிலிருந்து

                                     கிருஷ்ண  லீலை



    அனுமதியில்லை



     வாயில்
     உலகம் காட்ட
     கண்ணனுக்கு
     ஆசைதான்

     அமெரிக்கா
     அனுமதிக்க
     வேண்டுமாமே



       மேனகா   காந்தி

     கருட  சேவை
     காளிங்க
     நர்த்தனம்

     மேனகா காந்தியால்
     தடைப் பட்டுப்
     போகும்



          சுவரொட்டி



     சுவரொட்டி
     தின்று
     பழக்கப்பட்ட
     ஆவினங்கள்

     குழலுக்கும்
     வருவதில்லை



                குளிர்ப்பெட்டி



     பாக்கெட்
     பால்
     
     வெண்ணெய்
     திருட
     குளிர்ப்பெட்டி
     திறக்க
     வேண்டும்



               மலை  தூக்க  வேண்டாம்


     இந்திரனுக்கு
     கோபமில்லை
     வருணனுக்கு
     உத்தரவில்லை

    கோவர்த்தன்
     மலைக்கோ
     அவசியமில்லை



            குளியல்

     தண்ணீர்
     இல்லாக்
     குளங்கள்

     பசுமையற்ற
     மரங்கள்

     கோபிகையர்
     குளிக்க
     வருவதில்லை



               குசேல்ர்


     இரண்டுக்கு
     மேல்
     இல்லையென்பதால்

     அவலுக்கும்
     வழியில்லை



                   அச்சம்

     பன்நாட்டுப்
     பூதகியின்
     பெப்சி
     கோக்

     முலைகள்
     உறிஞ்ச
     கண்ணனுக்கே
     அச்சம்



           தடை


     அசுரர்கள்
     வதைப்பிற்கோ

     மனித
     உரிமை
     ஆணையம்

     தடை



           அவதாரம்


     அவதாரம்
     எடுக்கலாம்
     என்றால்

     ஏற்கனவே
     எடுத்து
     விட்டார்கள்

     மனிதர்கள்


       பத்திரம்


     வைகுந்தம்
     ஒன்றுதான்

     தற்போதைக்கு
     பத்திரம்

பணிவு

     பணிவோர்  முன்னர்  பணிந்து  நிற்கும்

          பணிவே  என்றும்  பணிவு  ஆகும்

     பண்பார்  முன்னர்  பணிந்து  நிற்றல்

          பணிவுக் கெலலாம் பணிவாகும்

     அணியாய்  வாழ்வைக் கொண்டார் முன்னர்

          அணியாய்  நிற்றல்  பணிவாகும்

    பிணியாய்  வாழ்வைக் கொண்டார்  முன்னர்

          பணிதல்  என்றும்  பிணியாகும்

Friday, April 25, 2008

கவிதை எழுத

     கவிதை எழுத  விழையும்  நண்பர்  கருத்தில்  இதனைக் கொள்வீரே

          புவியை  வெல்லும்  கவிதை  யாத்து  புகழால்  நீரும்  வெல்வீரே

     கம்பன்  தன்னை  முற்றும்  கற்று  கருத்தில்  ஏற்றிக் கொள்வீரேல

         நம்பும்  அழகுக் கவிதை  வந்து  நடமேயாடும்   உம்  மனதில்

     மின்னும்  இனிய  தமிழில்  சிவனின்  மேன்மை  கூறும்  வாசகத்தை

          பொன் போல்  மனதில்  ஏற்றிப்போற்ற  பொலியும்  கவிதை  உம்  வசமே

     கண்ணே  என்று  இறைவன்  தன்னை  கருத்தாய்ப்  போற்றும்  தேவாரம்

          பண்ணே  தெளிந்து  படித்தீரென்றால்  பழகும்  கவிதை  உம்மிடமே



     குறளை மீண்டும்  மீண்டும்  கற்றால்  குதிக்கும்  கவிதை  உம்மிடமே

          அறமே  ஒங்கும்  சிலம்பைக் கற்றால்  ஆடும்  கவிதை  உம்மிடமே

     புறமும்  அகமும்  கற்றால்  போதும்  புதிதாய்ப் பொலியும்  உம்  தமிழே

          திறமும்  தெளிவும்  கொண்டே கவிதை  தினமும்  ஆகும்  உம் வசமே

     அறிவு  என்றல்   அன்பே  என்ற  அருமைக்  குறளைக்  கற்றீரேல்

          உறவு  என்றால்  உயிர்கள் என்று  உணர்ந்தே  நீரும்  வெல்வீரே

     செறிவாய்க் கற்று  நின்றீரென்றால்  செந்தமிழென்றும்  உம்  வசமே

          செப்பும்  செய்தி  அனைத்தும்  கவிதைச்  சீராய்  அமையும்  உம்மிடமே



     பார்க்கும்  வாழ்க்கைப் பாதையெல்லாம்  பதிவாய்  மனத்தில்  கொள்வீரேல்

          ஆர்க்கும்  கவிதை  உள்ளுந்தொறும்  அணியாய் வந்து  பேர் சொலுமே

