Wednesday, December 19, 2012

இவை தொடரும்

இந்தியத் தலை நகரத்தில்  நண்பரோடு பேருந்தில் இரவில் பயணம் செய்த மாணவி ஒருவர் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளார்.
கேரளாவில் தந்தையும் உடன்பிறந்தவனுமே தங்கள் வீட்டுப் பெண்ணைக் தொடர்ந்து  கற்பழித்து வந்துள்ளனர். எதிர்த்த வீட்டு அயோக்கியன் ஒருவன் தன் சின்னஞ்சிறு மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் என்று அவனைக் கொல்லாமல் தன் மகளை ஒரு தந்தை கொன்றிருக்கின்றான்.

உலகத்திற்கே  வழி காட்டுகின்ற ஞானியர் பலர் தோன்றிய நாடு.

பாரத நாடு பழம் பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்
நினைவகற்றாதீர் என்றான் பாரதி.

ஒழுக்கம் சொல்லித் தரப்படாத காவற்றுறை.எல்லாவற்றிற்குள்ளும் சாதீய வெறியுணர்வு.  காவற்றுறைக் குள்ளே இருக்கின்ற பெரும்பான்மை சாதீயினர் அவர்கள் சாதிக் குற்றவாளிகளைக் காப்பாற்றச்செய்கின்ற அக்கிரமங்கள்.
செவிலியர் வேலை ஆசிரியை வேலைக்கு சிபாரிசு தேடி வரும் பெண்களை
வீழ்த்தும்  சட்டப் பேரவை உறுப்பினர்கள் நாடாளும்ன்ற உறுப்பினர்கள். விமானப் பணிப் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் அமைச்சர் பெருமக்கள்.
தன் வீட்டுப் பெண்களைத் தவிர மற்ற பெண்களுக்கு பொய்யான விடுதலையைப் போதிக்கும் படைப்பாளிகள்.

சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் இந்தக் குற்றவாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்கின்றார். உடனே  மரண தண்டனையை எதிர்க்கும் மனிதநேய பிரமுகர்கள் என்ற போர்வையில் சில பெரிய சிந்தனையாளர்கள் கருத்துப் பரிமாற்றம்  தொலைக் காட்சிகளில். தொடங்கி விடும்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற மனித நேயப் பிரமுகர்கள் பலர் ஒரு ஏழைத் தமிழன்
ம்துரை ஆதீனமடத்தில் அன்னதானம் சாப்பிடப் போனவனை நித்தியானந்தா
வின் சீடர்கள் பலமுறை காலால் உதை உதை என்று உதைத்ததை பல தொலைக்காட்சிகள் பல முறை காட்டியும் அது குறித்து எந்த வித வருத்தமும் கண்டனமும் தெரிவிக்காத போது தான்  அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர்.

இன்னும் ஒரு வாரம் இது குறித்து இந்தச் சிந்தனையாளர்கள் எல்லோரும் ஆங்கிலத்திலும் பின்னர் அவரவர் மொழிகளிலும் கண்டனக் குரல்களை
பல் வேறு ஆய்வறிக்கைக்ளோடு மக்கள் முன் வைப்பார்கள்.

கடுமையான தண்டனை தர வேண்டும் என்பதில் எல்லொரும் ஒருமித்த குரலில் கூப்பாடு போடுவார்கள். எல்லாம்  பம்மாத்து என்பது இன்னும் ஒரு வாரத்தில் மக்களுக்குத் தெரிந்து விடும். சாதி வெறியையும் மத வெறியையும் தூண்டி விட்டுப் பிழைக்கின்ற அரசியல் ஒழிகின்ற வரை இந்தக் கொடுமைகள்
தொடரும் .

2 மறுமொழிகள்:

said...

