கடவுள் இல்லை என்று நீங்கள் சொல்லுகின்ற
காரணத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டார்
படபடப்பே இல்லாமல் மிகத் தெளிவாய்
பதிலளித்தார் பெரியாரும் மிகச் சிறப்பாய்
படம் இல்லை சிலை இல்லை படைத்தவனாம்
பார் படைத்த இறைவனுக்கு உருவம் இல்லை
திடமாகச் சொல்லுகின்ற இசுலாம் மார்க்கம்
செப்புவதை மறுக்கின்றார் இந்து மக்கள்
வடம் போட்டுத் தேரிழுத்து கோயில் கட்டி
வணங்குகின்ற கிறிஸ்துவையும் இந்துவையும்
புடம் போட்ட இசுலாத்தார் மறுத்து நின்றார்
புரிந்து கொண்டேன் அன்றே நான் புரிந்து கொண்டேன்
இவர் கடவுள் இல்லையென்று அவர்கள் சொன்னார்
அவர் கடவுள் இல்லையென்று இவர்கள் சொன்னார்
அவரவர்தம் கருத்தினையே கூட்டிப் பார்த்தேன்
அதையேதான் நான் சொன்னேன் கடவுள் இல்லை
Friday, December 19, 2008
பெரியார் சொன்னர்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிச் சென்றதற்கான உண்மை விளக்கம் கண்டேன்.களிப்புற்றேன்.
தமிழகத்தில் தங்களைப்போன்று நடந்த
உண்மைகளை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூற (60-வயது) எனக்குத் தெரிந்தவரை எவருமில்லை.அனைத்தையுமே எழுதிவைத்தால் அதுவே தமிழகத்தின்
மெய்யான வரலாறாகும்.
Post a Comment