Wednesday, April 10, 2013

அது அந்தக் காலம்

பள்ளிக் கூட விடைத்தாள்களும்  வினாத் தாள்களும் படுகின்ற பாடு கல்வி நமது நாட்டில் படுகின்ற பாட்டை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. யாரிடமும் முறையிட முடியாது. சேவை மனப்பான்மையோடு கல்விப் பணியாற்ற விரும்பாதவர்கள் அதிகப் பட்டுப் போகின்ற போது இப்படித் தான் ஆகும்.

சட்டப் பேரவையில் தேமுதிக திமுக இரண்டு கட்சிகளும் வெளியேற்றப் படுவதே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வர் பெரியவர் காமராஜரோ பக்தவத்சலமோ ஆர்.வெங்கட்ராமனோ  சி.சுப்ரமணியமோ பதில் சொல்லச் சளைக்க மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பேசவே அனுமதிக்கப் படவில்லையென்றால் எதற்கு தேர்தல்களும்  செலவுகளும். புரியவில்லை.

பெரியவர் நெடுஞ்செழியன் பல வெளி நாட்டு அறிஞர்களின் குறிப்புகளை யெல்லாம் சட்டப் பேரவையில் எடுத்து சொல்லிக் கொண்டிருக்கின்றார். பெருந்தலைவர் காமராஜர் அவரிடம் அது சரி நீங்க என்ன சொல்றீங்க அதைச் சொல்லுங்க என்ற போது சபை மட்டுமல்ல பெரியவர் நெடுஞ்செழியனும் சிரித்தார். வெளியிலிருந்த அண்ணா அதைக் கேட்டுச் சிரித்து மகிழ்ந்தார். 

ராஜாஜி தனது தொகுதி மக்களுக்காகப் பேசிக் கொண்டிருந்த தோழர் ஜீவாவிடம் உலகம் குறித்துச் சிந்திக்க வேண்டிய நீங்கள் ஒரு தொகுதி மக்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கின்றீர்களே என்று கேலி செய்ய முற்பட்ட நேரம் . என்ன செய்வது அந்தத் தொகுதி மக்கள் அவர்களின் பிரதிநிதியாக என்னைத் தேர்ந்த்டுத்து அனுப்பி உள்ளனரே. நீங்கள் மக்களுக்கே சம்பந்தமில்லாமல் மேலவையின் வழியாக வந்தவர்
உங்களுக்கு என்ன கவலை என்ற போது ராஜாஜியும் அதைக் கேட்டு சிரித்தார்.

அது அந்தக் காலம்


2 மறுமொழிகள்:

Anonymous said...

பாவம் பிள்ளைகள்

பாண்டியன்,
புதுக்கோட்டை

said...

நெல்லை கண்ணன் காமராஜர் பற்றிய அவருடைய உரையொன்றில் தானும் படிக்காதவன் என்று குறிப்பிடுகிறார். இத்தனை இலக்கியங்கள் மீது அறிவும், பரிச்சயமும் கொண்டவர் சும்மா அவையடக்கத்துக்காக அப்படிக்கூறினாரா, யாருக்கு அவர் பற்றித்தெரியும்?