Friday, July 19, 2013

என்றும் பயணம் செய்வான்

அரங்கன் அவன் அருளாலே திருவரங்கத்து
அரங்கன் அவன் ந்ண்பனால் வாலியானான்
கிறங்குகின்ற போதவனை செட்டி நாட்டு
கிருஷ்ண் பக்தன் கண்ணதாசன் பாடல் ஓன்று
மயங்குவதும் தயங்குவதும்  வேண்டாம் என்ற
மறை மொழியால் மனம் உறுதி கொள்ளச் செய்ய
மய்ங்குகின்ற பாடல்களால் தமிழாம் தாயை
மாண்பமையச் செய்த வாலி  இல்லை என்றார்


புரிகின்றது நண்பர்களே உடலை விட்டால்
போய் விட்டார் என்பதுவே நம் வழக்கம்
அறிவுடையோர் மட்டுமே உணர்வார் நன்கு
அரங்கன் வாலி அரங்கனிடம் சரணடைந்தான்
தெளிவோடு வாழ்ந்த அந்தத் தெய்வமகன்
தீர்க்கமாய் தமிழோடு வாழ்வான் என்றும்
பணிவோடு சொல்லுகின்றேன் கவிஞர் வாலி
பைந்தமிழரோடு என்றும் பயணம் செய்வான்

Saturday, July 13, 2013

உச்ச நீதி மன்றத்திற்கு நன்றி

உச்ச்நீதி மன்றம் மறுநாளே இன்னொரு தீர்ப்பையும் தந்துள்ளது. சிறையில் இருந்தாலே அவர்கள் தேர்தலிலே போட்டியிடக் கூடாது என்று. நமது அரசியல் வாதிகள் பதிலைக் காணோமே என்று பார்த்தேன்.

முதன் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது தான் ஆச்சரியமளிக்கின்றது.சட்ட அமைச்சர் கபில் சிபல் எல்லா அரசியல் கட்சிகளையும் கலந்துதான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்.
நமது அசோக ஸ்தூபியில் நான்கு சிங்கங்கள் இருக்கின்றன. நாடாளுமன்றம் நீதித் துறை செய்தி ஊடகங்கள் நாட்டு மக்கள் என்று.

பாண்டிச்சேரிய்ல் ஒரு  15 வருடங்களுக்கு முன்னர் நான் சொன்னேன் ஒரு இலக்கிய நிகழ்வில் இந்தச் சிங்கங்களை அச்சடிக்கின்ற பொழுது ஒரு சிங்கம் மறைந்து போகும் அதுதான் இந்திய மக்களைக் குறிக்கின்ற் சிங்கம்  என்று.

கிரிமினல்கள் உதவியில்தான் இந்நாட்டு அரசியல் நடக்கின்றது என்பதனை நமது அரசியல் கட்சித் தலைவர்கள் பெருமையோடு ஒத்துக் கொள்வதனைப் பார்க்கின்ற போது உச்ச நீதி மன்றத்திற்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கின்றது. இத்தனை வெளிப்படையாக எங்கள் மானம் சூடு சுரணையற்ற தலைவர்களை எங்கள் முன் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வைத்ததற்காக.

Thursday, July 11, 2013

யார் காக்க

உச்ச நீதிமன்றம் கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப் பட்டவுடன் நாடாளுமன்ற உற்ப்பினரோ சட்டப் பேரவை உறுப்பினரோ உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட வேண்டும் என்று இன்று ஒரு தீர்ப்பினை அளித்துள்ளது. கிரிமினல் குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலிலே போட்டியிடவே தடை விதித்தாலொழிய இந்த நாடு தேறாது.

ஒரு நீதிபதி ஒரு காவற்றுறையைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றியிருக்கின்றார். அவர் ஒரே நாளில் மீண்டும் பதிவியில் நீதிபதியாக அமர்த்தப் படுகின்றார். காவற்றுறைப் பெண்ணிற்கே இது தான் நிலை என்றால் சாதாரண பெண்கள் நிலை என்ன.

Tuesday, July 9, 2013

விஜய் தொலைக்காட்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு

அன்புமிக்க தமிழர்களுக்கு வாழ்க தமிழுடன். விஜய் தொலைக்காட்சி மீண்டும் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்வை தொடங்கியுள்ளது. இந்த முறை தமிழுணர்வு மிக்க நல்லறிவோடு கூடிய நல்ல இளம்படை என்னோடு பணியாற்றுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10 மணியிலிருந்து 11 ம்ணி வரை நிகழ்ச்சி ஒலி பரப்பாகின்றது. அனைவரும் பார்க்க வேண்டுகின்றேன். அன்புடன் நெல்லைக்கண்ணன்

சிந்தனைக்கு

ஊழல் செய்த அமைச்சருக்கு மரணதண்டனை.பதறி விடாதீர்கள். சீனாவில்.



கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் ஆகி விட்டார். இனிமேல் தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.பல நாட்கள் டி.ஆர்.பாலு சோனியாகாந்தியைச் சந்தித்து ஆதரவு கேட்டு மான உணர்வே இல்லாமல் காங்கிரஸ் ஆதரவு தந்து  காக்கை பாடினியார் கனிமொழி வெற்றி பெற்ற மறு நாள் தமிழர்களுக்காகவே (அழகிரி ஸ்டாலின் கனிமொழி ) வாழும் மாமனிதர் கருணாநிதி சொல்லுகின்றார். காங்கிர்ஸோடு எங்களுக்கு ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது. உடனே காங்கிரஸ் செயலாளர் முகுல் வாஸ்னிக்கும்  எங்களுக்கும் திமுகவிற்கும் உறவு இல்லை என்கின்றார். யாருக்கு மானமும் வெட்கமுமில்லை எனப்தனைக் கூட நாம் கண்டு பிடித்து விடாமல்  ந்ம்மைக் குழப்புகின்ற காங்கிரஸையும் திமுகவையும் பார்த்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது.