நாலரைக்கு குயிற் பெண்ணாள் கூவி நிற்பாள்
நான் விழிக்கக் குருவிகளார் குரல் கொடுப்பார்
கோல மணிச் சத்தத்தைப் பால் காரர்தான்
கொண்டு வந்து செவிகளிலே ஊட்டி நிற்பார்
ஆலயத்தின் மணி ஒலிக்கத் தேவாரம் தான்
அழகு தமிழாய் வந்து இன்பம் சேர்க்கும்
நாளொன்று கழிந்ததென்ற செய்தி எந்தன்
நாட் காட்டி வழி தெரியும் வெல்ல வேண்டும்
Tuesday, December 7, 2010
வெல்ல வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
தித்திக்கும் தீந்தமிழால் குயிற்பெண் ணாளும்
திருந்துமொழிக் குருவிகளும் குரல்கொ டுக்க
எத்திக்கும் சூழிருளைச் சூழ்ந்து வெல்ல
எழுகின்ற வெங்கதிரோன் தொன்று முன்னே
மெத்தைக்கு விடைகொடுத்து விழித்தெ ழுந்து
விளிந்ததொரு நாளறிந்து விளம்பி வெல்லச்
சித்தத்திற் குரைத்திட்டீர் நானும் அஃதைச்
சிந்தைக்குள் வைத்திட்டேன் வெல்வேன்! வெல்வேன்!
விளிவு -அழிவு
அடடா..
அய்யா!
அழகு தமிழ்!
பழகு மொழி!
அம்மன் சன்னதிக்கே
வந்ததைப்போல் இருந்தது!
நீங்கள்..நீங்கள்தான்!
மாற்றே இல்லை!
Post a Comment