     வேர்த்தே  உழைக்கும்  மனிதர்  கொள்ளும்  வேதனை அதனைப் பார்த்தீரேல்

          பேர்க்கும்  மனதை  உந்தம்  கவிதை  பிறக்கும்  புரட்சி  உம்மிடமே

     தாய்மைப்  பொறுப்பைக் கொண்டே  வாழும்  தங்க மகளிர்  படும் பாட்டை

          வாய்மை  நிறைந்த  வார்த்தைகளால்  நீர்  வடிக்கும் கவிதை  வென்றிடுமே

     தூய்மை  வாழ்க்கை  கொண்டே  வாழும்   துறவி  போன்ற நல்லவரை

          தொழுதே பாடும்  கவிதை  உம்மை   தூக்கி உயரே வைத்திடுமே



         

       

Thursday, April 24, 2008

தமிழே எந்தன் தமிழே

     தமிழே  எந்தன்   தமிழே  எந்தன்  தமிழே

            எந்தன்  தாயே

     அமிழ்தும்  தோற்று  ஒடும்  உந்தன்

          அறிவுச் சுமையின்   முன்னால்

     உமிழ்  நீர்  ஊறும்  நாவால்     இந்த

          உலகை  வெல்லச்  செய்தாய்

     அமிழ்ந்தேன்  உந்தன்  அன்பில்  என்னை

          அறிவன்  ஆக்கி    வைத்தாய்



     குறளாம்   உந்தன்  குரலால்  என்னைக்

          குறைகள்  இன்றி  வைததாய்

     அறமே  போற்றும்  சிலம்பால்  என்னை

          அழவும்  தொழவும்  வைத்தாய்

     புறமும்  தந்து  அகமும்  தந்து

          புகழும்  சேர  வைத்தாய்

     குறைவேயில்லா  அவ்வை  தந்த

          கொன்றை  வேந்தன்  ஈந்தாய்



     நிறைவாய்  எங்கள்  நெஞ்சில்  நிற்க

          நிமிர்ந்த  நாலடி  தந்தாய்

     உறைவாய்  நல்ல  காதல்  காட்ட

          உயர்ந்த  குறுந்தொகை  தந்தாய்

     சிறை  வாய்ப் பட்ட  திருமறை   யோடு

          சேக்கிழார்  தன்னைத்  தந்தாய்

     கறையேயில்லாக்  கனி  மொழியூற

          காதலி   ஆண்டாள்  தந்தாய்



     அறியேன்  உன்னை  அறிந்தேன் அந்த

          அரிய  வாய்ப்பினை  ஈந்தாய்

     சிறியேன்  உன்னைச் சேர்ந்தேன் இன்று

          சிறப்பாய்  வென்று  நின்றேன்

     வறியேன்  உன்னைக் கேட்பேன் அந்த

          வரத்தை  இன்று   அருள்க

     சிறியேன்  மீண்டும்  பிறந்தால்  உந்தன்

          சீரடி  போற்ற  அருள்க

          

Wednesday, April 23, 2008

அறியேன் அய்யா கவிதை

     ஆகாயம்  தனில்   எங்கும்   எல்லை  கண்டார்

          அலை  கடலில்  நதிகளிலே   எல்லை   கண்டார்

     பூகோளம்  என்றாலே  எல்லைகளால்

          பொலிவதுதான்   என்றிங்கு  படங்கள்  தந்தார்

     ஆகா  இக்காற்றை  மட்டும்   எல்லை  காட்டி

          அடைத்து  வைக்க   மானிடரால்   முடிய்வில்லை

     சாகும்  வரை  மனித  குலம்  வாழ்வதற்காய்

          சத்தியமாய்க்  காத்தவரை  அறியேன்  அய்யா

          

Tuesday, April 22, 2008

சிவ புராணம் வா மீத முலை எறி நூலிலிருந்து

     வைகை  வருத்தம்


     பிட்டுக்கு

     மண் சுமக்க

     பெருமானுக்கு

      வெள்ளம்

     இல்லா

     வைகைக்கு

     வருத்தம்




     வரதட்சணை



     அவிர்ப்பாகத்திற்காய்

     தாட்ச்சாயணி

     குளித்த

                 தீ

     இன்னும்

      எரிகின்றது





     காலன்




     மார்க்கண்டேய்

     அனுபவம்

     அரசு

     மருத்துவ

     மனைகளில்

     காலன்

     வாசம்




     நறுமணம்



     மன்மதனை

     எரித்த

     ஏலாமை

     நக்கீரன்

     எரிப்பில்

     தெளிந்தது



     பட்டபாடு



     சாம்பலானவன்

     படுத்தும்

     பாடே

     தாங்க

     முடியவில்லை


     எரிக்கும்

     முன்னர்

     சிவனின்

     பாடு




     வணிகம்


     வனக்காவலர்

     தொடர்பில்லாததால்

     விறகு

     விற்க

     சிவனால்

     ஏலாது




     கங்கை



     மழை நீர்

     சேகரிப்பில்

     சிவனுக்கே

     முதலிடம்



    நியாயம்

    

