Friday, July 15, 2016

ஹலோ யாரு எல பிச்சம்மா .நல்லா இருக்கியால.ஊருல்லாம் புடிச்சிக்கிட்டா. அந்த ஊருக்கென்னா. அவரு மணிகண்டன் நாயர் எப்படி இருக்காரு. நல்ல பையம்ல்லா. சந்தோஷமா இரில. மலையாள பூமியே அழகுதானல.ஒங்க  அப்பனா ஊரு பூராவும் அண்ணாச்சி இப்படிப் பண்ணிப்புட்டாகளேன்னு ஒரேபுலம்பல்தானாம் .நேற்று ஒங்க ஹெட்மாஸ்டர் மாமா வந்திருந்தாகள்ளா அவுக சொன்னாக. அவுக கிட்டயும் போயி ஆவலாதி.                                                                                                                            

அவுக கேட்டிருக்காக. என்னவே தப்பு பண்ணிட்டாக பெரிய வீட்டு அண்ணாச்சி. அவாளுக்குத் தப்பு எப்படிய்யா தெரியும் . நீரு மனுசனா ஒரு அப்பனா நடந்துக் கிடல. அவாளும் பொறுத்துப் பொறுத்துப் பாத்தா. பொம்பளப்புள்ளயும் அவாள்ட்ட போயி நின்னிருக்கு.  அவ சொன்னத ஏத்துக் கிடுததத் தவிர வேற வழியில்லல்லாவே. ஒம்ம வீட்டுக்காரிகிட்டயும் சொல்லிருக்காக. அவதாம் அப்படியே பண்ணிருங்க அண்ணாச்சி.  இல்லேண்ண எம் புள்ள வாழ வேற் வழி கிடையாதுன்னு சொல்லி அழுதிருக்கா.

சரியாத்தாம் அவுக செஞ்சிருக்காங்கன்னு சொல்லிருக்காக. நானால வருவேம்ல்லா. எங்க அம்மேல்லா நீ. எப்பமும் வருவேம். அவாள்ட்ட ஒங்க மாமனார் மாமியார்ட்ட எல்லார்ட்டயும் சொல்லு.அந்த ஊருல தேங்காய் விசேசம்ல்லா. சொதி வச்சிரு என்னா.நான் ஒண்ணும் கடவுள் இல்ல.மனுசனா இருந்த்தாப் போதும் . ஒங்கப்பனுக்கு அறிவில்லையே

எங்க அம்மை சொல்லுவா தான் தின்னி பிள்ளை வளரா  தவிடு தின்னி கோழி வளராம்பா.

அறுபது வயசிலேயும் தான் திங்கணும் வாழணும்ன்னு  இருக்கானே.இப்படியும் பொறந்திடுதானுவளே என்னம்மா செய்ய.

வடமொழியில ஒரு  செய்தி ஜெயகாந்தன் அண்ணாச்சி பிரம்மோபதேச்ம்ங்கிற கதையில் எழுதி இருப்பாக. அதவது ஒரு தகப்பன் பதினாறு வயசுக்குள்ளே தன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கலேன்னா அந்தப் பொண்ணு அவ ம்ணாளனை அவளே தேர்ந்துக் கிடலாம்ன்னு. மொழி என்னம்மா மொழி .மனுசனுக எல்லாரும் உணர்ந்திருக்கானுவ.ஒங அப்பன் அவங்க அப்பனை மாரியே பொறந்திட்டாம். சரி நீ ஆபீஸ்க்கு போக வேண்டாமா. பெரியப்பன் கிட்டயே பேசிக்கிட்டிருந்தேண்ணா.

ஒங்கப்பன நாம் பாத்துக்கிடுதேம். இதுக்கப்புரமும் அப்பனைக் காப்பாத்தணும்ன்னு நெனக்கீயே. தங்கம்ல்லா எங்கம்மை. நல்லா இரு. கோயில் நெறய இருக்கு கேரளாவில. வீட்டுக் காரரோட போயிட்டு வா,
பெரியப்பா இன்னும் கொஞ்சம் நா கெடக்கணும்ன்னு வேண்டிக்கிடுவீயா.


யாருல வாசல்ல.


அண்ணாச்சி நாம்தாம் பரமசிவம்.

பாம்பு கழுத்தில இருக்கா. இல்ல கழத்தி வச்சிட்டு வந்திருக்கியா.

இல்லேண்ணாச்சி. நான் எலக்ட்ரீஷியன் பரமசிவம்.

