Sunday, November 29, 2009

சிரித்து நிற்பார்

இரண்டு பக்கக் கதை அன்று பொன்னகரம்
இன்று வரை உயிரோடு இருக்கின்றது
மிரண்டதன்று தமிழுலகம் புதுமைப் பித்தன்
மீட்டெடுத்தார் தமிழ்க் கதையைப் பெருமையுற்றோம்
வறண்டு போய் பல பக்கம் எழுதுகின்றார்
வாழ்த்துகின்றார் அவரையுமே பெரியர் என்று
நிறைந்த நல்ல தமிழறிஞர் இவர்களையே
நெஞ்சினிலே கொள்வதில்லை சிரித்து நிற்பார்

1 மறுமொழிகள்:

said...

தமிழ் மக்கள் நல்லவர்கள்
ஆனால் அவர்களை வழி நடத்தும் தலைவர்கள் சுயநல பிசாசுகள்
குறுகிய வட்டத்திற்குள் மக்களை கூண்டில் அடைத்து வைத்துவிட்டார்கள்
சேவலையும், சேவலையும் கொலைவெறியோடு மோதவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியுறும் மனித மிருகங்கள் போல் மனிதர்களை மோதவிட்டு அதில் மடியும் உயிர்களை கண்டு இன்பங்காணும் கூட்டம்.
மைய்ய அரசு ஆஸ்திரேலியாவில் சில இந்திய மாணவர்களை துன்புருத்தப்பட்டதற்கு பதறுகிறது
பிரான்சே நாட்டில் 2 பயணிகளை விமான நிறுவனம் அவமானபடுத்தியதற்கு ஆங்கில ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றன,
இலங்கையில் ஆயிரக்கணக்கில் உயிரோடு தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதற்கு அறிக்கை விட்டுகொண்டிருக்கிறது.அங்கே அவன் தடயங்களை அழித்துகொண்டிருக்கிறார்.
ஆள்பவனோ தன் மகனுக்கு மந்திரி பதவி தேடி அலைந்து கொண்டிருக்கிறான்
இங்குள்ள தமிழ் மக்கள் ஆட்டு மந்தைகள் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?
கசாப்புக் கடையில் ஒரு ஆடு வெட்டப்படும்போது அருகில் நிற்கும் ஆடு புல்லைத் தின்றுகொண்டிருப்பதைப்போல்தான் இந்த செயலும்.
தமிழ் மக்கள் என்று பெயரளவில் ஒரு இனம் இருப்பது அர்த்தமற்றது. தன்னை காப்பாற்றிக்கொள்ள திராணியற்ற இந்த இனம் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டுவிட்டதாம்.
ஆனால் தமிழன் செங்குருதிசொட்ட சொட்ட பிணமாக மிதந்துகொண்டிருக்கிறான்