     சுடலைச்  சிவனார்

     தந்த

     கங்கையில்

     பிணங்கள்

     மிதப்பது

     நியாயம்தானே



     கூத்தனா    கூத்தியா



     ஆடும்  காலோ

     அம்மையின்

     கால்

     ஊன்றி

     நிற்பதோ

     அப்பனின்

     கால்

     ஆடவர்

     தயவில்

     பெண்மை

     என்பதா

     ஆடிட

     இருவரும்

     தேவை

     என்பதா



     தேர்தல்



     விற்பனை

     முடிந்த

     பிறகே

     நரிகள்

     பரிகள்

     எனத் தெரியும்

     சிவனின்

     விளையாட்டுத்

     தொடர்கின்றது

     வாங்கி

     ஏமாந்ததோ

     மக்கள்




     அடிமை




     காலை

     மாற்றாக்

     காரணம்

     முயலகன்

     மீது

     நம்பிக்கையின்மை


    - சிவபுராணம்   முற்றிற்று

     
     

வா மீத முலை நூலிலிருந்து

     இயேசு வருகின்றார்

           ஆயத்தப்படு

     சிலுவையைக்

           கழுவு

     ஆணிகள்

          தயார்  செய்

     முள்ளில்

          கிரீடம்

     முக்கியம்




     சிலுவையில்

          இயேசு

     இரத்தம்

          வழிய

      

     போப்பாண்டவரோ

          புல்லட்

      புரூபில்

அன்பே வடிவான தமிழருக்கு

    அனைவருக்கும்  எனது  அன்பான வணக்கங்கள்,

     அய்யா  தமிழுக்கு எதிராக  யார்  கருத்துக்களைக் கூறிய  போதும்  உடன்  அதனை
எதிர்த்துக்  கேட்டவன்  நான்  என்பதில்  எனக்கு  என்றும்  மன நிறைவு  உண்டு.
நான்  மிகவும்  போற்றுகின்ற  எனது  உயிரான  அண்ணன்  ஜெயகாந்தன்  தமிழுக்கு
எதிராக  ஒரு  கருத்துச் சொன்னவுடன்  அவரை  எதிர்த்து   பொழச்சுப் போங்க
அண்ணச்சி  என்று  குமுதம்  வார இதழில்  ஒரு  கடிதம்  எழுதினேன்.அதே  போல
இந்தித்  திரைப்படப்பாடலாசிரியர்  சாஹிருக்கு  முன்   கண்ணதாசன்  பட்டுக்
கோட்டையாரெல்லாம்   மிகவும்  தாழ்ந்தவர்கள்  என்று  அப்துல்  ரகுமான்  நக்கீரன்
பத்திரிக்கையின்   மாத இதழான   உதயத்தில்  எழுதிய  போது  தமிழ்நாடு  முழுவ
தும்  அவரை  எதிர்த்துப்  பேசிய  ஒரே  தமிழன்  நான். திரைப்  படத்திற்குப் பாடல்
எழுதுவது  அம்மி  கொத்துகின்ற  வேலை  என்று  அவர்  கூறிய் போது  அவர்
அம்மி  கொத்த  முயன்று  தோற்றவர்   என்ற  உண்மையைத்  தமிழருக்குச்
சொல்லியவன்  நான்.அம்மி  கொத்துவதும்  ஒரு  மிகப்  பெரிய  கலை  .அந்தத்
தொழிலைப்  பழிப்பது எத்தனை  தவறு  என்று  சுட்டிக்காட்டியவன்  நான்.
யாரும்  தமிழைப் பழிப்பவர்கள்  யாரென்று  பார்த்து ப்  பேசுவது  எனது  பழக்கமில்
லை.எப்பொருள்  யார்  யார்  வாய்க் கேட்பினும்    அப்பொருள்  மெய்ப்பொருள்
காண்பதறிவு  என்பது  நமது  தந்தையின்  வழி  காட்டல்.அதுவே என்  வாழ்க்கை
நெறி.நன்றி.வாழ்க  தாமிழுடன்.  தங்கள்   அன்பின்  அடிமை   நெல்லைகண்ணன்

Sunday, April 20, 2008

கட்டாயம் வேணும்

அய்யா நான் எழுதியுள்ள கதைகள் நூறு
அப்படியே உங்களுக்கு அனுப்பியுள்ளேன்
பொய்யாத பொய்யென்று நாவல் ஒன்று
போட்டேன் நான் இவ்வாண்டு அனுப்பியுள்ளேன்
கையாலே செய்து தரும் விருது பல
கழகங்கள் ஊர் ஊராய்ச் செய்து தந்தார்
மெய்யான அரசாங்க விருது ஒன்று
மேலிடத்தில் சொல்லி வாங்கித்தரவே வேண்டும்.

