Sunday, September 6, 2009

எங்கள் ஊர்

இன்னும்
எங்கள்
ஊர்
கொஞ்சம்
பத்திரமாகத்
தான்
இருக்கிறது

காலையில்
ஒரு
குயில்
எங்கிருந்தோ
கூவுகிறது

என்
வீட்டு
நந்தியாவட்டையிலும்
பவளமல்லி
மரத்திலும்
சிட்டுக் குருவிகள்
கொஞ்சிக்
கொண்டிருக்கின்றன

அதிகாலை
பால் மணிச்
சத்தம்
கேட்டுக்
கொண்டுதான்
இருக்கின்றது

புதிய
மனிதர்களையும்
போலீஸ்காரர்களையும்
பார்த்துத்
தெரு
நாய்கள்
குலைத்துக்
கொண்டுதான்
இருக்கின்றன

ஒற்றை
ஆட்டுக் கிடா
பத்துப்
பெண்
ஆடுகளைத்
துரத்திக்
கொண்டுதான்
இருக்கிறது

தெருப்
பெண்களுக்கு
அருள்
பாலிப்பதற்கென்றே
பசுக்கள்
காலையிலேயே
தெருவிற்கு
வந்து
விடுகின்றன

பாலாக்கீரை
அரைக்கீரை
பொன்னாங்கண்ணிக்கீரை
பாட்டிகளின்
குரல்
கேட்டுக்
கொண்டுதான் இருக்கின்றது

கரிசக்குளம்
கீரைத்தண்டு
கணபதி
விற்றுக்
கொண்டுதான்
இருக்கிறார்

ஆனையும்
திருமஞ்சனக்
குடமும்
அம்பாளுக்குப்
போய்க்
கொண்டு
தானிருக்கிறது

செண்பகப் பூ
விற்ற
தாத்தாவுக்கு
வாரிசுகள்
இல்லை
போல

நயினார்
குளத்திற்கு
வெளி
நாட்டுப்
பறவைகள்
வந்து
கொண்டு
தானிருக்கின்றன

அதிகச்
சிலைகள்
இல்லாததனால்
எங்கள்
ஊர்
கொஞ்சம்
அழகாகத்
தான்
இருக்கிறது

5 மறுமொழிகள்:

said...

//அதிகச்
சிலைகள்
இல்லாததனால்
எங்கள்
ஊர்
கொஞ்சம்
அழகாகத்
தான்
இருக்கிறது//

சமூகத்தின் நிலையை எடுத்துக்காட்டும் அர்த்தமுள்ள, அழுத்தமான வரிகள். படித்துக் கொண்டு வரும்போதே அடடா, எல்லா ஊரிலும் இப்படித்தானே இருக்கு என நினைத்து வருகையில் இந்த கடைசி வரிகள் அழகிய விசயம் சொன்னது.

ஆனால் பல ஊர்களில் சிலைகள் இல்லாமலேயே அழகிழந்து போகும் அவலத்தையும் பார்த்திருப்பீர்கள் என்றே கருதுகிறேன்.

மிக்க நன்றி ஐயா.

said...

இயல்பாய் யதார்த்தம் வெளிப்படுகிறது... நன்றி!

said...

புதுக்கவிதையிலும்
உங்களை விஞ்ச
ஆளில்லாத அளவுக்கு
மிக அழகாக
எழுதி
அசத்துகிறீர்கள் அய்யா!

எல்லா
வரிகளும்
காட்சிகளாக
விரியும் அற்புதம்
நிகழ்கிறது!

said...

வயதில்லை வாழ்த்த... வணங்குகிறான்...

said...

தமிழ்கூறும் நல்லுலகில் தங்களைப் போன்ற ஒரு சிலராவது யாரையும் துதி பாடாமல் கவி பாடுவதால்தான் தமிழ் வளரும் என்ற நம்பிக்கை இன்னுமு் இருந்து கொண்டிருக்கிறது.
-இரா. தங்கப்பாண்டியன்
vaigai.wordpress.com