Friday, May 27, 2011

நேரு நினைவு நாள்

உலகெங்கும் பாரதத்தை உயர்த்திட வாழ்ந்து வென்றான்
கலகங்கள் இல்லா நாடாய்க் காத்திட ஆசை கொண்டான்
அலகினில் கோதுமைக் கதிரின் அழகிய புறாவாய் ஆனான்
பலப் பல நாடு போற்ற பண்டிதன் அமைதி காத்தான்
உளமெலாம் நல்லதொன்றே உதித்திட உலகை வென்றான்
உயர் குணம் கொண்ட வேந்தன் உத்தமர் காந்தி சீடன்
அளவில்லாப் பெருமை கொண்ட அன்பராம் நேரு மாமா
அகிலத்துக் குழந்தைக் கெல்லாம் அன்பினைத் தந்த சீமான்

Wednesday, May 25, 2011

குவைத் நிகழ்ச்சி ஜூன் மூன்றாம் தேதி

Thursday, May 12, 2011

அருளிச் செய்ய வேண்டும்

ஒரு வேட்டி ஒரு துண்டு கொண்டவராய்
ஊரெங்கும் ந்டந்து செல்லும் வல்லவராய்
மருவில்லா மனத்தவராய் சுய நலத்தால்
மாறாத மனம் கொண்ட நல்லவராய்
கருவிருக்கும் குழந்தை கூட வணங்குமாப் போல்
கண்ணியத்தின் பேரூருவாய் வாழும் மாந்தர்
திரு நாட்டை ஆளுகின்ற காலமொன்றைத்
தெய்வமே நீ அருளிச் செய்ய வேண்டும்

Wednesday, May 11, 2011

கள்ளமில்லா வெள்ளை உள்ளப் பிரபு அவரைக் கண்டேன் கண்டதனால் மனம் நிறைந்தேன்


தூத்துக்குடி விமான நிலையத்தில் பார்த்தவுடன் கள்ளமேயின்றி நெல்லைக்கண்ணன் அண்ணன் நான் என் குடும்பம் அனைவரும் உங்கள் ரசிகர்கள். உங்கள் நிகழ்ச்சின்னா எல்லாரும் உட்கார்ந்து பார்ப்போம் என்ற பிரபு அவர்களின் எளிமை.மனம் நெகிழ்ந்து போனேன்.சென்னை விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்

மனோரமா ஆச்சியுடன் மகிழ்ச்சியுடன்

சரித்திரம் ஆனதோர் தனித்திறம் கொண்டதோர் சாதனைத் தாயுடன் நான் துத்துக்குடி விமான நிலையத்தில்

Sunday, May 8, 2011

தாய்க்கு ஒரு தினமாம்

தாய்க்காக ஒரு தினமாம் இந்தக் கூத்தில்
தமிழர்களும் சேர்ந்துள்ளார் என்ன செய்ய
சேய்க்காக முந்நூறு நாள் சுமந்து தான்
சிரமங்கள் பட்டாலும் அது பொறுத்து
வாய்ப்பாக பெற்றெடுத்து வளர்த்து நல்ல
வாழ்க்கைக்கு வழி செய்த தாயவட்கு
ஏய்ப்பாரைப் போல ஒரு நாளைத் தரும்
இக் கேடு மேல் நாடு தந்த கேடு