இருப்பேனோ மாட்டேனோ சாவதற்குள்
எப்படியும் அரசாங்க விருது வேண்டும்
உருப்படியாய் எழுதவில்லை என்று சொல்லும்
ஒதவாக்கரைப் பேச்சை ஒதுக்கித்தள்ளும்
படிப்படியாய் விருதளித்த பாங்கை எல்லாம்
பார்த்ததனால் கேட்கின்றேன் தந்து விடும்
கடுப்படிக்க வேண்டாம் அன்னை தமிழ்
கட்டாயம் உமைக் கேள்வி கேக்க மாட்டா!

தடுப்பதற்கு எவன் இருக்கான்? சொன்னாக்கேளும்
தருவதுதான் உமக்கு வழி முன்னே வாரும்!
இடுப்பழகுப் பொண்ணா நான் பொறந்திருந்தா
எப்பமோ தந்திருப்பீர் விருதை எல்லாம்!
உடுக்கடிக்க பயலெல்லாம் வாங்கிப்புட்டான்.
ஒமக்கென்ன கட்டாயம் வேணும் தாரும்!
அடிக்கடியா கேப்பேன் நான் சொன்னாக்கேளும்
அய்யா இந்த வருசம் மட்டும் எனக்குத்தாரும்!

மலைகள் காப்போம்

அவங்கவங்க ஊர் மலையை
அந்தந்த மக்கள்
அப்பனைப்போல் அம்மையைப்போல்
காப்பாத்த வேண்டும்
தவறிக்கொஞ்சம் அசந்திருந்தா
மலை ஒழிஞ்சு போகும்
தடித்தடியாய் கிரானைடா
வெளிநாடு போகும்!
கவலையதைச் சொல்லிப்புட்டேன்
காப்பாத்தலேன்னா
கடவுள் இனி நல்லதுக்குத்
துணைக்கு வர மாட்டார்

ஒத்தக்கடை ஆனை

புதுக்கோட்டைக்கு ஒரு விழாவிற்குச் சென்றபோது, ஒத்தக்கடை ஆனை மலையைப்பார்த்தேன். அதைச்சுற்றியுள்ள மலைகளெல்லாம் எந்தப்பணக்காரர்
வீட்டில் சலவைக்கல்லாக மாறியிருக்கிறதோ? ஒத்தக்கடைக்கும் அந்த நிலைமை வந்துவிடுமோ என்று கவலையில் விளைந்த கவிதை!


ஒத்தக்கடை ஆனைமலை
எத்தனை நாள் இருக்கும்
ஊர்வழியே போகையிலே
பாத்துக்கிட்டே போனேன்
கெத்தான ஆள் யாரும்
கீழ் மேலாய்ப் பணத்தை
கிண்ணாரம் கொட்டியே
அள்ளித் தந்தால்
ஒத்தக்கடை கிரானைட்
ஒலகெங்கும் போகும்
ஊர்மட்டும் பொலிவிழந்து
பொசுக்குன்னு போகும்.

சத்தியமாய் இதையேதும்
சதிகாரர் கூட்டம்
சட்டுன்னு முடிச்சுட்டா
யாரு என்ன பண்ண
பத்திரமா பாத்துக்குங்க
ஒத்தக்கடை மக்கா
பாவிப்பய கூட்டம் அதை
ஒழிச்சிரவே கூடும்.

Saturday, April 19, 2008

எதை எழுத

அன்புள்ள   தோழர்களே.  

வணக்கங்கள்.  சில  நண்பர்கள்  கவிதைகளோடு  தங்கள்  அனுபவங்களையும்
எழுதுங்கள்  என்கின்றார்கள்.எதை  எழுத.தந்தையிடம்  பெற்ற  நல்ல  தமிழறிவு
இருந்தும்   நாற்பதாண்டுக்  காலம்   காந்தியடிகளின்  மீதும்  நேரு பிரான்  மீதும
பெருந்தலைவரின்  மீதும்  அன்னை  இந்திராவின்  மீதும்  கொண்ட  அன்பினால்
தமிழகமெங்கும்   யார்  யாருக்காகவோ  மேடைகளில்  மாதம்  முப்பது  நாட்களும்
பேசித் திரிந்ததையும்   அவர்கள்  பதவிகளில்  அமர்ந்தவுடன்  என்னைப்  பார்த்ததே
இல்லை  போல்  ந்டந்து  கொண்டதும்  .மீண்டும்  தேர்தல்  வந்தவுடன்  என்னைக்
கூப்பிடுவதும்  உடன்  இயக்க  உண்ர்வோடு  நான்  ஒடிப்  போன  ஏமாளித் தனத்தையும்   எழுதுவதா.நாற்பதாண்டு  கால  உழைப்பிற்கு  அவர்கள்  தராத
உயர்வினை  என்  அன்னை  தமிழின்  அன்பர்கள்  உலகம்  முழுவதும்  அரியணை
போட்டு  என்னை  அமர வைத்துப்  போற்றுகின்ற  அன்பினை  எழுதுவதா.

எழுதத்தான்  போகின்றேன்.என்  எதிர்காலத் தலைமுறைக்கு  எல்லாவற்றையும்
சொல்வது  அவர்களுக்கு  பலவற்றில்  தெளிவு  ஏற்படுத்த  உதவுமே.நன்றி.

