Thursday, April 29, 2010

கேதான் தேசாய்

இத்தனை நாள் எதுவும் தெரியாமலா இருந்தார்
இது என்ன அரசாங்கம் புரியவில்லை
கொத்து கொத்தாகக் கோடிகள் தங்கமோ
கொல்லுலை இரும்பு போல்கணக்கின்றி அய்யகோ
செத்தா இருந்தது அரசாங்கப் பிரிவுகள்
சிறியரோ ஏழையோ திருடினால் கொல்கின்றிர்
மெத்தப் படித்தவர் கேதனாம் தேசாயாம்
மேலிருப்போரே இது தெரியாதா உமக்கெலாம்

சத்தியம் செய்வீரோ தெரியாது என்று நீர்
சரித்திரம் பழிக்காதா உங்களைப் பேய் என்று
எத்தனை எத்தனை பேர் இங்கு காத்தீரோ
எப்படி காந்தியின் பெயரை நீர் சொல்லலாம்
மொத்தமும் பணத்தினால் என்று நீர் வாழ்கின்ற
முறையற்ற வாழ்விது வாழ்வென ஆகுமோ
செத்தொழிவீர் உம் வம்சமும் அழிந்திடும்
சிரிக்காதீர் இது உறுதி நான் உரைக்கின்றேன்

Sunday, April 25, 2010

ராம்கோ சிமிண்ட்ஸ் நிறுவனர் நாள்


நிறுவனத் துணைத் தலைவர் திரு ரவிஷங்கர் அவர்கள் மேலாளர் ஸ்ரீதரன் தங்ககிருஷ்ணன்
ராஜ ராஜன் அவர்கள் ஞானசம்பந்தம் தொழிற்சங்கத் தலைவர்கள்

ராம்கோ சிமிண்ட்ஸ் நிறுவனர் பெரியவர் ராமசாமி ராஜா நினைவு நாள்


பேராசிரியர் வே.சங்கரநாராயணன் அவர்கள் உரை நிகழ்த்துகின்றார்

ராம்கோ சிமிண்ட் நிறுவனர் பெரியவர் ராமசாமி ராஜா நினைவு நாள்


ஆசிரியர் பே.சங்கரலிங்கம் பேராசிரியர் திருமதி க.சுப்புலக்ஷ்மி

வணக்கத்திற்குரிய பெரியவர் ராமசாமி ராஜா நினைவு நாள்


24-04-2010 பட்டிமண்டபம் பேராசிரியர் முனைவர்திருமதி வேலம்மாள் பேராசிரியர் வே.சங்கரநாராயணன்

Saturday, April 24, 2010

சாமியாரு மாட்டிக்கிட்டாரு

சாமியாரு பக்கத்திலே தப்பே இல்லை
சரியாத்தான் எல்லாமே செஞ்சிருக்கார்
காமிகளாய்ப் போய் அங்கே சேர்ந்தாரெல்லாம்
கையெழுத்துப் போட்டுத் தான் சேந்திருக்கார்
சாமியோட கூடமில்ல காமக் கூடம்
சத்தமின்றி அனைத்தும் தான் நடந்திருக்கு
சாமிக்கு நேரங் கெட்ட நேரம் அதான்
சட்டுன்னு மாட்டிக்கிட்டார் என்ன செய்ய

Friday, April 23, 2010

ஆட வரணும் சொடலமாடன்

சொடலையிலே ஆடுகின்ற சொடலமாடா எங்க சொடலமாடா
சுத்தபத்தமாக ஒன்னக் கும்பிடுதோம் ஆமா கும்பிடுதோம்

திடலினிலே ஆடுகின்றார் சொடலமாடா ஆமா சொடலமாடா
தேசமெல்லாம் வாய் பிளக்கச் சுடலமாடா ஆமா சொடலமாடா

கொடல உருவி மால போட்டு நீயும் ஆட ஆமா நீயும் ஆட
கொமரிப் பெண்கள் உடலக் காட்டி ஆடுகிறார் ஆமா ஆடுகின்றார்

