Friday, February 4, 2011

அருணா சாய்ராம் மதுரை சோமு

அனுபவித்துப் பாடுவதில் அருணா சாய்ராம்
அவருக்கிணை அவரே தான் போட்டியில்லை
தனுப் பிடித்து நிற்கின்ற இராமன் கூட
தனை மறப்பான் சீதையினை மறந்து நிற்பான்
வினை யதனால் வீழ்ந்து விட்ட இராவணனும்
வீணை கொண்டு அவரோடு இசைத்து நிற்பான்
தனை மறந்து என்ன கவி பாடி நிற்க
தமிழ்ச் சோமு உள்ளிருந்து வாழ்த்தி நிற்பார்

1 மறுமொழிகள்:

said...

//தனை மறந்து என்ன கவி பாடி நிற்க
தமிழ்ச் சோமு உள்ளிருந்து வாழ்த்தி நிற்பார்//

உண்மை அண்ணா!
என்ன கவிக்கு இன்றும் உயிர் கொடுத்துப் பாடுபவர்; அருணா அம்மா!