உங்கள்    நெல்லைகண்ணன்

என்றோ எழுதியது

     நாயொன்று   புலம்பிக்  குரைத்தது  

          நல்ல  நடு நிசித்  தனிமையிலே

     தாயொடு  தந்தையும்  அண்ணனும்

          தம்பியும்  தகைமை சேர்  நண்பர்களும்

     வாயொடு  நெஞ்சின்  தொடர்பின்றி  என்மேல்

          வார்த்திட்ட  பாசங்களை

     காயமாய்க்  காயமாய்க்  காயமாய்க்   காயமாய்க்

          காய்த்திட்ட   நெஞ்சமதில்

     ஒயாமல்  போட்டு  நான்  ஆற்றிட எண்ணிய

          உன்மத்த  நிலை  நினைந்தேன்

     நாயொன்று  புலம்பிக்  குரைத்தது

           நல்ல   நடு நிசித் தனிமையிலே                

     ஒயாது  ஒயாது   ஒயாது   ஒயாது

          ஒயாது   குரைத்ததுவே


   

          

          

பாடம் கற்றேன்

     காதலித்துப்  பார்த்ததனால்   பாடம்    கற்றேன்

          கணணியமாய்  இருந்ததனால்  பாடம்  கற்றேன்

     ஆதரித்துப்  பார்த்ததனால்  பாடம்  கற்றேன்

          அன்பு  செய்து   பார்த்ததனால்  பாடம்  கற்றேன

    பேர் தரித்த  புகழதனால்   பாடம்  கற்றேன்

          பெரியவராய்  நடிப்பவரால்  பாடம்  கற்றேன்

     ஊர் நிறைந்த  நண்பர்களால்   பாடம்   கற்றேன்

          உணமை  சொல்லும்  காரணத்தால்  பாடம்  கற்றேன்



     வார்  குழலார்  துன்பம்  கண்டு  பாடம்  கற்றேன்

          வாய்  திறவா  ஊமையர்  பால்  பாடம்  கற்றேன்

     கூர்  மதியார்  கொடுமைகளால்  பாடம்  கற்றேன்

          கொடுத்ததனால்  அளித்ததனால் பாடம்  கற்றேன்

     யாரிடமும்  அன்பு  செய்து  பாடம்    கற்றேன்

          யாசித்தார்  தம்மிடமும்   பாடம்  கற்றேன

     ஊர்  முழுக்கப்   பாடம்  கற்றும்  என்ன  செய்தேன்

          உள்ளமதில்  நிறுத்தாமல்   மீண்டும்   கற்றேன்

     

     

Friday, April 18, 2008

இன்றைய கவிதை மூடுங்கள்

     காந்தியின்  பிறந்த   நாள்  

            கடைகளை   மூடுங்கள்

     காமராஜ்  பிறந்த  நாள்

          கட்டாயம்  மூடுங்கள்

     வள்ளுவர்  பிறந்த  நாள்

          வ்ழியில்லை   மூடுங்கள்

     வள்ளலார்  பிறந்த  நாள்

          வருத்தம்தான்   மூடுங்கள்


     மகாவீரர்   பிறந்த  நாள்

          மறு படி  மூடுங்கள்

     யுக  வீரர்   பிறந்த  நாள்

          அனைத்திலும்  மூடுங்கள்

     சக    குடி   காரரே

          சட்டுனு   வாருங்கள்

     சரக்கினை   முதல்  நாளே

          வாங்கியே  வையுங்கள்

Thursday, April 17, 2008

வா மீத முலை நூலிலிருந்து

     வாபர்  
     
     அய்யப்பன்

     வழி பாட்டு

     உறவை

     பாபர்

     இராமருக்கும்

     நீட்டித்

     தொலையுங்கள்



     வெண்மணியில  

     எரித்ததற்காகவா

     தாம்பிரபரணியில்

     முக்கி

     எடுத்தீர்கள்



     கிளி

     எடுத்த

     அட்டையில்

     பறக்கும்

     கருடன்

 

 



    

இன்றைய கவிதை மிருகங்கள்

     மிருகங்கள்  என்று மனிதர்கள்  தம்மையே

          மேன்மைப்  படுத்திடும் தவறினை  மாற்றுங்கள்

     அருகியே  வருகுது  மிருக  இனமென்றால்

          அவற்றை ஒழிப்பதும்  மனிதர் தம் கோரங்கள்

     கருவுற்ற  பெண்மையின்  அருகிலே  போகின்ற

          கண்ணியக்  குறைவினை  மிருகங்கள் செய்யாது

     தருகின்ற  கல்வியைப்  பெற வந்த  சிறுமியைத்

          த்ழுவிடும்   குருக்களும்   காட்டினில்  கிடையாது



     சிங்கம்  புலியினைச்  சேரவே  முயலாது

          சிறு நரி  யானையைச்  சீண்டியே  பார்க்காது

     பொங்குமமயில் அழகு  பருந்தினைச்  சேராது

          புலியது  கரடியைப்  புணரவே  முயலாது

     தங்கள்    தொழிலையே  தான்  பார்க்கும் மிருகங்கள்

          தாண்டியே  தமக்குள்ள  விதிகளை  மீறாது

     எங்கே  மனிதர்காள்  இதனை  நீர்  உண்ர்வீரேல

          இனிமேல்  மனிதரை  மிருகமாய்ச்  சொல்வீரோ

        

