Thursday, September 27, 2012

கவுதம் இளங்குருத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்

விஜய் தொலைக் காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஒரு தமிழ்ச் சிறுவன் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்தவன் கவுதம் இறுதிச் சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளான்.

அதிலும் நீதியில்லை. போட்டியாளர்கள் நால்வரும் பாடி முடித்த பின்னர்தானே மதிப்பெண்கள் அடிப்படையில் யார் முதல் யார் இரண்டாவது யார் மூன்றாவது என்று தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

இரண்டு பேர் பாடி முடித்தவுடனே மலையாளத்து பெரிய ஜாதிப் பெண் சுகன்யா 104 மதிப்பெண்ணோடு முதல் மதிப்பெண் என்று அறிவிக்கப் பட்டாள்.
கவுதமும் யாழினியும் பாடும் முன்னரே எப்படி அவர்கள் இதை விடக் குறைந்த மதிப்பெண் தான் எடுப்பார்கள் என்று கருதினர்.

அடுத்து யாழினி என்ற பெண் சிறப்பாகப் பாடியும் அவளுக்கு மதிப்பெண் வழங்குவதிலே அநீதி இழைக்கப் பட்டது.

அதன் பின்னர் ப்ரக்தியும் கவுதமும் பாடிய பின்னர் கவுதத்திற்கு சொர்க்கம் மதுவிலே என்ற பாடலுக்கு 10 மதிப்பெண்களைத் தந்த மால்குடி சுபா அவன் மிக அருமையாகப் பாடிய சின்ன் சின்ன் ரோஜாவே என்ற பாடலுக்கு வெறும் 7 மதிப்பெண்களே தந்தார். இறுதியாகப் பாடிய இளையராஜாவின் மிகச் சிறந்த
நந்தா என்ற படத்தின் ஒராயிரம் என்ற பாடலை மிக மிகச் சிறப்பாகப் பாடியும்
அவனை சீனிவாஸ் வேறு பாடல் பாடியிருக்க வேண்டும் என்றார். மனோ என்கின்ற அந்த இஸ்லாமிய நண்பருக்கு அந்த தாழ்த்தப் பட்ட சிறுவன் மேல் என்ன வெறுப்பு. புரியவில்லை. மால்குடி சுபா அது போராட்டப் பாடலே அல்ல என்கின்றார்படத்தையும் பாடலையும் புரிந்து கொள்ளாம்லே. கொடுமை. எப்படி ஒரு தாழ்த்தப் பட்ட சிறுவனை ப்ரகதி என்ற அமெரிக்க்க் குடிமகள் மேல் ஜாதிப் பெண்ணிற்கு மேல்  விடுவதுஎன்கின்ற வெறுப்பு. திட்டமிட்டு8
மதிப்பெண் என்றார். மிக மிக பெரிய பணம் படைத்த பெண்ணிற்காக கவுதமிற்கு மதிப்பெண்களை குறைத்து ஒரு மதிப்பெண்ணிலே ப்ரகதி என்கின்ற பெண்ணை இரண்டாமிடத்திற்குக் கொண்டு வந்தனர்.

இன்னொரு கொடுமை அந்தப் பெண் ப்ரகதி தனக்கு வழங்கப் பட்ட நகைகளை
கவுதமிற்கும் யாழினிக்கும் வழங்கி அவர்களின் மேல் தட்டு உணர்வை மிகச்
சாமர்த்தியமாக வெளிப் படுத்தினர். ஏன் கவுதமின் பெற்றோரும் யாழினியின் பெற்றோரும் இதற்கு இத்தனை ஏமாளித்தனமாக ஒத்துக் கொண்டனர்.

போட்டியில் இருக்கும் போது இன்னொரு போட்டியாளர் தருகின்றார் என்பதெல்லாம் பச்சைப் பொய்.மறைமுகமாக கறுப்பர் இன ஏழைக் குழந்தைகளை கேவலப் படுத்திய செயல்.

இதுவரை நான் எனதருமை தமிழர்களே உங்களிடம் ஏதும் கேட்டதில்லை. தமிழினத்தின் ஒரே சிறுவனாக போட்டியில் நிற்கின்ற கவுதமிற்கு எஸ்/எம்.எஸ். மூலம் வாக்குகளை அள்ளித் தாருங்கள். சூழ்ச்சிக் களத்தில்
வெள்ளை மனத்தவராக நிற்கும் கவுதமையும் அவனது பெற்றோர்களையும்
பாருங்கள். தன் திறமையைத் தவிர வேறு எந்த சிபாரிசிற்கும் வழியில்லாத
அந்த இளங்குருத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.

2 மறுமொழிகள்:

said...

அப்பா,

கெளதம் தான் வெற்றி பெறுவான். அந்த அந்த பாட்டிற்குரிய உணர்சிகளோடு பாட அங்கே அவனை தவிர வேறு யாரும் இல்லை. அது இயற்கையானது .

அவன் பாடிய உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் இன்னும் எங்கள் மனதில் அப்படியே உள்ளது அன்று விஜயன் பேசியது போல.

வெற்றி விழா நெல்லையில் தான்.

அன்புடன்
தெயவீகராஜன்

said...

கவுதமை வெற்றி பெற செய்வோம்.
அன்புடன்,
முத்து