Monday, October 15, 2012

உணர்வில் தோன்றியவை

நேற்று ஒரு உணவகம் சென்றிருந்தேன்.
அறிவிப்புப் பலகை ஒன்று பார்த்தேன்

வாடிக்கையாளர்களே தங்கள் உடமைகளைத் தாங்களே பத்திரமாகப் பார்த்துக்
கொள்ள வேண்டும் தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல

நமது அரசியல் கட்சிகள் நினைவுக்கு வந்தன

வாக்காளர்களே உங்கள் உடமைகளையும் நில புலன்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு .எங்கள் பெயரிலோ எங்கள்
உறவினர்கள் பெயரிலோ அவை மாறினால் நாங்கள் பொறுப்பல்ல. உங்கள் அறியாமையே பொறுப்பு என்று எழுதாத விளம்பரம் ஒன்றை நமக்கென தந்திருக்கின்றனரே.


பூரண மது விலக்கை அமுல் படுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாச் சூழல்.

தமிழக முதல்வர் மாண்பு மிகு முதல்வர் அவர்க ள்திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்த எல்லாவற்றையும் மூடுகின்றவர் இதை மூடினால் தாய்க் குலத்தின் பேராதரவோடு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம்.அம்மா என்று தமிழக ஏழை எளிய மக்களால் அன்போடு அழைக்கப் படும் தாயவர் இதனைச் செய்ய வேண்டும். காந்தி காமராஜர் அண்ணா போன்றவர்க்ளின் ஆசியும் கிட்டும். இறைவனிடம் வேண்டி நிற்போம்.

2 மறுமொழிகள்:

said...

மது புட்டியில் "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" என்று எழுதப்பட்டுள்ளது. அப்படி என்றால் , ஒரு அரசாங்கமே அதை கடை போட்டு விற்றால் அது பெருங் குற்றம் ஆகாதா ?

அரசுக்கு நல்ல வருமானம் வருகின்றது. நிச்சயம் இவர்கள் மதுவை ஒழிக்க மாட்டார்கள்.

தி. மு.க வும் அ.தி.மு.க. வும் இந்த விஷயத்தில் ஒன்று தான்.

இனி ஒரு காந்தி கூட கிடைத்து விடுவார். காமராஜர் கிடைக்க போவது இல்லை.

அன்புடன்,
தெயவீகராஜன்

said...

மதுவை ஒழித்தே தீர வேண்டும்.

பத்திரிக்கைகளில் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு வரும் ஒரு முக்கியிமான புள்ளி விவர கணக்கு.
தலைப்பு - தமிழகம் முழுவதும் மது விற்பனை கன ஜோர்.
சேலம் மாவட்ட குடிமகன்கள் மட்டும் ஒரே நாளில் 32 கோடிக்கு மது குடித்து மாநில அளவில் முதல் இடத்தை தட்டி சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ரொம்ப டல்.

மதுவை ஒலிக்கவில்லை என்றால் நம் குடிமகன்கள் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் கோடி கணக்கில் குடித்து மது விற்பனையில் இந்திய அளவில் 'ரெகார்ட் பிரேக்' செய்து கொண்டிருப்பர்.
விடுமுறை என்றாலே மது மட்டுமே இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக ஆகிவிட்டது.
இதை ஒழித்தே ஆகவேண்டும்.

அன்புடன்,
முத்து