Wednesday, July 15, 2009

நசுக்கலாமோ? குழந்தைகளும் கல்வியும்

விற்கின்ற கல்வியிலே மாட்டிக் கொண்டு
வீணாகப் போகின்றார் குழந்தைகளும்
கற்கின்ற கல்வியில்லை விளையாட்டில்லை
கனம் கனமாய் மண்டையிலே ஏற்றும் வேலை
பிற்காலம் உடல் நோயும் மனத்தில் நோயும்
பெற்றழியும் கல்வியினை திணிக்கின்றார் காண்
பெற்றோரும் சேர்ந்திந்தப் பெரும் பிழையைப்
பீடையினைச் சேர்க்கின்றார் என்ன செய்ய?


மதிப்பெண்கள் மதிப்பெண்கள் பெற்றால் போதும்
மனித மனம் உயர்ந்த குணம் எல்லாம் வேண்டாம்
விதிக்கின்ற விதிகளிலே பண்பு இல்லை
வெல்லுகின்ற நல்ல குணம் சொல்வதில்லை
கதியிதிலே மாட்டி நாட்டின் கண்மணிகள்
கலங்குகின்றார் புலம்புகின்றார் துன்பம் துன்பம்
எது எதிலே போய் முடியும் இந்த நாட்டின்
எதிர்காலம் அவர்களன்றோ நசுக்கலாமோ?

2 மறுமொழிகள்:

said...

நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்!

குழந்தைகளின் தற்காலக் கல்விச் சுமை கவலையளிப்பாகத்தான் இருக்கிறது!


மென்மையாய் அணுகவேண்டிய குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் கல்விச்சுமை சொல்லி மாளாது!

said...

சமகால நிலைமையை அருமையாக விளக்கியுள்ளீர்கள்.வருங்கால வாழ்க்கை எப்படி இருக்குமோ என நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.