Thursday, September 27, 2012

சிந்திக்க வேண்டும்

சிவகாசி வெடி விபத்தில் வறுமையில் வாடிய ஏழைகள் வெடித்துச் சிதறியதில் பதைபதைத்துப் போனோம்.

நேற்று 22 அதிகாரிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

துறை அளவிலான விசாரணையா என்ன என்று தெரியவில்லை. நமது
வேண்டுகோள் அவர்கள் மீது கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்து கிரிமினல் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டும். ஏனெனில் வெடித் தொழிற் சாலைகள் எத்தனை ஆபத்தானவை அதற்கு அனுமதி அளிப்பதற்கு பின் பற்ற வேண்டிய நடைமுறைகள் எதையும் பின் பற்றாமல்  சில பல ஆயிரங்களுக்
காகவோ இல்லை பெரிய தொலைக் காட்சிப் பெட்டிகளுக்காகவோ இல்லை வேறு பொருட்களுக்காகவோ இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கின்றது.

அப்படி இருக்கையில் இவர்களை எப்படி விட்டு விடுவது. இன்னொன்றும் கூட
செய்வது நலம் பயக்கும். இவர்கள் ஊதியம் மற்றவற்றைக் கணக்கெடுத்து        
அளவிற்கதிகமாக அவர்களிடம் பணமோ சொத்தோ இருக்குமெனில் அதனை இந்தக் கொடியவர்களின் ஆசையால் தங்கள் உயிரை இழந்த அந்த ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

எல்லாத் துறைகளிலும் துறை அளவிலான விசாரணையாக இல்லாமல் முழுமையாக பணியில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொருவரும்  ஆண்டு தோறும் தங்களது சொத்துக் கணக்கினைத் தெரிவிக்க  ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அத்தனைக்கும் மேலாக நான் ஏற்கனவே எழுதியது போல அவர்களது இல்லத்
துணைவிகள் இது எத்தனை பெரிய கேவலம் என்பதனை உணர்ந்து இதனால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன் என்பதனை உணர்ந்து தங்கள்
கணவன்மார்களின் தவறான வருவாய் முயற்சிகளைத் த்டுக்க வேண்டும்.

வெடித்துச் சிதறிய பெரியவர்கள் இளைஞர்கள் குமரிகள் குழந்தைகள் அவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா. இவர்கள் குழந்தைகள் நோய்களுக்கு ஆளாக மாட்டார்களா. சிந்திக்க வேண்டும்

2 மறுமொழிகள்:

said...

தற்போது நோட்டீஸ் வந்துள்ளது . இன்னும் ஒரு மாதம் கழித்து இவர்கள் வீடுகளை சோதனை செய்வார்கள். இந்த செய்தி எல்லா தொலைகாட்சி களிலும் வரும். நமக்கே மெய் சிலிரிக்கும். அஹா நீதி கிடைத்து விட்டது என்று. ஒரு நான்கு நாள் கழித்து உயர் நீதி மன்றம் இவர்களிக்கு ஜாமீன் அளிக்கும்.

எப்படியும் தீபாவளி அன்று புது படம் போடுவார்கள். பட்டாசும் கொளுத்துவோம். சிவகாசி ஞாபகம் இருக்குமா என்ன ?

விதியே விதியே என் செய நினைத்தாய் என் தமிழ் சாதியை என்ற வரிகள் தான் ஞாபகம் இருக்குமா ?

said...

நாள் கடந்தாலும் காட்சி மாறவில்லை. இன்றும் ஒரு விபத்து