Sunday, March 28, 2010

ஹான்ஸ் ரோவர் கலைக் கல்லூரி உரை நிகழ்த்துகின்றேன்

ஹான்ஸ் ரோவர் கலைக் கல்லூரி


மாணவியர்

ஹான்ஸ் ரோவர் கலைக் கல்லூரி


முனைவர் வரதராஜன் உரை நிகழ்த்துகின்றார்

ஹான்ஸ் ரோவர் கலைக் கல்லூரி


திரைப் பட இயக்குநர் கண்ணன்(பழைய கல்லூரி மாணவர்) முதல்வர்

ஹான்ஸ் ரோவர் கலைக் கல்லூரி


முனைவர் வரதராஜன் நினைவுப் பரிசு வழங்குகின்றார்

ஹான்ஸ் ரோவர் கலைக் கல்லூரி


தாளாளர் முனைவர் வரதராஜன் பொன்னாடை போர்த்துகின்றார்

ஹான்ஸ் ரோவர் கலைக் கல்லூரி மாணவர்கள்

ஹான்ஸ் ரோவர் கலைக் கல்லூரி மாணவர்கள்

ஹான்ஸ் ரோவர் கலைக் கல்லூரி மாணவியர்

ஹான்ஸ் ரோவர் கலைக் கல்லூரி


சுவைக்கின்ற மாணவியர்

Saturday, March 27, 2010

ஹான்ஸ் ரோவர் கல்லூரி வெள்ளி விழா


கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் செயலர் அஷோக் நான் தாளாளர் முனைவர் வரதராஜன் திருமத் வரதராஜன் துணை முதல்வர்

ஹென்ஸ் கலைக் கல்லூரி வெள்ளி விழா


தாளாளர் முனைவர் வரதராஜன் தனி அறையில் அவர்கள் துணைவியாரோடும் மகனோடும்

ஹான்ஸ் ரோவர் கல்லூரி வெள்ளி விழா


துணைத் தலைவர் அஷோக் வரவேற்கின்றார் அருகில் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் துணை முதல்வர்

Friday, March 26, 2010

அங்கொரு சாமியார்

அங்கொரு சாமியார் இங்கொரு சாமியார்
ஆட்டங்கள் பாட்டங்கள் கூத்துக்கள் ஆயிரம்
பொங்கிய சோத்தைத்தான் எல்லாரும் திங்கிறார்
போதாக்குறைக்கு பால் பழங்களும் நொங்கிறார்
சங்கிலியாய் இந்த வேலைகள் தொடருது
சரியில்லா ஆட்களே இவர்களை வணங்குறார்
எங்கேயும் இவர்களை எதிர்த்து நின்றால் தான்
இறைவனும் நம்மையே ஏற்று நிற்பார் காண்

அவர்களும் இவர்களும் ஒன்றன்றோ

இயல்பான வாழ்க்கையா இல்லறம் என்றுதான்
என்றைக்கோ வள்ளுவர் சொல்லித்தான் சென்றாரே
அயல் நாட்டார் பணங்களை அள்ளியே வாழ்ந்திட
ஆன்மீக வழி என்று ஆட்டங்கள் போடுறார்
தயங்காமல் இவர்களைத் தண்டிக்க வேண்டுமே
தறுதலைத் தலைவர்கள் செய்வாரோ மாட்டாரோ
கயமையில் அவர்களும் இவர்களும் ஒன்றன்றோ
காப்பாற்ற வேண்டும் நம் கடவுளே நம்மையே

எனது இரண்டாவது பெயரன்

துறவிகட்கோர் யோசனை

மண வாழ்க்கை மணமாக வாழ்ந்தவர் மட்டுமே
மடத்திலே ஜீயராய் பொறுப்பிலே அமருவார்
மண வாழ்க்கை கொண்டிட்ட ப்ராட்டெஸ்டெண்ட் பாதிரி
மக்களின் மத்தியில் உயர்வாக வாழுறார்
தனி வாழ்க்கைத் துறவிகள் தடுமாற்றம் காணுவார்
தவறல்ல உடலது இறைவனின் படைப்பன்றோ
இனியிவர் தம் நிலை மாற்றியே கொண்டிட்டால்
இறைவனும் மக்களும் நிம்மதி கொள்ளுவர்

வேலூர் ஜெயிலிலே

பேசவும் கூடுது பெருங் கூட்டம் கூடுது
பிறகென்ன நீங்களும் சாமியாராகலாம்
வாசனைத் திரவியம் அத்தர் ஜவ்வாதெல்லாம்
வாங்கியே தந்திட நாங்களும் இருக்கோம்ல்லா
யோசனை பண்ணாம சரிடான்னு சொல்லிட்டா
யோகம் தான் நாங்களும் வாழுவோம் கொஞ்ச நா(ள்)
தாசரா நாங்களும் கூடவே இருப்போமே
தயங்காமச் சொல்லுங்க என்னங்க அண்ணாச்சி


கண்ணானந்தா என்றுங்க பெயரையும் மாத்தலாம்
கருவறைத் திருவறைக் கழிவறை கட்டலாம்
பெண்ணார்கள் வந்தாலோ சோதிச்சே அனுப்புவோம்
பிறகென்ன அதுக்குத்தான் அடியவர் வேஷமே
சொன்னாத்தான் கேளுங்க கேளுங்க அண்ணாச்சி
சொர்க்கத்தை மண்ணிலே காணலாம் அண்ணாச்சி
விண்ணானம் பேசாம சரின்னு தான் சொல்லுங்க
வேலூர் ஜெயிலிலே வேண்டிய ஆளுண்டு

பொறுக்கல பெருமாளே (கல்கி)

போலியாய் மருத்துவர் போலியாய் மருந்துகள்
பொக்கை வாய்க் கிழவராம் காந்தியின் நாட்டிலே
காலிகள் எல்லோரும் தலைவர்கள் ஆனாரே
கண்ணியம் மிக்கதோர் கக்கனின் நாட்டிலே
ஆலிலைக் கண்ணனும் கல்கியாய் வந்திங்கு
அழிப்பான் இவர்களை என்று நாம் நம்பினால்
போலியாய் மனிதரே கல்கியே தானென்று
போதையில் ஆடுறார் பொறுக்கல பெருமாளே