தங்களையே ஏலம் போட ஏலம் போட ஆமா ஏலம் போட
தனித் தனியாய் ஆடுதவர் பெருமை கொண்டார் ஆமா பெருமை கொண்டார்

கடலத் தாண்டி மறச்சு வச்ச கள்ளப் பணம் ஆமா கள்ளப் பணம்
கணக்கின்றிப் புரளுதிங்கே சொடலமாடா ஆமா சொடலமாடா

தெனம் ஆட்டம் முடிஞ்ச பின்னே ராத்திரிக்கு ஆமா ராத்திரிக்கு
தேக சுக வெளையாட்டு நடக்குதங்கே ஆமா நடக்குதங்கே

மோசடியில் வளந்த எங்க மோடி அண்ணன் எங்க மோடி அண்ணன்
முத்தக் கூட்டம் வெச்சிருக்கான் தன்னைச் சுத்தி ஆமா தன்னைச் சுத்தி

ஆரு ஜெயிக்க வேணுமின்னு முன்னக் கூட்டி ஆமா முன்னக் கூட்டி
அண்ணன் சொல்லி வெச்சிருக்கார் தன்னைக் கட்டி ஆமா தன்னைக் கட்டி

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா அடி டண்டணக்கா
டண்டணக்கா டண்டணக்கா

கல்வி என்றால் அறியாத

மூன்றே மூன்று வயதுக் குழந்தையினை
முறையற்ற முறையினிலே பள்ளி தன்னில்
தான் தோன்றித் தனமாகக் கொண்டு விடும்
தடித்தனத்தை என் சொல்வேன் துன்பம் துன்பம்
ஏன் பிறந்தார் அவர் இவர்க்கு என்ற எண்ணம்
ஏக்கமதாய் துக்கமதாய் மனதைக் கொல்லும்
கூன் மனத்தார் கல்வி என்றால் என்ன என்றே
குறையின்றி அறியாத மூடர் இவர்

சிவனுக்குக் குமரனுக்கு

கருவறையில் தமிழ் பாடும் ஆதி சைவர்
காண்பதற்குக் கோவைக்குச் செல்ல வேண்டும்
திருக் காட்சி பேரூரில் சிவத் தலத்தில்
தெள்ளு தமிழ் அவினாசிக் கோயில் தன்னில்
அறிவாரா மற்றுமுள்ள ஆதி சைவர்
அறிந்தவரும் தமிழினிலே பாட வேண்டும்
விருந்ததுவே இறைவனுக்கு தமிழ்ச் சங்கத்தில்
வீற்றிருந்த சிவனுக்குக் குமரனுக்கு

Thursday, April 22, 2010

அரசுப் பள்ளி ஆசிரியர்

அரசாங்கப் பள்ளியிலே ஆசிரியர்
அவர் பிள்ளை கற்பதுவோ வேறு பள்ளி
துறை சார்ந்து ஆணை ஒன்றை அரசாங்கம் தான்
துடிப்பாக உடனடியாய்ப் போட வேண்டும்
அரசாங்கப் பணியாளர் பிள்ளையெல்லாம்
அரசாங்கப் பள்ளியில் தான் படிக்க வேண்டும்
நிறைவாகும் அரசாங்கப் பள்ளியெல்லாம்
நிமிர்ந்து நிற்கும் கல்வி அங்கு வெற்றி கொள்ளும்

தவமிருந்து குழந்தைகளை

பிடிக்கிறதா படிப்பதற்கு என்று எங்கும்
பெற்றவர்கள் பிள்ளைகளைக் கேட்டதுண்டா
நடிக்கிறதோ பிள்ளைகளின் எதிர் காலத்தை
நலமாக்கச் செய்கின்ற முயற்சி என்று
வடிக்கின்றார் குழந்தைகளும் கண்ணீர் இங்கு
வாய் திறக்க முடியாமல் பள்ளி செல்வார்
தடித் தடியாய்ப் புத்தகங்கள் சுமக்கவென்றே
தவமிருந்து குழந்தைகளைப் பெற்றுள்ளாரே

