Tuesday, August 31, 2010

உச்ச நீதி மன்றத் தீர்ப்பு

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அது
உணர்த்துவது மனிதனாக வாழு என்று
கச்சை கட்டி நிற்பதல்ல அரசியலும்
கண்ணியமாய் மக்களையே காப்பதற்கே
புத்தி கெட்டு வெறி கொண்டு உயிர் பறித்தல்
புல்லர்களின் செயல் என்று உணர்த்துவது
சத்தியமாய் நீதி இந்த நாட்டில் இன்றும்
சரியாக இருக்கிறது சில நேரத்தில்

2 மறுமொழிகள்:

said...

ஐயா,

அன்று கொல்லும் அரசனுக்கே பத்தாண்டுகள் என்றால், நின்று கொல்லும் தெய்வத்துக்கு எத்தனை காலமோ?. தாமதமாய் வரும் தண்டனைகள் தவறை உணர்த்துமா?

கோ.சேஷாத்ரி

said...

ஐயா,

அன்று கொல்லும் அரசனுக்கு, ஆயின ஆண்டுகள் பத்து. நின்று கொல்லும் தெய்வத்துக்கு எத்தனை ஆண்டுகளோ?

கோ.சேஷாத்ரி.

பின் குறிப்பு - தண்டனை விதிக்கப்பட்டவர்களும், ஜனாதிபதியின் கருணைக்கு தகுதியானவர்களாம்.