சுப்புடு என்றொரு பேரறிஞன்

சுப்புடு என்றொரு மா அறிஞன்
சுத்த இசை அறிப் பேரறிஞன்
எப்படிப் பட்டவர் யாரெனினும்
இசையில் இழுக்கெனில் சாடிடுவான்
அப்படிப் பட்டவன் புகழ்ந்து நின்றான்
அருமை இசை மதுரைச் சோமுதனை
மெய்ப்பட இசையின் ஞானி தன்னை
மேதை அவன் தனை போற்றிடுவோம்

Thursday, March 25, 2010

ஒழிப்பார் யாரோ

போலியான மருந்துகளை விற்போர் தம்மை
பொறுப்பிலுள்ள பெரியவர்கள் கண்டு விட்டார்
நாளிதழ்கள் தோறும் பெருஞ் செய்தியிது
நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றார்
காலிகளும் கூலிகளும் கொண்டு இங்கு
கண்ணியமே இல்லாமல் மிரட்டும் அந்தப்
போலிகளை மட்டும் மிகப் பெரும் பொறுப்பில்
போற்றி வைக்கும் கொடுமையினை ஒழிப்பார் யாரோ

Wednesday, March 24, 2010

பெரியவர் தி.க.சி. அவர்களின் நன்றி மடலுக்குப் பதில்

புதியவர்கள் புறப்பட்டார் என்ற போதே
போற்றுகின்ற பாங்கு உங்கள் சிறந்த பாங்கு
தெரிந்தவர்கள் தெரியாதார் என்று இல்லை
தீந்தமிழர் என்றாலே போதும் போதும்
முதியவரே மிகச் சிறந்த முத்தமிழில்
முயல்வார்கள் அனைவருக்கும் நீங்கள் தந்தை
கதியாகச் சில பேரே தமிழில் உள்ளார் அந்தக்
கணக்கெடுப்பில் என்றைக்கும் முதல்வர் தாங்கள்


எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணம்
எத்தனை பேர் கொண்டுள்ளார் இந்த நாட்டில்
வல்லார்கள் தனை மட்டும் வாழ்த்தி வாழ்த்தி
வகை தொகையாய் வாழ்கின்றார் சில பேர் இங்கு
நல்லோரே நான் அறிய நீங்கள் மட்டும்
நலம் விரும்பியாய் உள்ளீர் அனைவருக்கும்
சொல்லாமல் விட்டால் நான் துரோகியாவேன்
சுந்தரத்துத் தமிழன்னை சொல்லச் சொன்னேன்

மக்களையே ஏய்ப்பதிலே

வெட்கமில்லை என்று சொன்னார் புதுச்சேரியார்
வீழ்ந்து பட்ட பெண்ணினத்தைக் காப்பதற்காய்
வெட்கமில்லை என்றே இங்கு நாமும் சொன்னோம்
வீழ்ந்தொழியும் மக்களாட்சித் தேர்தல் தன்னை
தக்க வைத்துக் கொள்ள மட்டும் முயல்கின்றார் காண்
தரமின்றிச் சேர்த்த கோடி தனையே நம்பி
மக்களையே ஏய்ப்பதிலே இவருக் கிணை
மாநிலத்தில் எங்கேனும் உண்டோ சொல்வீர்

ஏழைக்காய் வாழ்ந்தார்கள்

ஏழைகளின் உழைப்பதனை வியர்வைதன்னை
ஏய்த்து மதுக் கடைகள் வழி பிடுங்கி விட்டு
கோழைகளாய் அவர்கள் வீட்டுப் பெண்களிடம்
கொடுக்கின்றார் இலவசங்கள் நாணம் விட்டு
நாளைய நம் தலைமுறைக்காய்த் திட்டம் தீட்டி
நலங்கள் பல விளைத்திட்ட தலைவரெல்லாம்
ஏழையெனப் பிறந்தார்கள் இறுதி வரை
ஏழைக்காய் வாழ்ந்தார்கள் ஏழையென

மானமுள்ள எழுத்தாளர்

மாணிக்சந்த் குட்கா தன் மயக்கும் பாக்கை
மனம் போன படி இங்கே விற்றுச் சேர்த்த
கோணிப் பைக் கோடிகளில் சில லட்சத்தை
கொடுத்துள்ளார் மராட்டியத்தில் எழுத்தாளர்க்கு
நாணிப் போய் எழுத்தாளர் சுட்டிக் காட்ட
நல்லவர்கள் அப்பணத்தை திருப்பி விட்டார்
மானமுள்ள எழுத்தாளர் மராட்டியத்தில்
மார் தட்டி நிற்கின்றார் மகிழ்ந்தே போனேன்

Tuesday, March 23, 2010

மரணம் மேலே

அனுசரித்துப் போகச் சொல்லி நண்பர் பலர்
அறிவுரைகள் சொல்லுகின்றார் அவ்வாறென்றால்
கணிசமாகப் பணம் கிடைக்கும் பதவி கூடக்
கட்டாயம் நமைத் தேடி வீடு வரும்
அணி அணியாய்க் கூட்டமெல்லாம் பேசிடலாம்
அய்யா அய்யா என்றே சுற்றி வருவார்
கணிதம் இதைக் கூறுகின்றார் நானும் சொன்னேன்
கண்ணியத்தை இழத்தல் விட மரணம் மேலே

நியாயம் காப்பீர்

சிவனவனோ பாதியினைத் தந்துயர்ந்தான்
திருமால் தன் மார்பினிலே இடமளித்தான்
நவம் நவமாய் நல்ல சொல் சொல்லுதற்கு
நாவினிலே கலைமகளை பிரம்மன் வைத்தான்
தவம் போல இதையெல்லாம் சொல்லி நிற்பீர்
தர மாட்டீர் சரி பாதி பெண்களுக்கு
அவமானம் இது என்று உணரா நீவீர்
அரசியலில் எவ்வாறு நியாயம் காப்பீர்

பகத்சிங் ராஜகுரு சுகதேவ்

பகத்சிங் ராஜகுரு சுகதேவ் உயிர் ஈந்த நாள் 23-03-2010

பகத்சிங் ராஜகுரு சுகதேவ் என்னும்
பாரதத்தாய் ஈன்றெடுத்த தவப் புதல்வர்
தகதகத்த முகத்தோடு தூக்குமேடை
தனில் உயிரைத் துறந்த நாள் இந்த நாளே
எவர் நினைத்தார் அவரையெல்லாம் நாட்டிற்காக
இன்னுயிரைத் தந்து நின்ற வீரர் தன்னை
தவ வேடச் சாமியாரின் லீலைகளைத்
தருவதிலே வேகம் கொண்டார் இவர் ம்றந்தார்