சோறு தேடச் சொல்லித் தரும் கல்வி

கல்வி கற்று உயர்வதற்காய்ச் சேர்க்கின்றாராம்
கடமை யதை சிறப்பாகச் செய்கின்றாராம்
நல் விதத்தில் மனிதனாக வாழ்வதற்கு
நலம் சேர்க்கும் கல்வியதா பள்ளிக் கல்வி
பல் விதமாய்ப் போதிக்கும் பள்ளியிவை
பண்பதனைப் பாசத்தைத் தருவதுண்டா
சொல்லி வைக்கும் கல்வி யிது அய்யோ அய்யோ
சோறு தேடச் சொல்லித் தரும் கல்வி அந்தோ

இரக்கமில்லா அன்னை தந்தை

வரிசையிலே நிற்கின்றார் குழந்தைகளை
வதைக் கூடப் பள்ளியிலே சேர்ப்பதற்கு
சிறு குருவி போல் இருக்கும் அழகுகளின்
சிந்தனையை உயர்வுகளை ஒழிப்பதற்கு
பரிவு இன்றிப் பாசமின்றி பண்பு இன்றிப்
பணம் கொள்ளும் பள்ளிகளில் கொண்டு கொல்ல
அறிவில்லை அன்பு இல்லை அன்னை தந்தை
அவர்க்கேன் தான் இரக்கமில்லை புரியவில்லை

Wednesday, April 21, 2010

பாரதிதாசன் நினைவு

பாரதியின் தமிழுக்குத் தாசனானான்
பாட்டு வெடிப் பாட்டளித்த பாட்டனானான்
ஊரறிய உண்மைகளைச் சொல்லி நின்றான்
உலுத்தர்களைப் பாட்டடியால் உலுக்கி நின்றான்
கார் மழையாய்ப் பொழிந்து நின்றான் தமிழாம் தாயை
காத்து நிற்க தமிழருக்கு உணர்வு தந்தான்
யார் உணர்ந்தார் அவன் உணர்வை மறந்தார் அந்தோ
எங்கேயும் ஆங்கிலம் தான் தமிழைக் காணோம்

Tuesday, April 20, 2010

வெள்ளையரின் விளையாட்டு

விடுதலையைப் பெற்று விட்டோம் என்றிருந்தோம்
வினைகளைத்தான் விட்டுச் சென்றார் வெள்ளையர்கள்
உடுத்துகின்ற ஆடையதில் துவக்கம் ஆகி
ஒவ்வொன்றாய் அவராய்த்தான் வாழுகின்றோம்
படுத்துகின்ற மட்டைப் பந்து ஆமாம் ஆமாம்
பாவியவர் தந்து சென்ற கேடு அன்றோ
தடுப்பதற்கு யார் உண்டு அனைவருமே
தருவதனைப் பெறுகின்ற பெரியர் அன்றோ


உடுத்துகின்ற ஆடையதை ஒன்று ஆக்கி
உலகத்தைப் பார்க்க வைத்த காந்தி அண்ணல்
மிடுக்கோடு வாழ்ந்திருந்தார் வெள்ளையரை
மென்மையான முறைகளினால் வென்றெடுத்தார்
அடுத்து வந்தார் பலர் செய்த தவறுகளால்
அந்நியராய் உள் நாட்டில் வாழுகின்றோம்
படுத்துகின்ற வெள்ளையரின் விளையாட்டிங்கு
பகல் இரவாய்ப் படுத்துகின்ற கொடுமை கொண்டோம்

Monday, April 19, 2010

மோடிகளின் வேலை இது

ஆடுகின்றார் விளையாட்டார் நடுவில் என்றால்
ஆடுகின்றார் பெண்களுமே ஆடை இன்றி
கூடுகின்ற கூட்டமதோ ஏய்க்கும் கொள்ளைக்
கூட்டத்தை உணராமல் கூடுதிங்கு
வாடி நிற்கும் ஏழையரைக் கூட இது
வதைக்கிறது கொல்கிறது அழிக்கின்றது
மோடிகளின் வேலை இது தெருவோரத்து
மோடி மஸ்தான் ஏழை இவர் கோடீஸ்வரர்