          

Wednesday, April 16, 2008

காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் நூலிலிருந்து

     போன

     ஜென்மத்துப்

     புண்ணியமாம்

     நீ


     என்

     பாட்டி

     சொல்லுகின்றார்



     உன்

     பிறப்பே

     பூமி

     செய்த

     புண்ணியம்

     என்று

     அறியாமல்




     உன்னைப்

     பார்த்து

     நாணத்தில்

     சாய்ந்த

    தேர

    புறப்படவே

     இல்லை

வாழ்க தமிழுடன் இன்றைய கவிதை

     வணக்கங்கள்  தமிழன்பர் அனைவருக்கும்

          வாழ்க  தமிழுடன்  என்று  வாழ்த்தும்  சொன்னேன்

     இணக்கங்கள்  கொணடவராய்  தமிழர்  வாழ

          இணையதளம்  வழியாயும்  ஆசை கொண்டேன்

     பிணக்குக்கள்  இல்லாராய்   உலகம்  வாழ

          பேசி  நின்ற  இனம்  நந்தம்   தமிழர்  இனம்

     கணக்கு வழக்கின்றி  இன்று  பிரிந்து  நிற்கக்

          காண்கையிலே  மனம்   நிறைய துடிக்குதையா



     சாதி சொல்லி மென்மேலும்  சண்டையிட்டு

          சாத்திரங்கள்  அறியாமல்  துண்டு பட்டு

     வாதித்து  வாதித்து  பேச்சி  ழந்து

          வாசல்  தொறும்  மதம்  பேசி  வம்பு செய்து

     போதித்த  அன்பு வழி  மறநது   விட்டு

          பொல்லாங்கு  தேடுகின்றார்  மாற வேண்டும்

     சாதிக்கப்  பிறந்த  நந்தம்  தமிழரினம்

          சான்றாண்மை  கொண்டு யர்ந்து  நிற்றல்  வேண்டும்

Tuesday, April 15, 2008

எனது செய்தியும் நன்றியும்

     அன்புள்ள  அனைவருக்கும்  
     எனது  அன்பான  வணக்கங்கள்.தினம்  ஒரு  கவிதையோடு  எனது  கவிதை நூற்
களிலிருந்து  ஒரு  கவிதையும்  வெளியிட  விருப்பம் கொண்டுள்ளேன்.இணைய
தளத்தை  இணையற்ற தளமாக்க  ஆக்க  அன்பானவர்களின்  அன்பை வேண்டி
நிற்கின்றேன்.அடுத்த தலைமுறை  தமிழை  மென்மேலும் உயர்த்துவதற்கான்
நல்ல  உதவிகளை  அவர்களுக்கு செய்வது  நமது  தலையாய  கடமை  என்று
உணர்கின்றேன்.வாழ்க தமிழுடன்.நன்றி  அனைவருக்கும்.


த்ங்கள்   நெல்லைகண்ணன்

வடிவுடைக்காந்திமதியே நூலிலிருந்து

உழுபவர் வாழ்க்கையில் அழுகையே என்றுமே

உற்சாகம் கொள்வதென்ன

உழைப்பவர் தங்களால் உயர்ந்தவர் செல்வத் தோ

டுறவுகள் கொள்வதென்ன

அழுகையும் வறுமையும் உழைப்பவர் சொத்தென

அகிலமே வாழ்வதென்ன

அவர்களால் உயர்ந்தவர் சுகத்தின் மேல் சுகங்களை

அடைவதில் நியாயமென்ன

பழுதுடைச் சமுதாய அமைப்புக்கள் தன்னையே

பார்த்துமேன் மெளனம் தாயே

பழமதை மூத்தோனுக் களித்தங்கு இளையோனின்

பழி கொண்ட காந்திமதியே

இன்றைய கவிதை நல்லரசாக்குங்கள்

     நல்லதே  சொல்லி   நல்லதே  சொல்லி

          நாட்டினை   உயர்த்தி   நில்லுங்கள

     சொல்லதால்   நல்ல  சொல்லதால்  நமது

          சுற்றம்  போற்ற  வாழுங்கள்

     கல்வியால்   நல்ல   கல்வியால்   இந்த

          ககனம்   தன்னை    வெல்லுங்கள்

     வல்லமை  என்றால்   நல்லவை  என்று

          வாழ்ந்தே  காட்டி  வெல்லுங்கள்



     உண்மையைச்  சொல்லி   உண்மையைச்  சொல்லி

          உலகின்  முன்னே   செல்லுங்கள்

     நன்மைகள்   விளையும்     நன்மைகள்   விளையும்

          நானிலம்  போற்ற  வாழுங்கள்

     வண்மையே  செய்து   வ்ண்மையே  செய்து

          வாழ்வினில்  மேன்மை   கொள்ளுங்கள்

      வல்லரசு  என்ற  பேரே  வேண்டாம்

          நல்லரசாய்    நாட்டை  ஆக்குங்கள்

                                                         நெல்லைகண்ணன்


    