எங்கு சென்றீர்

தனி நபர் அறைக்குள்ளே படமதைப் பிடித்தது
தவறென்று சொல்கின்றார் படித்த சில்லோர்
மனிதரை ஏமாற்றி மதமதைத் தேராக்கி
மனம் போல வாழ்ந்தாரை என்ன செய்ய
தனி நபரில்லையே சமுதாயத் தொல்லையே
தவ வேடம் பூண்ட அக் கேடு கெட்டார்
வழி இன்றி உடல் விற்கும் வறுமையின் பெண்களின்
வண்ணப் படம் வருகையில் எங்கு சென்றீர்

சாமி மரம் மிருகம்

சாமிக்கு ஒரு மரம் மிருகம் என் றன்னிக்கே
சரியாக வைத்திருந்தார் நமது முன்னோர்
பூமிக்கு அது எல்லாம் தேவை என் றவர்களும்
பொறுப்பாக உணர்ந்ததால் செய்து வைத்தார்
நாமிங்கே அதையெல்லாம் மூடத்தனம் என்று
நாவாலே அடித்தடித் தொழித்துவிட்டோம்
பூமியைக் காப்பாத்த அதுவெல்லாம் வேணும்ன்னு
புலம்புறோம் இன்னிக்கு அனைவருமே

Monday, March 22, 2010

ஒசந்த ஜாதி

அவனுக்கும் எனக்கும் சோத்துக்கு வழி இல்லை
ஆனாலும் நான் கொஞ்சம் ஒசந்த ஜாதி
அவனுக்கும் எனக்கும் கோயிலுக்குள் இடமில்லை
ஆனாலும் நான் கொஞ்சம் ஒசந்த ஜாதி
கவலைகள் அதிகம் அவனுக்கும் எனக்கும்
கண்டிப்பா நான் தான் ஒசந்த ஜாதி
தவறுகள் இருவரும் ஒண்ணாவே செஞ்சாலும்
தண்டிப்பேன் ஏன் நான் ஒசந்த ஜாதி

செல்வநாயகி என்றோர் பெண்ணார்

செல்வ நாயகி என்றோர் பெண்ணார்
சிறப்பாய்த் தமிழில் எழுதுகின்றார்
வல்லமை கொண்ட நல்லெழுத்து அவர்
வடிக்கும் யாவும் மெய்யெழுத்து
உள்ளத்துள்ளது எழுத்தாய் மாறும்
உயர்வு அதிலே தெரிகிறது
உயர உயர அவரின் எழுத்தால்
உண்மைத் தமிழும் உயர்கிறது

இரண்டரை மணிநேர உரை அருகில் விஜயமோகன்

அறிவார்ந்த மாணவ மாணவியர்

பரிசளிக்கின்றேன்

பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி ஆண்டு விழா


என்னோடு கல்லூரி நிர்வாகிகள் தலைவர் திரு வெங்கடேஷ் துணைத் தலைவர் திரு விஜய மோகன் செயலர் சேதுபதி திரு சேட்டு கல்லூரி முதல்வர் குழந்தைசாமி

சுப்பு ஆறுமுகம்

வில்லிசையை அழியாமல் இன்றும் காக்கும்
வீரர் இவர் எம் அண்ணன் நெல்லை யூரார்
சொல்லிசைப்பில் இவரைப் போல் தமிழில் வல்லார்
சொல்லி விட ஒன்றிரண்டு பேரே உள்ளார்
நல்லிசையாய் வில்லிசையை இவரே பல
நாடுகளில் தந்துள்ளார் காந்தி என்னும்
மெல்லிசையை நல்லிசையை வில்லிசையில்
மேன்மை பெறத் தந்த சுப்பு ஆறுமுகம்

அருணா சாய்ராம் வாழ்க

சோமுவைப் போல் உறரிதாஸ் கிரி ஸ்வாமியைப் போல்
சொக்க வைக்கும் இசையதனைத் தருவதற்கு
நாமறிய யார் உள்ளார் என்று நாமும்
நாயகனாம் நம்மிறையை வேண்டி நின்றோம்
தாமளித்த அக்கொடையை இறைவன் காட்ட
தாளமிட்டு நாம் மகிழ்ந்தோம் அருணா சாய்ராம்
பூ மணக்கும் இசைக்கவரே சொந்தம் இந்தப்
பூமியெல்லாம் அவர் இசைக்குச் சொந்தம் வாழ்க

விருது உண்டு

விருதுகளை வாங்குதற்குச் சுலபமான
வினை வழிகள் சொல்லித் தர விழைகின்றேன் நான்
கருத்தின்றி எழுதுங்கள் ஒன்றுமில்லை
கவிதைகளோ கட்டுரையோ வருத்தம் வேண்டாம்
பருத்தி கொட்டைப் புண்ணாக்கு தயார் செய்யுங்கள்
பக்குவமாய் அதைத் திங்க உள்ளார் சிலர்
எருதுகளாம் அவைகளுக்கு அதை நிறைய
எப்போது கொடுத்தாலும் விருது உண்டு

எங்கள் தி. க.சி.தான்


பெரியவர் தி.க.சி. அவர்களின் 86 வது பிறந்த நாளில் எனது பிள்ளை பாமணி நேரில் சென்று வாசித்தளித்த நான் எழுதிய வாழ்த்துப் பா. பெரிதாக்கிப் படிக்கவும்

Friday, March 19, 2010

வழி கேட்டுப் போன தீயோர்

வாழ்க்கையை அதன் போக்கினிலே வாழுகின்ற
வழி கண்டு வாழ்ந்தாலே வெற்றி உண்டு
யாக்கை அதன் நிலையாமை அறியாராகி
யாரிடத்தோ சென்று அவர் தமை வணங்கி
போக்க வொண்ணா ஆசைகளைக் கொள்ள எண்ணி
புரியாராய் அவர்களையே துறவியாக்கி
தாக்குகின்றார் இன்று அவர் பொய்யரென்று
தறி கெட்டு வழி கெட்டுப் போன தீயோர்

