Monday, November 30, 2009

சுவாமி விவேகாநந்தர்

தீண்டாமைக் கொடுமையினை நெஞ்சுள் வைத்துத்
தெய்வத்தின் பெருமையினை சொல்வார்தம்மை
தீண்டாமல் இறைவன் அவன் தூர வைப்பான்
தெய்வத்தின் படைப்பன்றோ அனைவருமே
ஆண்டவனைக் கண்டவர் போல் நடிப்பார் எல்லாம்
ஆபாசம் ஆபாசம் என்றே சொல்வேன்
வேண்டுதலை விரும்பவில்லை ஆண்டவனும்
வினையாற்றி வினையாற்றி வெல்லச் சொன்னான்

1 மறுமொழிகள்:

said...

உண்மை தமிழன் யார் தெரியுமா?
ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும் என்று எண்ணிய வள்ளலாரின் வழி வந்தவர்கள்
வாடி நின்ற பயிரை கண்டு மனம் வாடியவர்கள்
எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டுவதை தவிர வேறொன்றும் அறியாதவர்கள்
குளிரில் வாடி நின்ற மயிலுக்கு போர்வை அளித்த மன்னனை கொண்ட பரம்பரை
கன்றை இழந்த பசுவிற்கு தன் மகன் என்றும் பாராமல் தண்டனை வழங்கிய மன்னர் பரம்பரை
கடந்த காலம் இப்படி இருக்க நிகழ்காலமோ ஒற்றுமையின்றி இருக்கிறதே இந்த தமிழ் சமூகம் என்றுதான் இது திருந்துமோ?