          

Monday, April 14, 2008

Function at Leaders Matriculation and Higher Secondary School Karaikudi

  காரைக்குடி  பள்ளி விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்  இப்போதுதான்
வந்தேன்.இன்றைய  கவிதை எழுதவில்லை.மன்னிக்கவும். எனது 63  வயதில்
இப்படி ஒரு பள்ளி விழாவை நான்  பார்த்ததில்லை.இன்றைய தமிழ் இளையவர்
மொழியில் சொன்னால்  மிரட்டிட்டாங்க்.இது வரை  என்னுடைய இணைய தளம்
பார்த்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நன்றி.

தங்கள்
நெல்லைகண்ணன்
14-04-2008

Sunday, April 13, 2008

இன்றைய கவிதை திக்கனைத்தும்சடை வீசி நூலிலிருந்து

   பிறை  சூடும்  பெம்மானுக்கு  அடிமையாவீர்

          பேச்சறுத்து  அவன்  தாளைப் பற்றிக் கொள்வீர்

  குறையுடைய  மனக்குரங்கை  கூட்டாக்காதீர்

          கூத்தர் பிரான்  திருக்கழல்கள்  பூட்டீக்  கொள்வீர்

  நிறைவுடைய  அஞ்செழுத்தே  நினைவில்  கொள்வீர்

          நீறணிந்து  அவன்  தாளைப்  போற்றிச் செல்வீர்

  மறைகளெல்லாம்   போற்றுகின்ற்  மணி மிடற்றான்

          மங்கை  யொரு  பாகன்  மதி  கொண்டான்  தன்னை

Saturday, April 12, 2008

இன்றைய கவிதை காவேரி

      பெருகி  வரும்  காவேரியைத்  தடுப்பதற்கு

            பெரியவர்கள்  யர்ருக்கும் வலிமையுண்டோ

      அருகி  வரும் மனிதப்பண்  பற்றவரால்

           ஆகி வரும்  கேடன்றோ  இவைக ளெல்லாம்

     உருகி நின்று  மொழி  பேசும்  மனிதர்களே

           உயிர்  வாழ்க்கை  எத்தனை  நாள் உணர்வீரோ  நீர்

     பருகி நிற்கும்  நீர்  இங்கே இயற்கை  அன்னை

           பரிந்தளித்த  கொடையன்றோ  அறியீரோ நீர்


     மொழி  தேர்ந்தும்  மதம்   தேர்ந்தும்  நாடு தேர்ந்தும்

           முறையாக  வந்தா  நீர்   பிறந்தீர்  இங்கு

     பழி    தேடிக  கொள்கின்றீர்   மனிதரென்றால்

           ப்ண்போடு  வாழ்தல்  என்று  மறந்தே போனீர்

     கழி  பேருவகை  யொடு   கன்னடத்தான்  

          கனித்தமிழான்  என்றெல்லாம்  ஆடுகின்றீர்

     வழி  உண்டு  அன்போடு  வாழுதற்கு

          வாழுங்கள்  இல்லையென்றால் ஒழிந்தே  போவீர்

Friday, April 11, 2008

இன்றைய கவிதை மெளனம் காத்தனர்

     ஆழிப் பேரலையும்
     ஆடிய  நிலமும்

     அனைவரும்
     ஒன்றென

     உணர்த்தவே
     அழித்தன

     எரிக்கப் பட
     வேண்டியவர்கள்

     புதைக்கப்
     பட்டார்கள்

     புதைக்கப் பட
     வேண்டியவர்கள்

     எரிக்கப்
     பட்டார்கள்

     கடவுளை
     அன்றே
     உணர்ந்ததனாலே

     மதவாதிகள்
     மெளனம்
     காத்தனர்

Thursday, April 10, 2008

அம்மா சொன்னாள்

   
    ஏலெ  
    ஏய்
    எழவெடுத்த பயலே
   இருக்கதெ
   தின்னுட்டு
   எங்கயும்  போய்த்
   தொலை

   வேல கெடைக்கட்டும்
   கெடக்காம
   ஒழியட்டும்

   வெவரங்கள்
   பல
   இருக்கு
   ஊரெல்லாம்
   அறியட்டும்
  
   சாலையிலே
   நின்னு
   நம்ம
   
  சரித்திரத்தை
  சொல்லியழு
  மேல  வீட்டுப்
  பெருமையையும்
  மேக்க
  வித்த
  வயக்காடும்

  நானூறு
  பவுன்
  ந்கையும்

  நாசமாப்
  போன  கதை!