சசிதரூர்

கோடிகளைக் குவிக்கின்றார் மட்டைப் பந்தில்
கொள்ளையர்கள் வாழுகின்றார் மணமாய் இங்கு
கேடிகளே இவற்றினிலே முதல் இடத்தில்
கேட்காமல் இளைஞர்களும் மயங்குகின்றார்
நாடி இதன் அடிப்படையை வரித் துறையும்
நாட்டாரின் நன்மைக்காய்ப் பார்க்கப் போனால்
ஒடி விட்டார் ஒரு அமைச்சர் காதலிக்காய்
உச்சக் கட்டத் தவறு செய்து விலகி விட்டார்

Saturday, April 17, 2010

கல்வி விற்ற கொடுமை

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்ய
பாரதியாம் தமிழாய்ந்தான் சொல்லிச் சென்றான்
பள்ளித் தலமனைத்தும் கொள்ளை செய்யப்
பாங்காக வழியமைத்தார் அரசியலார்
எள்ளி நகையாடுகிறாள் கலை மகளும்
ஏய்ப்பவரின் கைகளிலே கல்வி விற்ற
கொள்ளிகளை ஒழிப்பதற்கு யாரும் இல்லை
கொள்கையில்லை நேர்மை இல்லை உண்மை இல்லை

Wednesday, April 14, 2010

அம்பேத்கார் தான்

ஊருண்ண உழைத்தவரை உழைத்துழைத்து
ஓடாகத் தேய்ந்தவரை மனிதர் தம்மை
காருண்யம் இல்லாராய் அடிமையாக்கிக்
கடவுள் என்றும் மதங்கள் என்றும் பொய்கள் கூறி
வேரொடு அவர் தம்மை அடிமையாக்கி
வீணர் பலர் இந்நாட்டில் ஆடும் ஆட்டம்
தேர்ந்தவரை எதிர்த்து வென்றார் அம்பேத்கார் தான்
தெளிவான சட்டம் கண்ட மாமேதை காண்

Monday, April 12, 2010

ஆரேனும் எங்களைக் காத்திட வாருமே

போலி மருந்துகள் பொறுப்பில்லா மருத்துவர்
போனது போகட்டும் என்றுள்ள மக்களும்
காலி இடங்களைக் கைப் பற்றும் காலிகள்
கணக்காகக் காப்பாற்றும் அரசியல் போலிகள்
வேலியாய்ப் பயிரினை மேய்ந்திடும் காவலர்
விபரம் தெரிந்துமே ஒதுங்கிடும் மக்களும்
ஆலிலைக் கண்ணனே ஏசுவே அல்லாவே
ஆரேனும் எங்களைக் காத்திட வாருமே

Saturday, April 10, 2010

இந்தியராக வாழ்வோம்

அவர் ஆண்ட போதிலே நிலையென்ன தெரியுமா
அவர் என்ன கேட்பதென்னை
ஆட்சியில் இருப்பவர் கேட்கின்ற கேள்வியில்
அறியாமை துள்ளுதிங்கு
அவர் வேண்டாம் என்றுதான் உங்களை அம்ர்த்தினார்
ஆட்சியில் மக்களிங்கு
ஆகவே மக்களின் ஏக்கங்கள் தீர்ப்பதே
அய்யா உம் வேலை யிங்கு
எவர் ஆளும் போதிலும் நிலையிதே கேவலம்
இனிய எம் தமிழ் மக்களே
இவர் மாறி அவர் வரின் இதுவேதான் கேள்வி நாம்
என் செய்ய தமிழ் மக்களே
அவர் ஊழல் இவர் சொல்ல இவர் ஊழல் அவர் சொல்ல
அனைத்தையும் நாம் மறப்போம்
எவருக்கோ வாக்கினை அளித்து நாம் என்றைக்கும்
இந்தியராக வாழ்வோம்

