Monday, September 24, 2012

தினமணி வைத்தியநாதன்

நபி பெருமானாரைப் பற்றி ஒரு அநாகரிகமான திரைப் படம் எகிப்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவர் எடுத்து அதை யு  டியுபில் போட்டிருக்கின்றார்.உலகம் முழுவதும் இருக்கின்ற   இஸ்லாமிய நண்பர்கள் போராட்டங்களில் ஈடு பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில்  சில பல தடவைகள் இந்துக் கடவுளரின் படங்களைக் காலணிகளில் போடுவது உள்ளாடைகளில் போடுவது என்று அநாகரிகங்கள் அரங்கேறின.

என்ன செய்வது மன நோயாளிகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் பெரிய பதவிகளில் வேறு இருந்து விடுகின்றனர்.

தினமணி ஆசிரியர் அய்யா வைத்தியநாதன் அவர்கள் ஒரு தலையங்கத்தில் எழுதியிருக்கின்றார். இஸ்லாமிய நண்பர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக. இன்னொரு கேள்வியயும் வைக்கின்றார். அமெரிக்க விமான நிலையங்களிலே நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களையும் நடிகர் ஷாருக்கான் அவர்களையும் அவமானப் படுத்திய போது இஸ்லாமியர்கள் ஏன் போராடவில்லை.

இன்றைக்கு தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் காப்பாற்றுகின்ற தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற தமிழ்ப் பெரும் புலவர் வைத்தியநாதன் அப்துல் கலாம் அவர்களைத்தான் அந்த விழாவிற்குத்  தலைமை தாங்க அழைத்திருந்தார்.

அவரிடம் இஸ்லாம் குறித்துக் கேட்டிருந்தால் அவர் வைத்தியநாதனுக்கு விளக்கம் அளித்திருந்திருப்பார். நபி பெருமானாரை ஒரு மன நோயாளி அவமானப் படுத்தியிருக்கின்றான். அந்த அநாகரிகமும் விமான நிலையச் ச்ம்பவங்களும் ஒன்றா.

நபி பெருமானாரை இறைத் தூதரை  பண்பாடற்ற முறையில் ஆபாசமாகச் சித்தரிப்பது எங்கே அந்த மிக மிக இழிந்த செயலை எதிர்த்துப் போராடுகின்ற இஸ்லாமிய சகோதரர்களை அப்துல் கலாமையும் ஷாருக்கானையும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தவறாகச் சோதனை செய்த போது ஏன் போராடவில்லை  என்று  எழுதியிருக்கின்றாரே. அது முறையா.

நான் குரான் முழுவதும் படித்திருக்கின்றேன். இறைவனை முழுமையாக நம்புகின்றவர்கள் இஸ்லாமியச் சகோதரர்கள். நாளை சந்திப்போம் என்றாலும் இன்ஷா அல்லாஹ் என்பர். அதன் பொருள் இறைவன் அனுமதித்தால் என்பது. ஆமாம் இரவே இறைவன் முடிவுகள் வேறு மாதிரி இருப்பின்.

ஏன் வைத்தியநாதன் இப்படி பண்பாடில்லாமல் பிற மதத்தவரைப் புண்படுத்தியிருக்கின்றார் என்பது புரியவில்லை.

அவரவர் தமதமறிவறி வகை வகை
அவரவர் இறையவர் என் அடி அணைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றாரே

என்றருளிச் செய்கின்றார் நம்மாழ்வார்.

தமிழைக் காக்கப் பெரும் பங்கெடுத்து உழைக்கின்ற வைத்தியநாதனுக்கு எப்படியும் ஆழ்வார்கள் பாசுரங்கள் அத்து படியாயிருக்கும். ஏன்  இந்த நம்மாழ்வார் பாசுரத்தை மறந்தார். வியப்பாக் இருக்கின்றது.

நாம் எல்லோரும் பாரதியைப் போற்றுவதை விட வைத்தியநாதன் பாரதியைப் போற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றார்.

அந்த மகாகவி எழுதுகின்றான் தனது கட்டுரைகளில் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் ஸல்லல்லாஹி அலைஹி வ்ஸ்ஸலம் என்கின்ற ந்பி பெருமானார் இறைத் தூதர் அறிமுகப் படுத்திய இஸ்லாம் மார்க்கமே  பெரிய மார்க்கமாகத் திகழும் என்று எழுதியிருக்கின்றார். பார்தியைத் தலை கீழாகப் படித்திருக்கின்ற பயின்றிருக்கின்ற வைத்தியநாதன் எப்படி இதனை மறந்தார்.

3 மறுமொழிகள்:

said...

Appa,

Padipathu enbathu veru, athan padi nadappathu enbathu veru thane appa ?

Anbudan
Deiveegarajan

said...

நன்றாக சொன்னீர்கள் அய்யா...பிரபலமான பத்திரிகையின் ஆசிரியரே இப்படி எழுதி இருப்பது,வருத்தத்தை ஏற்படுத்துகிறது.இதுபோலதான் மீடியாக்கள் நடந்து கொள்கின்றன.நல்லவேளை உங்களைப்போன்ற இஸ்லாத்தை பற்றி தெரிந்த நல் உள்ளங்களும் இருக்கிறீர்கள் எனும்போது சந்தோசமாக இருக்கிறது.நன்றிகள் பல.

said...

ஒருவர் செய்யும் தவறுக்காக எல்லாரையும் குற்றம் சொல்வது தவறுதான். ஒருவர் இஸ்லாமை முறையாகக் கடைபிடிக்கிறார் என்பதற்காக எல்லாரையும் உத்தமராக்குவதும் தவறுதான். அறப்போராட்டம் தவிற ஏனைய போராட்டங்கள் கிளர்ச்சியை உருவாக்குமே தவிற மக்கள் ஆதரவைப் பெற்றுத்தராது. தவிற சமூக விரோதிகள் இஸ்லாமை ஒரு காரணமாக்கி கலாட்டா செய்ய வாய்ப்புகள் உண்டே. தூதரகம் மூடப்பெற்றதனால் பணி கெட்டோர்கள் கலாட்டக்கார ர்கள் செய்யும் தவறுக்காக இஸ்லாமை ஏசமாட்டார்களா?