Monday, August 24, 2009

துயரங்கள் தீர்க்க விழைவார்

கொடுமைகள் பல செய்து கொள்ளையர் ஆகியே
கோடிகள் சேர்த்து வாழ்வார்
கூட்டத்தைக் கண்டதும் கும்பிட்டு வணங்கியே
கோமகன் என்று நிற்பார்
அடிமைகள் போலவே நடித்தங்கு அவர் முன்னர்
அய்ய நீ வாழ்க என்பார்
அவர் அங்கு திரும்பிய மறுகணம் இறையிடம்
அழித்திட வேண்டி நிற்பார்


உயர் குணம் கொண்டவர் உண்மையாய் வாழ்பவர்
ஒரு போதும் தீங்கு நினையார்
உலகத்துப் பொறுமையை தனக்குள்ளே கொண்டவர்
ஊரங்கு வணங்க வாழ்வார்
துயர் கொண்ட வாழ்க்கையில் அவரைப் போல் நல்லவர்
துடித்திட மக்களெல்லாம்
தூயனாம் இறைவனை வேண்டியே அவர் தங்கள்
துயரங்கள் தீர்க்க விழைவார்

3 மறுமொழிகள்:

said...

ஐயா நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மைங்க....இன்னைக்கு இதுதாங்க நடந்துக்கிட்டு இருக்கு...மனுசன் மனுசனா வாழ்ற காலம் வருமாங்க....

said...

அருமையான வரிகளில் அழகான கருத்துக்கள்.

said...

அருமையான வரிகளில் அழகான கருத்துக்கள்.