எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. எந்த மதமும் கொலயை கொள்ளையைப் போதிப்பதில்லை. புரிந்து கொள்ளாதவர்கள் தவறு செய்தால் அதை அந்த மதத்தின் மீது சுமத்துவது நியாயமாகாது. திருடர்கள் திருடப் போகும்போது இறைவனை வணங்கி விட்டுத் தான் செல்கின்றார்கள். இறைவன் திருடனை வாழ்த்தியா அனுப்புவார்.
சல்லல்லாஹி அலைஹி வஸ்ஸலம் ந்பி பெருமானர் தெளிவாகச் சொல்லுகின்றார். அவரவர் மதம் அவர்களுக்கென்று.
நம்மாழ்வார் சொல்லுகின்றார்.
அவரவர் தமது தமது அறிவு அறி வகை வகை
அவரவர் இறையவர் என் அடி அணைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றாரே/
அவரவர்கள் அறிவு அவரவர்களுக்கு அவரவர் விதிப் படி காட்டிய இறைவனை அவரவர் வணங்குகின்றனர்
வேறு படு சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்கு பரம் பொருளே நினது விளையாட்டல்லால்
மாறு படும் கருத்தில்லை என்று சைவம் கூறுகின்றது.
பகவான் இராமகிருஷ்ணர் கிறிஸ்தவ மதத்தில் ஆறு மாதம் இருந்துள்ளார். இஸ்லாமிய சூபியிடம் போய் அந்த மார்க்கத்தை உணர ஆறு மாதங்களுக்கு மேல் இருந்திருக்கின்றார்.
சுவாமி விவேகானந்தரோ இசுலாமியர்களின் உடல் உறுதியோடும் கிறிஸ்தவர்க்ளின் அன்போடும் நமது வேதாந்த சாரங்களைச் சேர்த்து ஒரு புதிய மதத்தை உருவாக்க விரும்புகின்றேன் என்றார்.
இன்னின்ன வழி காட்டிகள் எமது மத்த்தில் தோன்றியுள்ளனர் என்று பெருமைப் படுவார்களே யொழிய.
இத்தனை கொலைகள் செய்தவர் என்றும் இத்தனை பெண்களைக் கற்பழித்தவர் இத்தனை கொள்ளைகளைச் செய்தவர் இவர் எங்கள் மதத்தவர் என்று எந்த மதமும் பெருமைப் படுவதில்லை.
ஹே ராம் படத்திலிருந்து கமலின் மீது குற்றச்சாட்டுகள் வந்து கொண்டேயிருக்கின்றன..தசாவதாரம் படத்தில் சோழ மன்னன் பெருமாள் சிலையைக் கடலில் போடுவதாக ஒரு காட்சி. இன்றும் சிவன் கோயில்களில் பெருமாளுக்கு இடம் உண்டு. பெருமாள் கோயிலக்ளிலேதான் சிவனுக்கு இடம் கிடையாது. திருக்குறுங்குடியிலே மட்டும்தான் உண்டு.. எந்த மன்னனும் அப்படிச் செய்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டில் யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை. இதற்கு முந்திய என்னைப் போல் ஒருவன் படமும் இசுலாமிய தீவிரவாதிகளை இந்தியச் சட்டம் ஒழுங்கை மீறி கதையின் நாயகன் கொல்வதாகக் கமல் காட்டியிருந்தார். அது வேறு படத்தின் தழுவல் என்று நண்பர்கள் சொன்னார்கள். விஸ்வரூபத்திலும் தொழுகை நடத்தி விட்டு தீவிரச் செயல்களில் ஈடுபடுகின்ற காட்சிகளை வைத்திருக்கின்றார் என்று இசுலாமியச் சகோதரர்கள் வேதனை கொள்கின்றனர். குரான் குறித்த சில தவறுகளும் இருப்பதாகச் சொல்கின்றனர். முதல்வர் அரசு இசுலாமிய அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டுக் காட்டச் சொல்லியும் கமல் திரையிட்டுக் காட்ட முன் வரவில்லை என்கின்றார். ஏன் கமல் செய்யவில்லை. செய்திருந்தால் அரசே இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்குமே. புரியவில்லையே.எனது வீட்டையெல்லாம் அடகு வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கின்றேன் என்கின்றார் கமல். அது தொழில் திரைப் படத் தொழிலே ஒரு மிகப் பெரிய சூதாட்டம். நாடோடி மன்னன் திரைப்படம் தயாரித்த எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார். இந்தப் படம் வெற்றியடைந்தால் நான் மன்னன் இல்லையென்றால் நான் நாடோடி என்று. ஒரு மதத்தவர் குறித்து இரண்டு படங்கள் தொடர்ந்து கமலிடமிருந்து வந்ததனால் கமலின் மீது அவர்களுக்கு வருத்தம் வருகின்றது.
