Thursday, July 22, 2010

பூவரசி எனும் அரக்கி

பூவரசி எனும் பெண்ணை அரக்கியாக்கி
பொன்னான தன் மகனை இழந்து நிற்கும்
பாவி மகன் ஜெயக்குமார் தன்னை யாரும்
பழிப்பது போல் தெரியவில்லை வீட்டில் நல்ல
வாழ்வரசி துணையிருந்தும் வந்த பெண்ணை
வளைத்து அவள் உடல் சுகித்து கருக்கலைத்து
பாழ் வாழ்க்கை அவன் வாழ ஒருத்தி அங்கு
பனி மகனை இழக்க பூவோ அரக்கி ஆனாள்


கேவலமாய் வாழுகின்ற ஆண் மகனின்
கீழ்த்தரத்தை உணர்ந்தீரோ நாட்டு மக்காள்
ஆவலினை ஆசையினை அடக்க வொண்ணா
அத்துமீறல் அன்றோ அவன் குழந்தையினை
சாவறைக்குக் கொண்டு செல்ல வழி செய்தது
சரியாகச் சுமந்து பெற்ற தாயவட் கன்றோ
கேவிக் கேவி அழுதரற்றும் துன்பமிங்கு
கேட்டுப் பெறக் குழந்தை யென்ன நுகர் பொருளா

2 மறுமொழிகள்:

said...

மற்றுமோர் நல்ல படைப்பு. தினசரி வாழ்க்கையின் செய்திகளை கவிதை வடிவில் படிப்பது வித்தியாசமாக இருக்கிறது. உங்களது மன ஓட்டம் தெளிவாகத் தெரிகிறது.

வாழ்த்துக்கள்

கோ.சேஷாத்ரி.

Anonymous said...

கவிதை அருமை