பிரதமரிடம் அமைச்சர்களும் அனைவரும் தங்கள் சொத்து விபரங்களைத் தந்திருக்கின்றனர். அமைச்சர்களை விட அமைச்சர்களின் மனைவிமாருக்குத்தான் சொத்து அதிகம் என்ற தகவல் வந்திருக்கின்றது.இப்போதாவது இந்திய மக்கள் தெளிவடைய வேண்டும். ஆமாம் நமது அமைச்சர்கள் எவ்வள்வு நேர்மையானவர்கள் என்று. வந்தேமாதரம்.. ஜெய்ஹிந்த் இந்திய ஆட்சிப் பணி(ஐ.ஏ.எஸ்) அதிகாரிகள் வெளி நாட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான் செலவை நமது அரசே ஏற்றுக் கொள்ளும் என்கின்ற மகிழ்ச்சியான செய்தி. மிகமிகக் குறைவான சம்பளத்தில் மக்களுக்கு (மந்திரிகளுக்கு) சேவை செய்யும் அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் கொஞசமா நஞசமா. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் தேசப் பற்றும் இதில் வெளியாகின்றது. நமது நாட்டில் சிற்ந்த மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கிடையாது என்கின்ற அவர்தம் தெளிவான் எண்ணத்தை மத்திய அரசும் ஆதரிக்கின்றதே. வாழ்க இந்தியா. தெளிவான முயற்சிக்குவ யது தடையில்ல என்று நிரூபித்திருக்கின்ற டென்னிஸ் வீரர் 40 வயது பயஸ்ஸூம் ( இவர் ஒரு இந்தியர் என்பதனை நினைவில் கொள்க) இவருக்கு அரசு ஒரு மரியாதையும் செய்து விடாது. இவர் கிரிக்கெட்டில் விளையாடினால்தான் கோடிக் கணக்கில் கிடைக்கும்.ஏற்கனவே ஹாக்கி வீரர்களுக்கு 25000 ரூபாய் தந்து கெள்ரவித்ததே நமது மத்திய அரசு. அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்இவரும் க்றூப்பினத்தவர் தாம் . கச்சத்தீவின் வரலாற்றை மக்களுக்குத் தெளிவு படுத்தி ந்மது மீனவ நண்பர்களுக்கு அது எத்தனை தேவை என்று உணர்த்தியிருக்கின்றனர் ராமநாதபுரம் அரசரும் அரசியும்.அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இலங்கைத் தமிழர்களின் தமிழர் பகுதியை கைப்பற்றி அவர்களிடம் அதனைத் தர வேண்டும் எனது நண்பர் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சொல்லியிருக்கின்றார். அதற்கு இந்திரா அம்மாவோ சஞய் காந்தியோ இருந்திருக்க வேண்டும்.முதுகெலும்பில்லாத இன்றைய தலைவர்கள் என்ன செய்து விட முடியும்
Tuesday, September 10, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment