Friday, August 20, 2010

ராஜீவ் காந்தி

கள்ளமில்லா வெள்ளை மனக் கண்ணியத்தான்
ககனமெல்லாம் புகழடைந்த கனி மொழியான்
உள்ளமெல்லாம் பாரதத்தின் உயர்விற்காக
ஒரு கோடிக் கனவுகளைக் கொண்டிருந்தான்
வெள்ளமென பல உயர்வைத் தந்த தாயான்
விரிமனத்தோன் உதவிக்கே உதவி நின்றோன்
நல்லவனாய் இருந்த தனித் தலைவன் அவன்
நாடு இன்றும் நினைந்து போற்றும் ராஜீவ் காந்தி

1 மறுமொழிகள்:

said...

சர்வாதிகார சூழலிலும்
தான் சார்ந்த சங்கத்தின் சுரண்டலிலும்

கையை விடாத கண்ணியவான்
பாரதத்தை முன்னேற்றவந்த புண்ணியவான்

வேண்டாம் இந்த குட்டை வீணாகிப்போவேன் என்றாய்
வேண்டும் நீ என்றார்கள் உன் தாய் வராததால், எமன் அவரை திருப்பி தராததால்

வந்த சில நாட்களில் நீ தந்த சில யோசனைகள்
வெந்த புண்கள் பலவற்றை வேற்றுமை இல்லாமல் விலக்கின

பற்றி எறிந்த பஞ்சாபென்ன, கட்டவிழ்ந்த அஸ்ஸாமென்ன
அச்ச்மிலாமல் தேர்தலுக்கு ஆணையிட்டாய், ஆட்சி போனாலும் அமைதி வருமென

தொலைநோக்கு பார்வை இழந்து, தரித்திரத்துள் தள்ளப்பட்ட
பாரத தொழில்களை பலவற்றை புதியதோர் பாதைக்கு பாயவிட்டாய்

தொலைபேசியை பலருக்கு கொணர்ந்தாய்,
கணினியே எதிர் காலம் வெல்லும் என்றும் உணர்ந்தாய்

நல்லதை செய்ய வந்த ஒருவனுக்கு வில்லன்கள் இல்லாமலா?
நல்லவன் வேடம் போட்டு வந்த "வீ"ணன் ஒருவன்
பரிசுத்தத்தின் புதிய பிரசுரம் நான் என
பகட்டுடன் பிரச்சாரத்தில் இறங்கினான்

உன் தாய் மேல் இருந்த சந்தேகமும்
உன் தமையன் மேல் இருந்த கோபமும்
உன் மேல் ஊடகங்கள் மூலம் புகுந்தது

காந்தி வேடம் போட்ட அந்த சகுனி
உன் ஆட்சிக்கு அடிக்க நினைத்தான் சாவுமணி

கடின சூழலிலும் பாரதத்தின் எல்லையின் கடைகோடியில்
குருதி ஓடும் நிலையை கண்ணியமாக தீர்க்க நினைத்தாய்

காயம் பட்டவர்களையும் காயப்படுத்தியவர்களையும் கூப்பிட்டு
கூடிப்பேசுங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கட்டும் என்று வாதிட்டாய்

நல்லதை நினைத்த உன்னை தீயவனாக்க முயற்சிகள் நடந்தன பல
இன்று உன்பேரை சொல்லும் ஆட்சிக்கு உத்தமர்கள் போல் தோள் கொடுக்கும் சிலர்

தயங்காமல் தலையிட்டாய்,
வீம்பாளர்களையும் வேண்டிட்டாய்

செய்த நல்லவைக்கு பரிசு தரும் உலகம்
நீ செய்யாத தீமைக்கு பரிசொன்று தந்தது

உன் உடல் தீயில் வெந்தது!