Tuesday, August 30, 2011

கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்

சிந்திக்க வைப்பதற்கே சிரிக்க வைத்தான்
செந்தமிழர் மனத்தி லெல்லாம் நிலைத்து நின்றான்
மந்திரத்து மாய்மாலம் ஒழிப்பதற்கோ
மனம் தெளிந்து சிரிக்க வைத்து வெற்றி கண்டான்
இந்திரனின் ஆட்சியிலும் மது ஒழிக்க
எண்ண வைத்த கூத்து ஒன்றை ஆடி வைத்தான்
நந்தனையே மனம் கொண்டு கிந்தனையே
நமக்களித்து கல்வியினை உணர வைத்தான்

Friday, August 12, 2011

கொங்கு பொறியியற் கல்லூர் நண்பர் முத்துச் சாமியோடு மேடை நோக்கி விரைகின்றேன்


ஐந்தாம் தேதி விழாவிற்காக மகிழூந்தில் வந்து இறங்குகின்றேன்


ஈரோடு புத்தகத் திருவிழா நுழைவாயில்


ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை புத்தகத் திருவிழா


நுழை வாயில் விள்ம்பரம்

Tuesday, August 9, 2011

விதிதான் போலும்

வெள்ளையனே வெளியேறு என்று காந்தி
வீரமுடன் முழக்கமிட்ட நன்னாள் இந்நாள்
கள்ளமில்லாக் கதராடை உள்ளம் போல
கண்ணியத்தின் பேரூருவம் கொண்டார் எல்லாம்
துள்ளி அன்று வந்தார்கள் விடுதலைக்காய்த்
துச்சமென உணர்ந்தார்கள் உயிரை அன்று
எள்ளி நகையாடுகின்ற நிலையில் இன்று
இருக்கின்றோம் என்ன செய்ய விதி தான் போலும்

Tuesday, August 2, 2011

ரமலான் நோன்பு

சொர்க்கத்தைத் திறந்து வைத்து மிகக் கொடிய
சூதாளர் நரகத்தை அடைத்து வைத்து
மக்களெல்லாம் இறைவனது மாண்புணர்ந்து
மண்டியிட்டுத் தொழுது நின்று பணிவுடனே
தக்க படி நோன்பதனை ஏற்கும் மாதம்
தனியாக முப்பது நாள் ரமலான் ஆமாம்
எக்கணமும் எப்பொழுதும் இறைவனையே
ஏற்றி நிற்கும் இசுலாத்தார் இனிய மாதம்

Monday, August 1, 2011

திலகர் பிறந்த நன்னாள்

வ.உ.சி. பாரதி என்றுயர்ந்தோர் பல்லோர்
வழி காட்டித் தலைவன் என்று ஏற்ற வீரர்
ஊர் தோறும் மக்களிடை விடுதலை நம்
ஒவ்வொருவர் பிறப்புரிமை என உரைத்தோர்
சீரான கல்வியிலே உயர்ந்து நின்றோர்
சிறப்பான இந்தியத் தாய் பெற்ற மேலோர்
நாம் வணங்கி நிற்கின்றோம் திலகர் தன்னை
நாட்டுக்காய் வாழ்ந்த அவர் பிறந்த நாளில்