Tuesday, June 11, 2013

கம்பன் கழகங்கள்

பல ந்ண்பர்கள் ஏன் கம்பன் கழகங்களுக்கு வர மட்டேன் என்று என்னிடம் வினவுகின்றனர். அவர்கள் அழைத்தால் தானே வர இயலும்.

எங்கள் நீதியரசர் மகராஜ பிள்ளை கம்பன் அடிப்பொடி உண்மையான காந்தியவாதி சா.கணேசன் போன்ற் பெரியவர்கள் துவங்கி வைத்தது பாண்டிச்சேரியில் பெரியவர் புலவர் அருணகிரி போன்ற தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்  அவர்களின் பொறுப்பில் சென்னைக் கம்பன் கழகமும் காரைக்குடி கம்பன் கழகமும் இருந்தது. இப்போதோ அரசியல் சார்ந்தவர்கள் கையிலேயும் இந்தப் பொறுப்புகளை வைத்து தங்களின் சொந்த நலனுக்ககாக பயன் படுத்திக் கொள்பவர்கள் கையிலேயும் கம்பன் கழகங்கள் இருக்கின்றன. நான் என்ன செய்ய.விரித்து எழுத நான் விரும்பவில்லை.


என்னுடைய குறுந்தகடுகளை யாரோ நண்பர்கள் யு ட்யுபில்  ஏற்றி வைத்திருக்கின்றனர். அவர்கள் யார்  என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதனை ஆயிர்க் கண்க்கான தமிழர்கள் பார்க்கின்றனர் என்று தெரிகின்றது.
மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதன் விளைவாக பல உயர்ந்த குணங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்க்கு இறைவன் அருளால் கிடைத்திருக்கின்றனர். நன்றி அந்த நண்பர்களுக்கு.

4 மறுமொழிகள்:

said...

யூடியூபில் 'Nellai Kannan speech ' என்று தேடினால் தாங்கள் பாரதி,காமராஜர்,கர்ணன்,பட்டினத்தார் மற்றும் விவேகானந்தர் இவர்களை பற்றி பேசிய சொற்பொழிவுகள் கிடைக்கிறது.

இது தவிர தாங்கள் ஈரோடு புத்தக திருவிழாவில் 'சிந்திப்போம்' என்ற தலைப்பில் பேசியது மற்றும் 'தமிழும் பக்தியும்' என்ற தலைப்பில் பேசியது என எல்லாம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் 'யார் பாரதி' என்ற தலைப்பில் தாங்கள் பேசியது கூட பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவை அனைத்தும் எனது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து எனது வீட்டார் அனைவருக்கும் போட்டு காண்பித்தேன்.எனது நண்பர்கள் பலரும் அவர்களது கணினியில் அந்த காணொளிகளை ஏற்றி கொண்டார்கள்.

என்னை வலைதளங்களில் தேடவைத்து இந்த 'வாழ்க தமிழுடன்' வலைப்பதிவில் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்தது அந்த காணொளிகள் தான். உங்களது அணைத்து சொற்பொழிவுகளும் இதே போல் கிடைத்தால் மகிழ்வேன்.

நன்றி,
முத்து

said...

அவர்கள் ரெண்டே ரெண்டு வரி யை வைத்து கொண்டு பேசுவார்கள் . நீங்கள் முழு பாட்டையும் கேட்பீர்கள் . அப்பறம் எப்படி உங்களை கூப்பிடுவார்கள். போங்கப்பா நீங்க வேற ..



அன்புடன்

தெய்வீகராஜன்

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.