வாவே கரண்ட் பிள்ளை. என்ன சேதி. சொல்லும் வெபரம் கூடுன ஆளுல்லா நீரு. சொல்லும்.


புன்னை வனம் அண்ணன் புலப்பம்தாங்க முடியல்ல அண்ணாச்சி.மின்னடிப் படித்துறையில குளிக்க வருதவம் ட்ட பூராம் சொல்லி சொல்லி அழுதாரு. கொஇல்ல ஊஞ்சல் மண்டபத்தில ஒக்காந்துக்கிட்டு காந்திமதி அம்மேட்ட வேற புலம்புதல்.

என்ன என்னய கொல்லணும்ன்னு வேண்டுதானால.

இல்ல பெரிய ஆளு எம்புள்ளய மலையாளத்துக் காரன் கையில புடிச்சுக் குத்துட்டாவளேன்னு புலப்பம்.

எல தெரியாத மாரியே பேசுதிய நீ நல்லகண்ணுப்பிள்ளை மகம்ங்கத காம்பிக்கியோ. ஒனக்கு ஒண்ணும் தெரியாதோ. முட்டாப் பயல
எல அந்தப் புள்ளைக்கு எத்தனை மாப்பிள்ளைத் தரம் வந்துது ஒண்ணையாவது திகைய விட்டானாலே. அந்தப் பிள்ளை தாய்மாமன் அதைப் படிக்க வெச்சான். அது எம்.ஏ.படிச்சிது. நல்லாப் படிச்சிது படிச்சு முடிஞ்சவுடனே 22 வயசில வேலை கெட்ச்சிட்டு. நல்ல சம்பள்ம் வாங்குதா. பாகவும் லெட்சணமா இருகு. அதுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்காம அவ ஒழைப்பில ஒக்காந்து சாப்பிடுததுக்காக ஏற்பாடு செய்தானே. இவம்ல்லாம் ஒரு தகப்பனால்.

ஒரு நா தீடிர்ன்னு வந்து நிக்கு. பதறிட்டேம். என்னல யம்மாண்ணேன். பெரியப்பா. எனக்கு வயசு 32 ஆயிட்டுப் பா. எங்க ஆபீசில ஒரு மலையாளத்துக் காரர் எனக்கு மேல அதிகாரியா இருக்கார். அவரும் தன் தங்கச்சிகளுக்கெல்லாம் கலியாணம் ஆகணும்ன்னு காத்திருந்திருக்காரு
35 வய்சாச்சி. நாயர். அவங்களை. கேரளாவில் பிள்ளைன்னு தாம் சொல்லுவாங்களாம். நான் என்ன செய்யட்டும். அதாம் இங்கன ஒடி வந்தேம்.


பண்ணிர வேண்டிரது தானே. ஒங்கப்பங்கிட்ட சொன்னா ஈசியா மலையாளத்துக் காரனுக்கு எப்படிக் குடுப்பேம் நம்ம சாதி என்ன ந்ம்ம சனக் கூட்டம் என்ன பழமையெல்லாம் பேசி இத நிறுத்தப் பாப்பாம். ஒங்க அம்மே என்ன சொல்லுதான்னுஜ கேட்டுக்கிட்டியால

அம்மா உஆரு கிட்டயும் சொல்லத நம் வரமுடியாஅது பெரிய வீட்டுப் பெரியப்பாட்ட்ப் போயிச் சொல்லு அவுக வழி காட்டுவாகன்னா. அதம் வந்தேம்.
எல அவங்க ஊருலயே வெச்சிக்குவோம்ன்னு சொல்லிரு. அவரு பேரென்ன.

மணிகண்டன் நாயர்  பெரியப்பா.

நாமவர்ட்ட பேசலாமா.

என்ன பெரியப்பா. நானே சொல்லிருக்கேன் எங்க ஊரில நியாயம் சாகாம இருக்கத எங்க பெரியப்பாணாலதாம்ன்னு.

பொறவு என்ன விடு. நாம் பேசிக்கிடுதேன்னு    சொன்னேன்.பேசினேன்.

குருவாஉர்ல கல்யாணம்.அவங்க குடும்பத்துக்காரங்க எப்படி ஆட்கள் தெரியுமால. காந்திமதி தன் மகள சரியான இடத்துக்குத்தன் அனுப்பி வச்சிருக்கா. புரியுதால. மூடிக்கிட்டுப் போயி அவங்கிட்ட  சொல்லு.


0 மறுமொழிகள்: