Tuesday, October 16, 2012

காங்கிரஸின் உண்மைத் தொண்டன் மணி சங்கர அய்யர்

இன்னும் 45 வருடங்கள் ஆனாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது மணிசங்கர் அய்யர் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்.

ஆமாம் 5 வயதிலிருநதே காங்கிரஸ் கொடியைக் கையிலேந்தி படிப்பையெல்லாம் துறந்து விட்டு கட்சி வளர்த்த பெருமகன்..

இராஜீவ் காந்தியின் பள்ளித் தோழனாயிருந்த ஒரே காரணத்தினால் மயிலாடு
துறை நாடாளுமன்ற உறுப்பினராகி மத்திய அமைச்சரான இவரைப் போன்ற்
வர்களால்தானே காங்கிரஸ் ஒழிந்தது.

மயிலாடுதுறையிலே காங்கிரஸிற்காக உழைத்து உழைத்து ஒடாய்த் தேய்ந்த
வர்கள் இருக்க டில்லியிலிருந்து வந்தது மட்டுமல்ல.இவருக்கு எல்லாச் சேவைகளையும் செய்ததற்காகவே ராஜ்குமார் என்கின்றவர் சட்டப் பேரவை
உறுப்பினராக்கப் பட்டார்.

தமிழ்நாட்டின் எந்த ஊரையும் தொண்டனையும் தெரியாத ஜெயந்தி நடராஜன்
தொடர்ந்து மாநிலங்களவை  உறுப்பினராக மத்திய அமைச்சராக இருப்பார்.

பிறகு காங்கிரஸ் எப்படி வளரும் உழைப்புத் திருடர்களெல்லாம் உயரத்தில். இவர்களின் இன்னொரு திறமை திராவிட இயக்கங்களின் உழைப்பைத் திருடி
உயரத்தில் போய் தங்களைத் தலைவர்களாகக் காட்டிக் கொள்வது.

இந்த மணிசங்கர அய்யர் காங்கிரஸ் இடம் தரவில்லையென்று திரிணாமுல்
காங்கிரஸில் போய் இடம் கேட்டார். பிறகு மயிலாடுதுறையில் காங்கிரஸிற்
கெதிராகப் போட்டியிட்டார். இன்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக
உள்ளார்.

திராவிட இயக்கங்கள் மட்டும் தெளிவாகக் காங்கிரஸை ஆதரிக்காமல் இருந்தார்களென்றால் இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எங்கே
இருக்கின்றார்கள் என்றே தெரியாத நிலையில்தான் இருப்பார்கள்.

1 மறுமொழிகள்:

said...

//இன்னும் 45 வருடங்கள் ஆனாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது மணிசங்கர் அய்யர் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்.//

நோ...நோ...நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க...அவர் அன்ன சொல்றாருன்னா, 'இன்னும் 45 வருஷம் நான் கட்சியில இருப்பேன்'-ங்குறார். புரிஞ்சுதா ஐயா?