ஐயா!இந்த சம்பவத்தைபற்றிய கருத்து அலசெல்கலெல்லாம் அடுத்த கிரிக்கெட் பந்தயம் தொடங்கும் வரைதான்.பின்னர் இதை மறந்துவிட்டு நாட்டுப்பற்றுடன் இந்திய அணிக்கு ஆதரவளிக்க சென்றுவிடுவார்கள்.தவறுகளை களைந்து ஒரு துய்மையான வாழ்க்கை வாழ்வது எப்படி என்ற சிந்தனை மாறி தவறுகளுடனே சமரசம் செய்துகொண்டு வாழ்வது என்பதே வாழ்வியல் முறை என்றாகிவிட்டபிறகு நியாயங்களை எதிர்பார்த்து பிரயோஜனமில்லை.ஆமைகளை சுகப்படுத்துவதுபோல் சுடுநீரில் இட்டு பிறகு நீரின் சூட்டிலேயே அவற்றை கொன்றுவிடுவதுபோல் மக்களும் தொலைநோக்கு பார்வையின்றி சாதி,மதம்,போலி நாட்டுப்பற்று ஆகிய மாயைகளில் மாட்டிகொண்டிருக்கும் வரை விவேகமில்லாத பரபரப்புகலே அவர்களை ஆட்டுவித்துகொண்டிருக்கும்.

said...

இத்தகைய நிகழ்வுகள் மூலம் நம் சமுகத்தில் தலையில்லா முண்டங்கலாகவும், வெறும் உணர்சிகளால் நிரப்பப்பட்ட பிண்டங்களாகவும் திகழும் மனித உருகொண்ட ஜந்துக்கள் வாழ்ந்துகொண்டிருப்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.
நம்மவர்கள் என்றும் எப்பொழுதும் ஏதாவதுஒன்றின் வசமானபடியேதான் இருப்பர்.அதிலும் அறிவுவசப்படுவதைவிட உணர்சிவசப்படுவதே அதிகமாக இருக்கும்.
தன் வசப்பட்டவன் அனைத்து உயிர்களையும் தன் உயிர்போல் பாவித்து வணங்குவான்.அறிவு வசப்பட்டவனுக்கு தன் உணர்சிகளை அடுத்தவர்களுக்கு பாதிப்பின்றியேனும் வெளிப்படுத்த தெரிந்திருப்பான்.ஆனால் உணர்சிவசப்பட்டவனுக்கோ தன் உணர்ச்சியும் தெரியாது அடுத்தவர் உணர்ச்சியும் புரியாது.
குழாயடி சண்டை முதல்,குடும்ப சண்டை,விளையாட்டுக்கான சண்டை,சாதி சண்டை,மத சண்டை அனைத்தும் உணர்சிவசப்படுவதாலேயே நிகழ்கின்றன.
பக்தி,பாசம்,அன்பு,கோபம்,காதல்,காமம்,அதிகாரம்,வருத்தம்,வெற்றி,தோல்வி, போதை,ஆகிய உணர்சிகளை நம்மில் பலருக்கும் முறையாக வெளிப்படுத்த தெரிவதில்லை.
எல்லாவற்றிலும் ஒன்று சவம்(உணர்சியற்றநிலை) அல்லது உச்சம்,நம்புவது அல்லது வெறுப்பது, ஆகிய ஏதேனும் ஒரு நிலைக்குள் தான் நாம் இருக்கிறோம்.
எதைப்பற்றியும் நடுநிலையோடு தெளிவாக அறிந்துகொள்ளும் பக்குவம் நம்மிடம் இல்லாதது ஒரு பெரும் குறைதான்.அதுவே நம்மை பல துன்பங்களுக்கு ஆளாக்கிவிடுகிறது.
கும்பலாக பொது இடத்தில் நடந்த வன் புணர்ச்சிக்கும்,கடுமையான தண்டனைகளுக்கு எதிராக மனித உரிமை கழகத்தினர் கூப்பாடு போடுவதற்கும்,தொலைநோக்கு பார்வையின்றி ஒரு பரபரப்பு செய்தியாக நாம் படித்துகொண்டு செல்வதற்கும் அத்தகைய ஒரு தெளிவின்மையே காரணமாகும்.