விளம்பரங்கள்

உரை கேட்கும் மாணவர்கள்

தாளாளர் பரிசு தருகின்றார்

குத்து விளக்கேற்றுதல்

திரு வரதராஜன் திரு அசோக் அவர்களோடு


முதல்வர் சாமிநாதன் அவர்களும் உடன் உள்ளார் 17-03-2010

தாளாளர் முனைவர் கே.வரதராஜன் அவர்களோடு


ஹேன்ஸ் கலை அறிவியற் கல்லூரி வெள்ளி விழா பெரம்பலூர்

Tuesday, March 16, 2010

திருந்துதற்கு ஏதுவாகும்

பல்கலையில் படித்தோரே படித்ததனால்
பாங்காகப் பதவிகளில் அமர்ந்துள்ளோரே
கல்வி வழி நீங்கள் கற்ற நேர்மையினைக்
கடைப் பிடிக்கத் தொடங்குங்கள் தொடங்கினால் தான்
நல்லவழி நாட்டிற்குத் தெரியலாகும்
நலிந்தோர்கள் வாழ்வதற்கு உதவியாகும்
பொல்லாத அரசியலார் தனை எதிர்த்துப்
போர் தொடுங்கள் படித்தவர்கள் அனைவருமே


எல்லோரும் ஒன்றாகித் தீமைகளை
எதிர்ப்பீர்கள் என்று சொன்னால் பிறகு என்ன
நல்லதெல்லாம் நடக்கும் இங்கே நீங்களே நல்
நாயகர்கள் ஆவீர் இந் நாடு வாழும்
பொல்லாத தீங்கெல்லாம் ஒழிந்து போகும்
பூமியிலே நம் நாடே உயர்ந்ததாகும்
வல்லார்கள் அரசியலை வன்முறையாய்
வகுத்தார்கள் திருந்துதற்கும் ஏதுவாகும்

ஒழித்து அருளவில்லை

எல்லாமே எழுதி நின்றேன் இருந்த போதும்
ஏக்கந்தான் மிஞ்சியது எனக்கு இங்கு
பொல்லார்கள் வாழுகின்றார் மிகப் பெரிய
பொறுப்புக்கள் தம் வசத்தில் கொண்டாராகி
நல்லார்கள் வாழுகின்றார் வாய் திறக்க
நாணமுற்று நாணமுற்று நாட்டைக் கண்டு
எல்லாம் உணர்ந்த அந்த இறைவன் மட்டும்
ஏன் இன்னும் இவர் ஒழித்து அருளவில்லை

Monday, March 15, 2010

தாய் தந்தை வணங்கிடுவீர்

தாய் தந்தை வணக்கத்தை மறந்தாராகி
தடித் தடியாய் சாமியார்கள் வணங்கி நிற்பார்
போய் அவர்க்குப் பணிவிடைகள் பாத பூஜை
பொற் காசு பணக் குவியல் எல்லாம் சேர்ப்பார்
தோய்ந்த சுக விளையாட்டில் சாமியாரும்
தோதாகித் தோகையினைச் சேர்தல் கண்டால்
ஆய் என்று அலறுகின்றார் அந்தோ பாவம்
அன்னை தந்தை தெய்வத்தை வணங்கி நிற்பீர்

அக மகிழ்ந்தார்

ஊனமுற்றோர் உடலாலே என்ற போதும்
உள்ளத்தால் உயர்ந்தவராய் ஒழுகி நின்றார்
ஊனமுற்றோர் மனதாலே அவர்களெல்லாம்
உயர் பதவி தனில் அமர்ந்து ஊர் கெடுத்தார்
ஞானமற்றோர் அதனாலே நாட்டினிலே
நலங் கெடுக்கும் அனைத்தையுமே தினமும் செய்தார்
ஆன மட்டும் தான் ஒருவன் பெரியன் என்று
அனைவரையும் சொல்ல வைத்து அக மகிழ்ந்தார்

Friday, March 12, 2010

குறளும் கருத்தும் காதல் 2

காதல் என்னவெல்லாம் செய்யும். எல்லாம் செய்யும்.ஆமாம். அது எதை வேண்டுமானாலும்
செய்யும்.

காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி தோழிகளோடு உரையாடிக் கொண்டிருக்கின்றாள். அனைவரும் மகிழ்வோடு அவரவர்அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் காதலர் குறித்தும் காதலனோடு தாங்கள் கொண்ட ஊடல் கூடல் குறித்தும் கலந்துரையாடுகின்றனர்.

ஒருத்தி சொன்னாள்.மெல்ல மெல்லத்தான் தொடுவான். ஆனால் அதிலேயே எனது மேனி மிக மிக வேகமாகக் குதிக்கத்தொடங்கும் என்று.

மற்றொருத்தி சொன்னாள். தொடவே மாட்டான். அந்தப் பார்வையிலேயே துவண்டு அவன் மார்பில் நானே போய்ச் சாய்ந்து கொள்வேன் என்றாள்.

இன்னொருத்தியோ ஒற்றை விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாவி படுத்தும் பாடு மொத்த மேனியும் அவனிடத்தில் தஞ்சம் அடைந்தால்தான் உயிர் பிழைக்கும் என்றாள்.

திரும்பி நின்று கொள்வேன். கட்டித் தழுவுவான் என்று நிற்பேன். அவனோ செவி மடல்களில் அவனது மூச்சுக் காற்றைப்படச் செய்வான். நானாகவே பின்னால் சாய்ந்து விடுவேன் என்றாள்.

இதெல்லாம் என்ன என்னவனின் வேகம் யாருக்கு வரும் என்றாள் ஒருத்தி.

வேகமா அத்தனை வேகமா என்றார்கள் அனைவரும்.

எடுத்தவுடன் வேகமென்றால் இனிக்காதே அது என்றாள் ஒருத்தி

இல்லை கூடி மகிழ்ந்து மகிழ்வின் உச்சத்தில் எனது மூங்கில் தோள்களில் சாய்ந்து கொள்வான். அவன் தலையைக்கோதிக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த வேகம் வேறு யாருக்கும் வராது என்றாள்.


ஏக்கத்தோடு மற்ற பெண்கள் கேட்டார்கள் சொல்லேன் சொல்லேன் அந்த வேகத்தைத் தான் சொல்லேன் என்று.

