Saturday, January 3, 2009

சிரித்திங்கு மகிழுகின்றார்

பொய்யான புகழுரைப் போலியாய் விருதுகள்
பொறுப்பற்றோர் வழங்குகின்றார்
பொறுப்பினில் இருப்பவர் பொறுப்பின்றி அதை ஏற்றுப்
புழு மனம் காட்டுகின்றார்
மெய்யான அறிஞர்கள் கவிஞர்கள் புலவோர்கள்
மேனிலை எய்துகின்றார்
மேன் மக்கள் என்பதே விருதுகள் ஏற்காத
மெய்ம்மை என்றுணர்த்துகின் றார்



அய்யகோ அய்யகோ அய்யகோ இவர்களை
அறிந்துமே வணங்குகின்றார்
அடிமைகள் போல் மிக மிகக் குனிந்தே இவர்
அகங்காரம் போற்றுகின்றார்
செய்யாத செயல்களில் சிறப்பானோர் இவர் என்று
சீரற்றுப் போற்றுகின்றார்
சீரற்ற இவர்களோ கேவலம் இன்றியே
சிரித்திங்கு மகிழுகின்றார்

2 மறுமொழிகள்:

said...

ஆமாங்க அப்படிதாங்க இருக்கு உலகம்... மன்னிக்கவம் நம்ம நாடு.

said...

நெல்லை கண்ணன் அய்யா,

நீங்கள் இவ்வாறு உலக மகா ஜால்ரா மானமிகு அய்யாவையும்,ஆயிரம் பட்டம் பெற்று அரியணை ஏறிய தமிழினத் தலைவரையும் கிண்டல் செய்வது தகுமா?

பாலா