Friday, July 2, 2010

தமிழைப் போல

கண்ணதாசன் பிறந்த நாள் தன்னிலே தான்
கனித் தமிழின் மாநாட்டைத் தொடங்கினார் காண்
எண்ணவில்லை கண்ணதாசப் பெருங் கவியை
எவரும் அவர் பெயர் கூடச் சொல்லவில்லை
மன்னவனைச் சொல்லி விட்டால் மாத்தமிழாள்
மயங்கிடுவாள் எனக் கருதி மறைத்திட்டாரோ
என்னவென்று புரிந்து கொண்ட நற்றமிழர்
எவரும் அங்கு செல்லவில்லை தமிழைப் போல

1 மறுமொழிகள்:

said...

////நெல்லை கண்ணன் said...
கண்ணதாசன் பிறந்த நாள் தன்னிலே தான்
கனித் தமிழின் மாநாட்டைத் தொடங்கினார் காண்
எண்ணவில்லை கண்ணதாசப் பெருங் கவியை
எவரும் அவர் பெயர் கூடச் சொல்லவில்லை
மன்னவனைச் சொல்லி விட்டால் மாத்தமிழாள்
மயங்கிடுவாள் எனக் கருதி மறைத்திட்டாரோ
என்னவென்று புரிந்து கொண்ட நற்றமிழர்
எவரும் அங்கு செல்லவில்லை தமிழைப் போல /////

உண்மைதான் அய்யா! அத்துடன் உங்களைப் போன்ற தமிழ்க்கடல்களையும் அங்கே அழைத்து உரை நிகழ்த்தச் சொல்லாதது வருத்தமுறச் செய்தது.