Wednesday, November 25, 2009

இயலாராகி

ஆங்கிலத்துப் பள்ளிகளில் தங்கள் வீட்டு
அருமை மிகு பிள்ளைகளைச் சேர்த்து விட்டு
தாய் மொழியின் பெருமைகளை மற்றவர்க்கு
தடித்தனமாய்ப் போதிக்கும் தாக்கரேக்கள்
ஒங்கி இங்கே நிற்பதனைப் பார்த்துக் கொண்டு
ஊமையாய் இருக்கின்ற ஆட்சியாளர்
தாங்குகின்றார் தங்களது பதவிகளைத்
தடுத்தவரைத் தண்டிக்க இயலாராகி

1 மறுமொழிகள்:

said...

இன்று தமிழன் என்று எவனாவது இருக்கிறானா? தமிழன் என்று எவனுமே கிடையாதே
தமிழை முறையாக கற்றவன் முனைவர் பட்டம் பெற்று அதை கொண்டு அதிக ஊதியம் பெறுவதி லும்,நூலகங்களில் தூங்குவதற்கு என்றே புத்தகங்களை வெளியிட்டும் , தொலைகாட்சிகளில் தோன்றி,பட்டிமன்றம், விவாதம் போன்றவற்றில் இணைத்துக்கொண்டு பொழுதை போக்குகின்றான்.
பாடல் எழுதுபவன் தமிழர்களை திட்ட்டி கொண்டே திரைபடத்தில் லக்கா முக்க பாடல்களை எழதிவிட்டு சில லகரங்களை சுருட்டுவதில் குறியாய் இருக்கிறான்.
நகரத்து தமிழர் முதல் பட்டிகாட்டு தமிழர் வரை ஆங்கில கல்வி மோகத்தில் மூழ்கி கிடைக்கின்றனர்
அடித்தட்டு தமிழனோ ஜாதி, அரசியல்,மதம்,அறியாமை,விவேகமின்மை என கணக்கற்ற பிரிவுகளாக சிதறி போய் சிந்திக்கும் திறனின்றி கிடக்கின்றான்.
தமிழகஅரசியல்வாதிகள் மக்களை பிரித்து வைத்து அவர்கள் உணர்ச்சிகளை தூண்டி தங்கள் வயிற்றை நிரப்பி கொள்வதிலேயே கூறாக இருக்கிறார்கள்
பொதுவான தமிழன் சினிமா, அரசியல்,பட்டைசாராயம் ,மது, பேராசை, பொறாமை,உள்ளிட்ட அனைத்து தீய அழிக்கும் குணங்களுக்கு ஆட்பட்டு அவல நிலையில் இருக்கின்றான்.
அவன் கிடக்கின்றான் குடிகாரன் ,எனக்கு போடு ஒரு மொந்தையை என்றானாம் ஒரு குடிகாரன்
அதுபோல்தான் இருக்கிறது இன்றைய தமிழ் சமுதாயம்