சொல்கின்றேன் பொறுங்கள் பொறுங்கள் என்றாள். பெருமை பொங்க.

தோளிலே தானே சாய்ந்திருப்பான். ஆனால் நான் கண் விழித்தேன் என்றால் அத்தனை விரைவாக எனது நெஞ்சுக்குள்போய் அமர்ந்து கொள்வான். ஆமாம் ஆமாம். விரைவு விரைவு அத்தனை விரைவு.

கண் விழித்தாலா. தோழிமார்கள்.

ஆமாம் கண் மூடித் துயில்கையில் தானே அவன் கனவில் வந்து களித்து எனது தோளிலும் சாய்ந்து கொள்வான்.அப்படித் தோளில் சாய்ந்திருப்பவன் நான் கண் விழிக்கும் கணப் பொழுதில் நெஞ்சுக்குள் போய் விடுவான். அந்த வேகம் யாருக்கு
வரும் சொல்லுங்கள் என்றாள்.

சிரித்துக் களித்தார்கள் தோழியர்.

குறள்

துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தராவர் விரைந்து

Thursday, March 11, 2010

வேடத்தை விட்டால் போச்சு

சாமிக்குச் சேவை செய்தேன் தவறா என்று
சரியாகக் கேட்கின்றார் நடிகை இங்கு
பூமிக்கு வந்து விட்ட மனித குலம்
புரியாத எதை அவரும் புரிந்து விட்டார்
காண்பிக்கக் கண்டீர்கள் இல்லையென் றால்
காமத்தை இவ்வாறு பழி சொல்வீரோ
பூண்கின்ற வேடத்தால் தவறு என்றீர்
போகட்டும் வேடத்தை விட்டால் போச்சு

ஆசிரமம் கண்ட வழி

ஆ சிரமம் என்று ஒடி அலுத்தவர்கள்
ஆசிரமம் அமைவதற்கு வழிகள் செய்தார்
போய்ச் சிரமம் தீர்ப்பதற்கு சுவாமிகளை
புகழ்ந்து அவர் கால்களிலே வீழ்ந்து நின்றார்
தன் சிரமம் சாமிக்குத் தான் தெரிய
தழுவலுக்கும் குலவலுக்கும் மங்கை கொண்டார்
என் செய்ய சாமியும் ஒரு இளைஞர் என்ற
இனிய செய்தி ஊடகத்தின் வழியே கண்டார்

ஒழிந்தோம் நாமே

கலைகளினைக் காப்பதிலும் கோயில்களின்
கண்ணியத்தைக் காப்பதிலும் தம் பெருமை
நிலைகளினைக் காப்பதிலும் கேரளத்தார்
நிமிர்ந்து நிற்றல் பார்க்கின்றேன் நடிகரெல்லாம்
விலை மதிப்பேயில்லாத வேட்டியில் தான்
வெளியினிலே வருகின்றார் எழுதுவோரோ
நிலை குலைவதில்லை எந்த நிலையிலுமே
நிமிர்ந்து நின்று விருதுகளை மறுக்கின்றார் காண்


உலகினிலே முதல் மொழியாம் தமிழ் மொழியின்
உயர்ந்த கலைச் செல்வங்கள் போற்றினோமா
பல விதத்துக் கலைகளுக்கு பண்பினுக்கு
பயிற்றும் களம் கோயில்களை காத்துளோமோ
சிலை வடித்தோம் தலைவருக்கு அதனைக் கூட
சீரழியத் தெருவினிலே நிறுத்தினோமே
கலைகளெல்லாம் குத்தாட்டம் திரைப் படமென்று
கண்ணியமேயில்லாமல் ஒழிந்தோம் நாமே

Wednesday, March 10, 2010

குறளும் கருத்தும் காதல் காட்சி

குறளும் கருத்தும்

புலர் காலைப் பொழுது.மணம் முடித்துச் சில நாட்களே ஆன இளம் தம்பதியினர். அதிகாலைஎழுந்து குளித்து தலை ஈரம் காய துண்டினைத் தலையில் சுற்றிக்கொண்டு துணைவனுக்கு தேநீர்தயாரித்து எடுத்துக் கொண்டு படுக்கையறை நோக்கிச் செல்கின்றாள் பனிமலர் போன்று.

உறக்கத்தில் இருப்பவனைத் தொடாமல் எழுப்ப மேஜையினைத் தட்டுகின்றாள். உறக்கம்கலைந்தவனோ நீராடி நிற்கும் நிர்மலமான அழகில் திளைத்து வியக்கிறான்.

தேநீரை மேஜையில் வைத்து அருந்தச் சொல்லுகின்றாள் அழகுப் பெண்.

அருகில் வந்து தரச் சொல்கின்றான் அவன்.

நோக்கம் புரிந்து கொண்டவள் கவனமாக மறுக்கின்றாள்.

ஒன்றும் செய்ய மாட்டேன் உறுதி அளிக்கின்றான் அவன்.

அவளைப் பொறுத்த வரையில் அவனது உறுதி மொழி உறுதியாய் இராது என்று
உணர்ந்திருந்தாள்.

நான் நீராடி விட்டேன் சீக்கிரம் எழுந்து வாருங்கள்.குளித்தீர்கள் என்றால் கோயிலுக்குப்போகலாம் என்றாள்.

என்னை நம்ப மாட்டாயா என்று கெஞ்சினான்.

நம்புகிறாற் போல் நீங்கள் நடந்து கொண்டதில்லையே என்றாள்.

நீ பக்கத்தில் வந்து கொடுத்தால்தான் அருந்துவேன். இல்லையெனில் எழவே மாட்டேன்என்றான் அவன்.

சரி கோப்பையை மட்டும்தான் தொட்டு வாங்க வேண்டும் என்றாள்.

ஆணை என்றான்

அருகில் சென்றாள்

தந்த உறுதியில் உறுதி காத்தான் அவன்

வியந்தாள் அவள்.

கோப்பையைத் திரும்பப் பெறும் போது கைகளைப் பற்றிக் கொண்டான் அவன்.

திருட்டுத்தனம் என்றாள் அவள்.

உரியவளைத் தொடுதல் திருட்டுத்தனமா என்றான்.

கோப்பையை மட்டும் தான் தொடுவேன் என்று சொல்லி விட்டு இது என்ன ஏமாற்றுஎன்றாள் அவள்.