Friday, April 9, 2010

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


அவையினரின் பின் புறம் இருந்து எடுக்கப் பட்ட புகைப் படம்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


பேராசிரியர் அழகேசன் அவர்களின் நன்றியுரை

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்குப் பரிசு வழங்கல்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


துணை வேந்தரோடு நான்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


பேராசிரியர் அழகேசன் துணை வேந்தர் துறைத்தலைவர் அ.ராமசாமி

Thursday, April 8, 2010

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


சிரித்து மகிழும் மாணவ மாணவியர்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


சிரித்து மகிழும் மாணவியர்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


சிரித்துக் களிக்கின்ற்னர்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


துணை வேந்தர் துறைத் தலைவர் பேராசிரியர்கள்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


எனது உரை

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


துணை வேந்தரின் சீரிய உரை 06-04-2010

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


துணை வேந்தர் பண்பிற் சிறந்த திருமிகு இரா.சபாபதி மோகன் அவர்கள் நினைவுப் பரிசினை
வழங்கிப் பெருமை சேர்க்கின்றார்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்


தமிழ்த் துறைத் தலைவர் திரு அ.ராமசாமி அவர்கள் வரவேற்புரை

ஊதியமும் வாங்கிடுவாராம்

வேலூரில் மக்களது எழுச்சி கண்டு
மேனியெலாம் சிலிர்க்கிறது வாழ்த்துகின்றேன்
ஊர் ஊராய் மக்கள் விழித்தெழுந்து விட்டால்
ஒவ்வொன்றாய் நேர்மை நன்மை எல்லாம் வரும்
சீரின்றி மருத்துவர்கள் சில பேர் அங்கு
செய்த செயல் கண்டு மக்கள் கொதித் தெழுந்தார்
ஊர் கூடி தொடர் வண்டி நிலையம் தன்னில்
ஒற்றுமையைக் காட்டியதில் வென்றார் மக்கள்


அரசுப் பணி மருத்துவர்கள் சில பேர் தினம்
அப்படியே சென்னை விட்டு வந்திறங்கி
விரைவாக அடுத்த வண்டி தனிலே சென்னை
விரைவாராம் ஊதியமும் வாங்கிடுவாராம்
நிலை கண்ட மக்கள் முடிவெடுத்தார் அங்கே
நிறுத்தி அவர் தமைப் பிடித்தார் நிலையம் தன்னில்
கொலைகாரர் கூட்டமதை காவலர் வசம்
கொண்டு வந்து சேர்த்து இன்று வென்று நின்றார்

Wednesday, April 7, 2010

தெய்வங்களும் கண் திறந்து பார்த்திடாதோ

துறந்து விட்டார் ஆசிரமப் பொறுப்பையெல்லாம்
துறவு விட்ட நித்தியத்தின் ஆனந்தர் தான்
மறந்து நிற்பார் மக்கள் சில காலத்திலே
மனம் கவர வேறு ஒரு சாமி வருவார்
சிறந்தவர் காண் என்று இங்கு அவரையும் தான்
சீராட்டிப் பாராட்டி வணங்கி நிற்பார்
திருந்துவது எந்நாளோ இந்த மக்கள்
தெய்வங்களும் கண் திறந்து பார்த்திடாதோ

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்


உரை நிகழ்த்துகின்றேன்

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்


அண்ணன் இளசை மணியன் உரை நிகழ்த்துகின்றார்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்


பண்பிற் சிறந்த பதிவாளர் அய்யா சரவணன் அவர்களோடு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்


தமிழ்த் தாய் வாழ்த்து

Monday, April 5, 2010

தமிழ்ப் பல்கலைக் கழகம்


23-03-2010 பேராசிரியர் காமராஜ் வரவேற்புரை பேராசிரியர் குருநாதன் பதிவாளர் திரு சரவணன் அவர்கள் தம்பி கிருங்கை சேதுபதி அண்ணன் இளசைமணியன்