கமல் என்னும் பெரு நடிகன் மதத்தைப் பற்றிக்
கருத்ததனைச் சொல்லி நின்றார் மகளிடத்தில்
மதவுணர்வைக் காமம் போல் வீட்டிற்குள்ளே
மறைத்து வைக்க வேண்டும் என்று மிகச் சிறப்பு
இதமற்றக் தன் காம வாழ்க்கை தன்னை
எல்லார்க்கும் காட்டி மகிழ் கமல் தான் சொன்னார்
விதம் விதமாய் நடிக்கின்றார் என்ன சொல்ல
வீட்டு மகள் கடவுளினை வணங்குவாராம்
தன் மகளின் நம்பிக்கை அதுவாம் கமலார்
தான் அதனைச் சொல்லுகின்றார் மகளிடத்தில்
என் கேள்வி ஒன்றே தான் அய்யா உங்கள்
இனிய மகள் பகுத்தறிவை வளர்க்கா நீங்கள்
எம் மக்கள் தமக்கு இதைச் சொல்லுதற்கு
எதற்காக முயலுகின்றீர் சரியா சொல்லும்
உம் வீட்டில் உம் கொள்கை இல்லை பின்னர்
ஊருக்கு உபதேசம் எதற்கு அய்யா
Thursday, November 18, 2010
கமல் உபதேசம்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
நியாயமான கேள்வி.. கமல் மட்டும் தானா இப்படி?. பெரும்பாலான தலைவர்களின் வேலையே நாட்டுக்கு மட்டும் உபதேசம். என்று மாற்றம் வருமோ?
Well questioned. He will not find answer for this.
Post a Comment