கருணாநிதி இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம்.ஜி.ஆர். அவர்களை இந்த் சர்ச்சைக்குள் இருக்கின்றார். ஜெயா டி.வி. இந்தப் படத்தைக் கேட்டு தராத்தனால் முதல்வர் இப்படிச் செய்கின்றார் என்கின்றார். இவரது பேரன்கள் எத்தனைப் படங்களை இப்ப்டி மிரட்டி வாங்கினர் என்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்க தாத்தா பேசுவது ஆச்சரியமாக இருக்கின்றது.
வேறு தொலைக் காட்சிகளையே வர விடாமல் தடுத்தது இவர்பேரன்கள் தானே. இவர்களுக்குள் வந்த பிரச்சினைகளினால்தானே கலைஞர் தொலைக்காட்சியே வந்தது.
படங்கள் பாடம் சொல்லட்டும் பதற்றங்களை ஏற்படுத்த வேண்டாமே.

3 மறுமொழிகள்:
really superb
கமல ஹாசன் படங்களில் இப்படி ஒரு பெரிய பட்டியலே போடலாம்..
நான் விஸ்வரூபம் படம் பார்த்து விட்டு இதை எழுதுகிறேன்.படம் சொல்லவேண்டிய விஷயங்களை அழுத்தமாக சொல்லவில்லை.
தீவிரவாதம் பற்றி படம் எடுத்தால் தான் உலகளவில் பெயர் கிடைக்கும் என்ற என்னமோ தெரியவில்லை.
நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை என சொல்ல வரும் இவர் யார் மனதையும் புண்படுத்தாமல் படத்தை எடுத்திருக்கலாம்.
மொழி என்ற படம் யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு சண்டை காட்சி கூட இல்லாமல் பார்க்கும் அனைவரது மனத்திலும் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது.இவர் சொல்லும் "நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை" என்ற அதே கருத்தை வலியுறுத்தி வந்த படம்.
நானும் கமல ஹாசன் படங்களை பார்த்து வந்ததிலிருந்து ஒன்று தெரிந்துகொண்டேன் அவரது எல்லா படங்களிலும் எதாவது சமுக அல்லது சமய சாடல் இருந்துகொண்டு தான் வருகிறது..
நாயகன் - நாயக்கர் சமுதாயம்
உன்னால் முடியும் தம்பி - பிள்ளைமார் சமுதாயம்
அன்பே சிவம்- படையாட்சி சமுதாயம்
நம்மவர்- பிள்ளைமார் சமுதாயம்
மைகேல் மதன காம ராஜன் - பாலக்காடு ஐயர்
குருதிப்புனல் - நக்சல் விவகாரம்
ஹே ராம் - இந்து முஸ்லிம் கலவரம்
தசாவதாரம் - சைவ வைணவ பிரச்சனை
தேவர் மகன் - தேவர் சமுதாயம்
விருமாண்டி - தேவர் சமுதாயம்,நாயக்கர் சமுதாயம்
விஸ்வரூபம் - இஸ்லாமிய தீவிரவாதம்
உன்னை போல் ஒருவன் - இஸ்லாமிய தீவிரவாதம்
என பெரும் பட்டியலே போடலாம்....
மேலே உள்ள பட்டியலில் நான் குறிப்பிடும் எந்த சமுதாயத்தின் பெயர்களையும் சொல்லாமலேயே படத்தை எடுத்திருக்கலாம்.
ஆனால் அந்த சமுதாயங்களின் பெயரை குறிப்பிடவேண்டிய தேவை என்ன வந்தது என்று தெரியவில்லை.
இன்றைய தேதியில் பிராமணர்களை தவிர மற்ற சாதியினர் அனைவரும் தன் பெயருக்கு பின்னே சாதியை போட யோசிக்கிறார்கள்.
அதேபோல் இவரது படங்களில் கண்டிப்பாக எதாவது ஒரு பிராமண கதாபாத்திரம் தலைகாட்டி விடும்.
அவருக்கு இப்படி அமைகிறதா இல்லை இப்படி அமைக்கபடுகிறதா என்று தெரியவில்லை...
நன்றி,
முத்து
I think, kamal sir is spiritual and religious person. Outside he projects himself against god as paghutharivadhi, still he believes in god.
Post a Comment