Tuesday, December 25, 2012

டில்லியும் தமிழ்நாடும்

நெல்லை மாவட்த்தில் ந்டந்த பள்ளி மாணவி பலியல் வன்முறையில் கொல்லப் பட்டது குறித்து எந்த அரசியல் கட்சியின் தலைவருமே கருத்துத் தெரிவிக்கவில்லை என்று கருணாநிதி வருத்தம் கொண்டிருக்கின்றார்.

டில்லி சம்பவத்திற்கு அவரே முதலில் கருத்துத் தெரிவிக்கவில்லை. அவர் ஆட்சி நடத்தும்போது  தான் பாலியல் குற்றங்களே அதிகப் பட்டன என்பதை மறந்தவாறு. உடனே இன்றைய அரசு கருணாநிதி ஆட்சியில் நடந்த பாலியல் குற்றங்களைப் பட்டியல் போட்டுக் காட்டும். இது நம்முடைய தலைவிதி.

டில்லியில் மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய போராட்டத்தில் பா.ஜ.க. இளைஞரணியும் பாபா ராம்தேவின் கூட்டமும் கெஜ்ரிவாலின் ஆட்களும் நுழைந்திருக்கின்றார்கள். அந்தக் கூட்டத்திற்குள்ளேயே பாலியல் கூத்துக்கள் அரங்கேறியிருக்கின்றன.

இதுதான் நம் நாட்டின் பெரிய துன்பம். அன்னா ஹசாரே இன்னும் வாய் திறக்கவில்லை.

                                       பாராட்ட வேண்டும்

யாருக்காகவெல்லாமோ பேசி தன் வாழ்நாளை வீணடித்த நண்பர் வை.கோ.(நானும் தான்) நாட்டின் எதிர்காலம் குறித்த சிந்தனையில் இளைஞர்களையும் ஏழைகளையும் வதைக்கின்ற வாழ்விழக்க வைக்கின்ற மதுவினை எதிர்த்து போராடுகின்றார்.
வாழ்த்தி அவருக்கு உதவி செய்வோம்.


                                  சாதி வெறியூட்டும் ராமதாஸ்

ஏதோ மேல்சாதிக்காரர்கள் தான் சாதியை உருவாக்கினார்கள் என்று காலமெல்லாம் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி என்று நண்பர் திருமாவளவனால் பட்டம் சூட்டப் பட்ட ராமதாஸ் இன்று சாதிய
பிரிவுகளைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றார். அவரது இயக்கத்திலேயே பல பெரியவர்கள் தங்களை விட மேல் சாதி பெண்களைத் திருமணம்  செய்துள்ளனர். அது குறித்து ராமதாஸ் ஒன்றும் சொல்ல மாட்டார். தாழ்த்தப் பட்ட இளைஞ்னுக்கு காதல் வரக் கூடாது. அவ்வளவுதான்.


                                   தம்பி சம்பத்

தம்பி நாஞ்சில் சம்பத் அவர்கள் நெல்லையில் அ.இ.அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது கழுகு துரத்திய புறாவாக சிபிச் சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுந்ததாக பேசினாராம். எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு கழுகு இத்தனை நாட்களாக அந்தப் புறாவை ஏன் வளர்த்தது என்பது தெரியவில்லை.

18 ஆண்டுக்காலம் தன்னை விட மூத்த இயக்கத்தவர்கள் தகுதியோடு இருந்தவர்கள் இருந்த போதும் வை.கோ.வை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த கருணாநிதிக்கு வை.கோ.செய்த அதே நன்றியைத் தான் தம்பி சம்பத் வை.கோ.விற்கு செய்து கொண்டிருக்கின்றார்.

1 மறுமொழிகள்:

said...

ஐயா! குடி பழக்கத்தால் பலகுடும்பகள் சீரழிந்து வருவதுகண்டு வைகோ அவர்கள் மதுவினை எதிர்த்து போராடுவது பாராட்டுக்குரியதுதான்.ஆனால் இதில் இன்னுமொரு முக்கியமான விஷயம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.
மதுபான தொழில்சாலைகளில் பெரும்பாலும் பெண்களே அதுவும் திருமணமாகாத பெண்களே பணிக்கு அமர்த்தபடுகிரர்கள்.இவர்களுக்கு மாத உழியமும்,வேலையிலிருந்து நிற்கையில் கணிசமான தொகையும் வழங்கப்பட்டுவருகிறது.
வெளிப்படையாகப்பார்த்தால் இது ஏழை பெண்களில் பொருளாதார தேவையை ஒரு விதத்தில் நிறைவு செய்வதாக தெரிந்தாலும்,தங்களை அறியாது தங்கள் வாழ்வை தாங்களாகவே கெடுத்துகொண்டிருப்பது அவர்களுக்கு புரியவில்லை.
இவர்கள் சம்பாரிப்பதற்காக உற்பத்தி செய்யும் மதுவே இவர்கள் குடும்ப இழிநிலைக்கு காரணம் எனும் விழிப்புணர்வு அப்பெண்களுக்கு இல்லாமல் போனது துரதிஷ்டமே.இவர்கள் உற்பத்தி செய்யும் மதுவை இவர்களது தந்தை,சகோதரர்கள்,சகோதரிகளின் கணவர்கள்,எதிர்காலத்தில் இவர்களுக்கே வரப்போகும் கணவன்மார்கள் முதலியோர் தான் அருந்துகின்றனர்.
தங்கள் உழைப்பின் மூலம் வரும் பணத்தையும்,உடல்நலத்தையும் கெடுத்துக்கொண்டு பின்னர் தங்கள் மனைவி,குழந்தைகளது நல்ல வாழ்வையும் கெடுக்கின்றனர்.ஆனால் இதைப்பற்றி எந்த சிந்தனையும் இன்றி பெண்கள் இருப்பது வேதனை அளிக்கிறது.
மதுவில்லா சமுகத்தை பெண்கள் நினைத்தால் மட்டுமே கொண்டுவரமுடியும்.இதுசார்ந்த நடவடிக்கைகளே தமிழகதிற்கு தற்போது தேவை.
எனவே மதுவிற்கு எதிரான போராட்ட நடவடிக்கைகளில் இத்தகைய பெண்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இருக்கவேண்டியது அவசியம்.
பொருளாதார தேவைகளுக்காக பெண்கள் வேலைக்கு செல்வதாக இருந்தாலும் இத்தகைய வேலைகளைதவிர்த்து கைத்தொழில்கள்,விவசாயவேலைகள்,போன்ற வேலைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்.அவை அதுசார்ந்த பெண்களுக்கும்,சமுதாயத்திற்கும் நன்மைபயக்கும்.
தங்கள் வாழ்க்கையை நாசமாக்கும் மதுவியாபாரத்தை எதிர்த்து பெண்கள் போராடாமல் படிதாண்டா பத்தினிகளாக வீட்டிற்க்குள் முடங்கி இருப்பது வியப்பாக உள்ளது.நமக்கு வேண்டியதையும் வேண்டாததையும் நாம் தானே முடிவு செய்ய வேண்டும்?