Thursday, March 29, 2012

கண்ணதாசன் கட்டுரைகள்

இதய கமலம் என்ற படத்தில் காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி பாடும் பாடல் ஒன்று.கவியரசர் கவியரசர் தான் என்று பறை சாற்றும் பாடல்.

தாயின் கருப்பையிலிருந்து மண்ணிற்கு வருகின்ற குழந்தை கண்
திறந்ததா என்று அனைவரும் காத்திருப்பார்கள். குழந்தை கண் திறந்ததை அம்மாதான் முதன் முதலில் பார்ப்பாள். பின்னர் ஒவ்வொருவராகப் பார்த்து மகிழ்வார்கள். பிறகு குழந்தை முகம் பார்க்கிறது என்று பெருமைப் படுவார்கள். பிறகு அப்பாவை குழந்தைக்கு அடையாளம் தெரிகின்றது மாமாவை அடையாளம் தெரிந்து கொள்கின்றதென்றெல்லாம் மகிழ்வார்கள். அந்தப் பெண் குழந்தையும் அப்படி எல்லா மகிழ்ச்சியையும் தாய்க்கும் தந்தைக்கும் உறவினர்களுக்கும் தந்தவள் தான்.

அந்தக் கண்களால் உலகைப் பார்த்து இயற்கையைப் பார்த்து மகிழ்ந்தவள்தான் கிளியை மைனாவை குயிலை மயிலை சிட்டுக் குருவியை ஆடு மாடு மான் என்று பார்த்து மகிழ்ந்தவள்தான்.

கண்ணான கல்வியைக் கற்றுத் தேறியதும் அந்தக் கண்களினால்
தான். அவள் பாட்டி அவள் கண்களின் அழகுக்கே திருஷ்டி சுற்றியது பலமுறை. இப்படியெல்லாம் உறவை உலகை கல்வியைக் காட்டித் தந்த கண்ணை அவள் கண்ணேயில்லை என்கின்றாள் . ஆமாம் அவள் மனம் கவர்ந்தவனைக் காண வாய்ப்பில்லாமல் போன கண்களையெல்லாம் கண்களே யில்லை என்கின்றாள்.

ஆமாம் உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
என்று.

1 மறுமொழிகள்:

said...

ஒரு வரியில் எத்தனை நுணுக்கமான பொருள்கள் அடங்கியிருக்கின்றன என்பதற்கு கண்ணதாசனில் 'கண்ணல்ல' பாடலும் தங்களின் இவ்வுரையுமே சாட்சி. வாழ்த்துக்கள்