வாங்கும்போது மட்டும்தானே சொன்னேன் என்றான் அவன்.

அவன் தொடாமல் விட்டிருந்தால்தான் தோகை துவண்டிருப்பாள்.

கட்டித் தழுவிக் கொண்டான்.

விட்டு விலக முயற்சிப்பவள் போல் அவளும் கட்டித்தான் கொண்டாள்.

மீண்டும் குளிக்க வேண்டும் என்று அலுப்பது காட்டி அணைத்துக் கொண்டாள்.

என்னை விட்டு விட்டு தனியாகக் குளிக்கக் கூடாது இனிமேல் என்றான் அவன்.

கனிச் சுவைகள் அனைத்தும் கன்னியிடம் பெற்றான்.மலர்ந்த பெண்ணின் மலர்ந்த கண்கள் மயங்கிச் செருகிக் கொள்ள அந்த மென் தோளில் அவன் சாய்ந்தான். உறங்கியும் போனான்.

தாயாகிப் பெண்ணாள் அவன் தலைக்குள் விரல் கொண்டு கோதி அவனைக்
கொஞ்சுகின்றாள்.மாட்டேன் என்று சொன்னவுடன் எங்கே சரி என்று எழுந்து விடுவானோ என்று தயங்கியதையும் ஆனால் அவன் தழுவிக் கொண்டதையும் எண்ணி எண்ணி மகிழுகின்றாள்.

மெல்ல விழிக்கின்றான் மென்னகையாள் கோபிக்கின்றாள்.கோபமில்லாக் கோபம்.மாட்டேன் மாட்டேன் என்றேன். போங்கள் என்று சிணுங்குகின்றாள்.

அவன் கல கலவென்று சிரிக்கின்றான்.

அவளை வெட்கம் வாட்டுகின்றது. எதற்குச் சிரிக்கின்றீர்கள். இதற்குத் தான் நான்மாட்டேன் மாட்டேன் என்றேன். என்றாள்.

அட கிறுக்கே எதற்கு நான் சிரித்தேன் தெரியுமா. நேற்று வீட்டிற்கு வரும் வழியில்கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்னார்தாமரைக் கண்ணனின் உலகைச் சென்றடைவதுதான் பேரின்பம் என்று. உனது இந்த மென் தோளில்துயில்வதனை விடவா சொர்க்கம் பெரியது என்று கருதினேன். சிரிப்பு வந்தது என்றான். தோளின்தலையை மார்பிற்கு மாற்றினாள் செல்லப் பெண்.

குறள்

தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு

பெண்ணினமே எதிர்க்கும்

ஓதுக்கீட்டிற்குள் உள்ள ஓதுக்கீட்டைத் தான்
உரிமையுடன் கேட்கின்றார் நியாயம் தானே
கணக்கிட்டு அதனை இன்றே கொடுத்து விட்டால்
கண்ணியமாய்ப் புண்ணியமாய் ஆகிப் போகும்
பிணக் கெதற்கு புரியவில்லை மேதைகளே
பேசாமல் அதைக் கொடுக்க வழியைப் பாரும்
சுணங்கி நின்றால் நீங்கள் செய்யும் துரோகம் தன்னை
சுத்தமாகப் பெண்ணினமே எதிர்க்கும் ஒரு நாள்

Tuesday, March 9, 2010

ஆயிரத்தில் ஒருவன்

வரலாற்றுப் பிழைகளையே திரைப் படத்தார்
வரவு வைத்து மகிழுகின்றார் கொடுமை இதை
குரல் கொடுத்துக் கேட்பதற்கோ அறிஞர் இல்லை
குழப்பம் இதில் சோழர்களே மாட்டிக் கொண்டார்
அரன் பக்தன் அரியினையைக் கடலில் போட்டான்
அறிவற்றார் பிழை இதனைக் காட்டி நின்றார்
குறைச் சோழர் தனைக் கொன்று முடிப்பதற்கு
கூத்தடித்தார் ஆயிரத்தில் ஒருவன் என்று

வர மாட்டியா

ஊரெல்லாம் ஏய்க்கின்றார் ஏய்த்து விட்டு
உலக மறை திருக்குறளை இயம்புகின்றார்
சீரெல்லாம் குலைக்கின்றார் குலைத்து விட்டு
சிலம்பதனின் பெருமைகளைப் பேசுகின்றார்
நீரின்றித் தவிக்கின்ற ஏழையர்க்கோ
நிலை குலைய மதுவினையே வழங்குகின்றார்
யார் கேட்பார் இவர்களையே சொடலமாடா
எங்கிட்டு நீ ஒழிஞ்ச வர மாட்டீயா

இறைவனையே வணங்கி வெல்லும்

மருத்துவர்கள் குறிக்கின்ற நேரம் தன்னில்
மகவு வந்து பிறப்பதில்லை- மரணம் என்னும்
பெருத்த அந்த முடிவதுவும் மனிதர்கள் தாம்
பேரறிவால் அறிவதற்கு முடிவதில்லை
கருத்ததனை உணர்ந்தீரோ என்து மக்காள்
கடவுள் அவன் கையினிலே இரண்டும் உண்டு
பொருத்தமற்ற உம் அறிவைத் தூக்கிப் போட்டு
புகழ்க்கெல்லாம் இறைவனையே வணங்கி வெல்லும்

ஏன் அளித்தான்

கடவுள் இல்லை என்று சொல்லி மேடை தோறும்
கனல் தெறிக்கப் பேசுகின்றார் கர்ஜிக்கின்றார்
புடவையுடன் இவர் மனைவி கோயிலுக்குப்
போகின்றார் அம்பாளின் அருளைப் பெற
விடலை போட்டு விநாயகரைத் தரிசிக்கின்றார்
வேல் முருகன் கால்களையே பற்றுகின்றார்
நடிகர் இவர் தனைக் கூட மனிதர் போல
நாயகனாம் இறைவன் அவன் ஏன் அளித்தான்

சண்டையிட்டு அழிய மாட்டார்

அவரின் மதம் அவர்க் கதனைப் பழிக்க வேண்டாம்
அன்பு செய்வீர் என்று சொன்னார் நபி பெருமான்
புவனமெல்லாம் புரிந்துணர்ந்த இறைவன் தூதர்
பொறுமைகளின் சிகரம் அவர் நேர்மைச் செல்வர்
நவம் இதனை நம்முடைய நம்மாழ்வாரும்
நலம் பயக்கும் பாசுரத்தில் சொல்லிச் சென்றார்
தவம் உணர்ந்தோர் உணர்வார்கள் இதனை எல்லாம்
தவறாகச் சண்டையிட்டு அழிய மாட்டார்