  என்னிக்கு
  நெனச்சீக
  
  இருக்கதெல்லாம்
  வித்தொழிச்சும்
  
  பண்ணையார்
  குடும்பமுண்ணு

   பவுசு  என்ன
  வெக்கமில்ல

வா மீத முலை எறி நூலிலிருந்து..

           


       பழனியாண்டி

       உழைப்பவர்
       தமக்கு
       கோவணம்
       மொட்டை
       
       உறுதி
       என்று
     
       உணர்த்திய
       முதல்
       உழைப்பாளி!

வா மீத முலை எறி நூலிலிருந்து

அவிர்ப்பாகதிற்காய்
தாட்சாயணீ
எரிந்த
தீ
இன்னும்
எரிகின்றது

___________________________


 காதலிக்கானாம்வே
கல்யாணம்
வேண்டாங்கான்

நாமள்ளாம்
காதலிக்கலயோ

கொடிகள்

கொள்கைகள்
இறந்ததை
அறியாக்
கொடிகள்

தலைவர்கள்
இறந்த்தும்
தாழப
ப்றந்தன

கொடிகள்

கொள்கைகள் இறந்ததை
அறியாக் கொடிகள்
தலைவர்கள்
இறந்ததும்
தாழப் பறந்தன


தலைவர்கள்
பார்க்க
மறந்த
விளம்பரம்
இழந்த
ஆண்மையை
மீண்டும்
பெறுவீர்

வாய்க்கரிசி

காட்டையும் மேட்டையும் கட்டிடமாக்குங்க!
ஆடோடு் மாடும் சுவரொட்டி திங்கட்டும்.

குளத்தோடு ஏரியை குடியிருப்பு ஆக்குங்க
கொககோடு் நாரையும் கூண்டொடு ஒழியட்டும்!

வயக்காட்டையெல்லாம் வாழ்விடமாக்குங்க!
வாய்க்கரிசிக்கென்ன அமெரிக்கா போடுவான்.

Tuesday, April 8, 2008

காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் - 2

உன்
கண்கள்
மீன்கள்
மட்டுமா?
கொக்குகளும்தான்.

*

தேனெடுத்த
பின்
மலர்கள்
வாடி
விடுமாம்.

உன்னைப்
பார்க்காமல்
உளறியிருக்கின்றார்கள்.

*
நகம்வெட்டி
அழுது
கொண்டிருந்தது.
உனக்கு
நாள்தோறும்
நகங்கள்
வளரவில்லையே
என்று.

*
தானியங்கி
பணம்
வழங்கும்
இயந்திரத்தின்
முன்
போகாதே

அட்டையே
இல்லாமல்
அத்தனை
பணத்தையும்
கொட்டிவிடப்
போகின்றது.

*

உன்னை
இறக்கி
விட்ட
இரயில்
பெருமூச்சோடுதான்
கிளம்பியது.

*

காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் !

எனது


'காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள்'


நூலிலிருந்து சில கவிதைகள்..

நீ
கோலம்
போட
வருவதைப்
பார்க்கவே
சூரியன்
வருகின்றான்

இவர்கள்
அதைக்
காலை
என்கின்றார்கள்

இன்னொரு
முறை
பார்த்தால்தான்
மறைவேன்
என்கின்றான்

அதை
மாலை
என்கின்றார்கள்.

*

தேசிய
அழகி
என்று
உன்னை
அறிவிக்க
முடிவு
எடுத்திருந்தார்களாம்

தாமரையும்
மயிலும்
தகராறு
செய்திருக்கின்றன.

*

விருது

விருதுகள் அனைத்தும்

அவரே வாங்கினார்

மரணம் மட்டும்

தானே வந்தது

நான்...நெல்லை கண்ணன்

தந்தை - ந.சு. சுப்பையாபிள்ளை

தாய் - முத்துஇலக்குமி அம்மாள்

ஜனவரி 27 ,1945ல் பிறந்தேன்.

எட்டுப்பேர் உடன் பிறந்தோர்.

ஒரு வருடம் தந்தையின் அன்பிற்காக கல்லூரி சென்றேன்.
அடிப்படை தொழில் வேளாண்மையாகக்கொண்ட குடும்பம்.
என் துணைவி வேலம்மாளை 1969, செப்டம்பர் 7ல் கரம்பிடித்தேன்.

1997 பிப்ரவரி 23ல் அவர்கள் புற்றுநோயால் மறைந்தார்கள்.
இரு மகன்கள் -முதல் மகன் , திரைத்துறையில் இணை இயக்குநராகவும், இரண்டாம் மகன் பண்பலை வானொலியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளனர்.

முதல் மருமகள் வங்கிப்பணியாளராகவும், இரண்டாமவர் ஆசிரியராகவும் உள்ளனர்.

இரண்டு பேரன்கள். ஒரு பேத்தி.

இரண்டாம் மனைவி தெய்வநாயகி

தமிழறிவு, தந்தை தந்தது. தந்தையாரின் மிகப்பெரிய நூலகம், தந்தையார்
பள்ளியே செல்லாதவர், தமிழறிஞர்கள் பலர் அவர்களிடம் பாடம் கேட்டவர்கள்.