Tuesday, April 22, 2008

அன்பே வடிவான தமிழருக்கு

    அனைவருக்கும்  எனது  அன்பான வணக்கங்கள்,

     அய்யா  தமிழுக்கு எதிராக  யார்  கருத்துக்களைக் கூறிய  போதும்  உடன்  அதனை
எதிர்த்துக்  கேட்டவன்  நான்  என்பதில்  எனக்கு  என்றும்  மன நிறைவு  உண்டு.
நான்  மிகவும்  போற்றுகின்ற  எனது  உயிரான  அண்ணன்  ஜெயகாந்தன்  தமிழுக்கு
எதிராக  ஒரு  கருத்துச் சொன்னவுடன்  அவரை  எதிர்த்து   பொழச்சுப் போங்க
அண்ணச்சி  என்று  குமுதம்  வார இதழில்  ஒரு  கடிதம்  எழுதினேன்.அதே  போல
இந்தித்  திரைப்படப்பாடலாசிரியர்  சாஹிருக்கு  முன்   கண்ணதாசன்  பட்டுக்
கோட்டையாரெல்லாம்   மிகவும்  தாழ்ந்தவர்கள்  என்று  அப்துல்  ரகுமான்  நக்கீரன்
பத்திரிக்கையின்   மாத இதழான   உதயத்தில்  எழுதிய  போது  தமிழ்நாடு  முழுவ
தும்  அவரை  எதிர்த்துப்  பேசிய  ஒரே  தமிழன்  நான். திரைப்  படத்திற்குப் பாடல்
எழுதுவது  அம்மி  கொத்துகின்ற  வேலை  என்று  அவர்  கூறிய் போது  அவர்
அம்மி  கொத்த  முயன்று  தோற்றவர்   என்ற  உண்மையைத்  தமிழருக்குச்
சொல்லியவன்  நான்.அம்மி  கொத்துவதும்  ஒரு  மிகப்  பெரிய  கலை  .அந்தத்
தொழிலைப்  பழிப்பது எத்தனை  தவறு  என்று  சுட்டிக்காட்டியவன்  நான்.
யாரும்  தமிழைப் பழிப்பவர்கள்  யாரென்று  பார்த்து ப்  பேசுவது  எனது  பழக்கமில்
லை.எப்பொருள்  யார்  யார்  வாய்க் கேட்பினும்    அப்பொருள்  மெய்ப்பொருள்
காண்பதறிவு  என்பது  நமது  தந்தையின்  வழி  காட்டல்.அதுவே என்  வாழ்க்கை
நெறி.நன்றி.வாழ்க  தாமிழுடன்.  தங்கள்   அன்பின்  அடிமை   நெல்லைகண்ணன்

1 மறுமொழிகள்:

said...

உங்கள் கட்டுரைகளிலும், கடிதங்களிலும் தெரிந்த நியாயம் இந்த பதிவிலும் தெரிகிறது அய்யா!

தொடர்ந்து...கலக்குங்கள்!