இன்ஷா அல்லா

நாளைக்குச் சந்திப்போம் என்று சொன்னால்
நாயகனாம் அல்லாவின் அருளிருந்தால்
போய் வாரும் என்று சொல்வார் இன்ஷா அல்லா
பொறுப்புடனே சொல்லி நிற்பார் இறைவன் அன்றே
நீர் வாழும் வாழ்க்கையினை முடித்து விட்டால்
நினைத்த படி யாரை எங்கு காண்பீர் நீரும்
ஊர் தோறும் மேடை தோறும் சொல்லுகின்றேன்
உயர் விதனை இறை அருளை இன்ஷா அல்லா

இசுலாத்தை போற்றுகின்றேன்

இசுலாத்தைப் போற்றுகின்றேன் எதற்காய் என்றால்
எல்லோரும் இறைவனையே நம்புகின்றார்
பசப்பான வார்த்தை யில்லை பம்மாத் தில்லை
படைத்தவனே அனைத்தும் என்று பணிந்து நின்றார்
நிசந்தான் நான் சொல்லுவது இசுலாமியர்
நினைப்ப தென்றும் இறைவன் என்னும் பேரருளே
வசங் கெட்ட ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் இங்கே
வகை கெட்டு மனிதரையே புகழுகின்றார்

அல்லாவைப் பணிதல் ஒன்றே

எல்லாமே இறைவனென்று உணர்ந்தார் என்றும்
எக்குத் தப்பாய் ஆடி ஆடி அழிய மாட்டார்
அல்லாவே பெரியனென்று உணர்ந்தார் எங்கும்
அழிகின்ற மனிதரினைப் புகழ மாட்டார்
வல்லானை அல்லாவைப் பணிதல் ஒன்றே
வாழ்க்கைக்குத் துணையாகும் பெருமை சேர்க்கும்
நல்லார்கள் உணர்ந்துள்ளார் மற்றவரோ
நலமற்ற மனிதரினைப் புகழுகின்றார்

Monday, March 8, 2010

அல்லா தீர்ப்பளிப்பார்

எல்லாப் புகழும் இறைவனுக்கே
என்றே உணர்ந்தார் நல்லவர்கள்
வல்லான் ஒருவன் அல்லாவே
வகுத்த தெல்லாம் அவன் அருளே
பொல்லார் இங்கு ஆடுகின்றார்
புகழுக் கிவரே சொந்தமென்று
அல்லா அவர்க்குத் தீர்ப்பளிப் பார்
அவர்தம் கணக்கை முடிக்கை யிலே

பண்பு வழி

பணம் கொண்டார் தமைத் தேடி அவர்களது
பக்கத்தில் எப்போதும் இருந்து கொண்டு
குணம் கொண்ட அறிஞரையும் அவமதிக்கும்
குற்றத்தார் கவிஞரென சொல்லிக் கொள்வார்
நிணம் தசை நார் அனைத்திலுமே என்றும் எங்கும்
நீதியையே கொண்டு இங்கு அன்பால் வாழும்
குணம் கொண்ட பெரியவரோ அவர்க்கும் கூட
குளிர் முகம் தான் காட்டிடுவார் பண்பு வழி

Sunday, March 7, 2010

சம்காரம் செய்ய வேண்டும்

ஆசையுடன் எழுதுகின்றார் தவறில்லையே
அறிஞர்களில் சில பேரும் வினவுகின்றார்
ஓசையின்றி அவரோடு வைத்துக் கொண்டால்
ஒருவருக்கும் துன்பமில்லை வம்பும் இல்லை
பூசையிலே வைப்பதற்கு ஏற்றாற் போல
புனை கதையும் பொய் புரட்டும் செய்வாரென்றால்
நீசர்களை ஒழிப்பதற்குத் தமிழாம் தாயார்
நேர் வந்து சம்காரம் செய்ய வேண்டும்

தேம்புகின்றார்

கற்றவர்க்கு முன்னாலே அடக்கம் காட்டார்
கல்லாத மூடர்களும் என்று அன்றே
உற்றவராம் வள்ளுவரும் உணர்த்திச் சென்றார்
உணராதார் கல்லாதார் மேலும் மேலும்
கொற்றவன் போல் ஆடுகின்றார் தங்களையே
கொலு மண்டபத்தில் வைக்க முயலுகின்றார்
பற்றற்ற கற்றவரோ அவர்களையே
பரிதாபம் என்றுணர்ந்து தேம்புகின்றார்

எத்தும் நல்லோர்

எல்லார்க்கும் நல்லவராய்க் காட்டிக் கொள்ளல்
ஏய்ப்பதிலே மிகச் சிறந்த வழியேயாகும்
பொல்லார்க்கும் புன் சிரிப்பு நல் வணக்கம்
பொறுமை கொண்ட பெருமை என்ற நல் நடிப்பு
வல்லார்க்கோ பெரும் வணக்கம் வாழ்த்துச் சொல்லல்
வாய் நிறைந்த பெரும் சிரிப்பு நெருக்கம் காட்டல்
கல்லார்க்கும் அறிஞர் என்ற பட்டம் தரல்
கணக்கிட்டு வாழுகின்றார் எத்தும் நல்லோர்

அழுகின்றார்

எழுதி விட்டால் எழுத்தாகும் என்று இங்கே
இருப்பவர்கள் சில பேர்கள் கருதுகின்றார்
பழுதாக எழுதுகின்றார் பணம் இருக்க
பள பளக்கும் புத்தகமாய் ஆக்குகின்றார்
தொழு ததனை அன்பளிப்பாய் நம்மிடத்தில்
துணிவோடு தருகின்றார் படிக்கச் சொல்லி
அழுகின்றார் தங்களது படைப்புக்களை
அச்சிடவே முடியாத அறிஞர் பல்லோர்

