Thursday, August 26, 2010

கோயிலும் தான் உனக்கில்லையே

தங்களுக்குத் தாங்களே சம்பளத்தைத்
தாறுமாறாய்க் கூட்டிக் கொள்ளும் தங்கங்களை
எங் களுக்கு நாடாளு மன்றத்திற்காய்
ஏன் தந்தாய் எம் இறைவா கோபம் என்ன
பங்கமிது என்றுணராப் பாவியர்கள்
பாவப்பட்ட மக்களையே நினைத்தாரில்லை
எங்களது மக்களவை எமக்கு இல்லை
என் செய்வாய் கோயிலும் தான் உனக்கில்லையே

3 மறுமொழிகள்:

said...

நாம் புலம்ப வேண்டியதே!

said...

வாழ்த்த வயதில்லை .. .
வணங்குகின்றேன் தமிழ்க்கடலே!

நேற்று,
நேரில் உம்மைக் கண்டோம்
நெஞ்சம் நெகிழ்ந்திடவே!
வலை தளத்தில் தங்களின்
இன்றைய செய்தி பார்த்தோம்
"எல்லோரும் இந்நாட்டு மன்னர்"
என்ற பாரதியின் வாக்கை
நம்முடைய நாடாளுமன்ற மன்னர்கள் நிறைவேற்றுகிறார்கள்
பாவம் இறைவன் !!
பார்த்துகொண்டு இருக்கட்டும் !!!
விட்டுவிடுவோம் .

said...

ஐயா,

நல்லபடைப்பு.

அடுக்கடுக்காய் குற்றங்கள் பல செய்தோர்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஊழல் செய்தோர்
காரணங்கள் பல கொண்டு நாடாளுமன்றம் செல்ல
நாணயம் தான் அவரிடமே கேட்கலாமோ
கோழைகளாய் வருந்துதலே நம்மக்கள் பழக்கமாகி
ஏழைகளோ இலவசங்கள் பின்னே செல்ல
படித்தாரோ பணம் பின்னே ஒடிச்செல்ல
வேள்விகளாய் கேள்விகளை யார்தான் செய்வார்?

கோ.சேஷாத்ரி