Saturday, March 5, 2011

டண்டணக்கா டண்டணக்கா டாக்கா

வந்திடுத்து வந்திடுத்து தேர்தல் அய்யா
வாக்களிக்க வாக்களிக்க் வாங்க
எந்தக் கட்சி நல்ல கட்சி என்று
எக்குத் தப்புக் கேள்வி யெல்லாம் வேண்டாம்
நொந்த கட்சி நோஞ்ச கட்சி உண்டு
நோக வச்சுக் கொன்ன கட்சி உண்டு
சொந்தமென நாட்டையே தான் எண்ணும் அந்த
சொத்துக் கட்சி வென்றிடாமப் பாரும் ஆமா

டண்டணக்கா டண்டணக்கா டக்கா ஆகா
டண்டணக்கா டண்டணக்கா டக்கா

3 மறுமொழிகள்:

said...

ஐயா,

தமிழகத் தேர்தல் கூத்தினை ஒட்டி, தினம் ஒரு கவிதையாக நீங்கள் படைக்கவேண்டும். அது தமிழருக்கு மட்டுமல்ல, மற்ற உலகத்தாருக்கும் தான்.

வேண்டுகோளுடனும், விண்ணப்பத்துடனும்,

கோ.சேஷாத்ரி

Anonymous said...

அய்யா சூடான அரசியல் கட்டுரைகள் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்...

said...

காசுக்கு சோரம்போகும் பெண்களையே கணிகையர்கள் என்பார்கள்!
காசுக்கு கலப்படப் பொருள்தனையே விற்போரை கள்ள
வணிகர்கள் என்பார்கள்!
கள்ள நோட்டு அடிப்போரை காதகர்கள் என்பார்கள்!
கள்ளக் கடத்தல் செய்வோரை பாதகர்கள் என்பார்கள்
பாலியல்வன்கொடுமை யாளர்களை சண்டாளர்கள் என்பார்கள்!
நல்லதையே எதிர்ப்போரையே நயவஞ்சகர்கள் என்பார்கள்!
சுதந்திரத்தை மறுப்பவர்களை சர்வாதிகாரி என்பார்கள்!
ஏழைகளை ஏமாற்றுபவரை கபட ஏமாற்றுக் காரர்கள் என்பார்கள்!
காசுக்கு வாக்குதனை விற்போரை
என்னவென்று சொல்வார்கள்?
கையூட்டு கொடுப்பதும் குற்றம்
கையூட்டு வாங்குவதும் குற்றம் என்றாலே
வாக்குரிமைக்கு காசு கொடுப்பதும்
வாக்குரிமைக்கு காசு வாங்குவதும்
கடுமையான குற்றமல்லவா?
தாய்க்கு சமமான வாக்குரிமையை
விற்பவர்களை-வஞ்சகர்களின்
தீயவழிவந்த
காசுக்கு வாக்குதனை விற்பவரையே
என்னவென்று சொல்வார்கள்?
கண்ணைவிற்று சித்திரம் வாங்குபவராய்!
ஏமாறும் மக்களே !
எத்தனை காலம்தான் இந்த ஏமாற்று மனிதரிடம் ஏமாந்து நிற்கப் போகிறீர்கள்?
வாக்குசுத்தம் வேண்டும் என்பார் பெரியோர்
அந்த வாக்கையே அசுத்தமாக்கும்
காசுக்கு வாக்குதனை விற்பவரையே
என்னவென்று சொல்வார்கள்?
ஊழல் என்பார் வழிவந்த காசுக்கு
அடிமையாகாத மக்கள் எழுவாரா?
விழிப்பாரா? நிமிர்வாரா?வாழ்வாரா?
நல்லவழி காண்பாரா?
மக்களே விழித்திடவில்லை என்றால்
உங்கள் விழித்னையே விழித்திருக்கும் போதே பிடுங்கிடுவார் காசுக்கு வாக்குதனையே வாங்கிட நினைக்கும்
தேசத்துரோகிகளே!