Saturday, March 6, 2010

பு க ழு ங் க ள்

எல்லோரும் புகழுங்கள் எல்லோரும் புகழுங்கள்
எப்போதும் எல்லோரும் என்னையே புகழுங்கள்
எல்லா விதத்திலும் புகழ் பெற்ற பெரியோரை
எவரென்றாலும் எனக் கிணையென ஆக்குங்கள்
எல்லோரும் வணங்குங்கள் எல்லோரும் வணங்குங்கள்
எனை மட்டும் எப்போதும் எல்லோரும் வணங்குங்கள்
எல்லா விதத்திலும் நான் மட்டும் முதல்வ னென்
றெப்போதும் எப்போதும் என்னையே புகழுங்கள்

Thursday, March 4, 2010

இறை உணர்ந்தால்

போதை வழி அனைவரையும் மயக்கும் வேலை
போற்றுகின்றார் கல்கி அவர் ஆசிரமத்தில
பாதை தெரியாப் பலரும் அவர் வழியில்
பரிதாபமாக மாட்டி ஆடுகின்றார்
வேதனைகள் இதுவெல்லாம் மனிதர் தம்மின்
வேண்டாத ஆசைகளால் விளைவதன்றோ
தான் தனியாய்ச் செம்பொருளாய் இருக்கும் இறை
தனை உணர்ந்தால் கேவலங்கள் வருமோ அய்யா

Wednesday, March 3, 2010

மனித வழி

பாதாம் பிஸ்தாவோடு குங்குமப் பூ
பக்குவமாய்க் கலந்திட்ட பாலருந்தி
தோதாக வாழுகின்ற சாமியார்கள்
துறவிய ரென்றெண்ணுகின்ற மூடத் தனம்
ஏனோ தமிழ் நாட்டில் அதிகமாக
ஏமாந்து பல பேரும் வணங்குகின்றார்
வானோர்க்கும் வழி காட்டும் வள்ளுவரை
வணங்குங்கள் அவர் வழியே மனித வழி

கொடுமை

பள பளக்கும் மகிழூந்துப் பயணம் சாமி
படுப்பதற்கோ அழுந்தி எழும் படுக்கை
வள வளவென் றுளறி நிற்கும் சாமி தம்மை
வணங்கி நிற்க பணம் படைத்த கொடியர்
உளம் இழந்த ஏழை கட்கோ துன்பம்
ஒழித்து விட வேண்டும் ஒரு வழி தான்
களம் இதனால் காமுகர்கள் எல்லாம்
காவிக்குள் நுழைகின்ற கொடுமை

நித்தியமும் ஆனந்தம்

இல் வாழ்க்கை ஒன்றேதான் சிறந்த தென்று
எம் தந்தை வள்ளுவரும் உறுதி சொன்னார்
நல் வாழ்க்கை அதுவேதான் இயல்பு என்றார்
நலம் பயக்கும் அது ஒன்றே உலகுக்கு என்றார்
பொய் வாழ்க்கை வாழ்ந் ததனால் புகழைச் சேர்த்தார்
பொசுக்கென்று பெண்ணோடு மாட்டிக் கொண்டார்
உய்வளிக்க வந்த சாமி நித்யானந்தம்
உல்லாசம் காணுகின்றார் நடிகையோடு


கதவைத் திறக்கச் சொன்னார் நம்மிடத்தில்
காமத்தில் அவர் கதவும் திறந்து கொள்ள
விதம் விதமாய்க் காட்சிகளும் நமது கண்ணில்
விரிகிறது நித்தியமும் ஆனந்தம் தான்
பதை பதைக்க வேண்டாம் இவர் மாட்டிக் கொண்டார்
பல பேர்கள் மாட்டாமல் வாழுகின்றார்
சதை வாழ்க்கை இதிலிருந்து மீள்வதெல் லாம்
சாத்தியமா ஒருக் காலும் இல்லை அய்யா

Tuesday, March 2, 2010

தான் ஒழிவார்

எல்லாப் புகழும் இறைவனுக் கென்று
எவர் உணர்ந்தாரோ அவர் வாழ்ந்தார்
எல்லாம் தானே என்ற ழிவோர்கள்
இருக்கும் வரையில் தான் தெரிவார்
வல்லான் அவனே என் றுணர்ந்தாரே
வாழ்வார் வாழ்வார் வாழ்க்கையினை
எல்லாம் தானென் றாடிடுவோரோ
இழிந்தும் அழிந்தும் தான் ஒழிவார்

கேவலங்கள்

எழுதிப் பார்த்தார் ஒய்ந்தே போனார்
எவர்தான் இங்கு உணருகின்றார்
பழுதாய் வாழும் வாழ்க்கை தன்னை
பழகிச் சுகங்கள் காணுகின்றார்
அழுதார் இங்கு அழவே வாழ்ந்தார்
அவரை யார் தான் நினைக்கின்றார்
கழுதை போலக் கோடிகள் சுமப்பார்
கவலை யற்ற கேவலங்கள்

உரை நி க ழ் த் து கி ன் றே ன்

சி ன் ன க் க வு ண் ட ர் வே ணு கோ பா ல் து ணை வே ந் த ர்

விழா மேடைத்தோற்றம்

திருமதி தேன்மொழி வே ணு கோ பா ல் வி ள க் கு ஏ ற்று கின்றார்

சுவைஞர்கள்

சுவைஞர்கள்

சு வை ஞ ர் க ள்

வி ழா மே டை யி ல்

து ணை வே ந் த ரோ டு

பா ர தி யா ர் ப ல் க லை க் க ழ க த் து ணை வே ந் த ர் அ வ ர் க ளோ டு

பெரியவர் சென்னி சண்முகம்

திரு திரும்தி சேனாபதிக் கவுண்டர்

தம்பி வைகைச் செல்வனோடு

சேனாபதி கவுண்டர் நி னை வு நாள்

Monday, March 1, 2010

நி யா ய ம் தா னோ

மக்களாட்சி என்பதனை மறைத்து விட்டு
மன்னரைப் போல் ஆட்சி காட்டும் மானமற்றோர்
தக்கவரும் தகாதவரும் என்று அன்னை
தமிழ் வழியாய்ச் செய்தி தந்த குறள் மறந்தோர்
வெட்கம் மானம் என்பதனை மறந்தும் கூட
வீட்டார்க்குச் சொல்லித் தரா வீணர் இவர்
தக்கவரே அனைவருமே வாயை மூடி
தமிழ் வழியை மறந்திருத்தல் நியாயம் தானோ