Saturday, December 22, 2012

இறைவன் என்ன செய்யப் போகின்றான்

நேற்று இந்திய அரசின் உள்துறைச் செயலர் டில்லி காவற்றுறை சிறப்புறச் செயல் பட்டதாக சான்றிதழ் தந்துள்ளார். ஆனால் புள்ளி விபரங்கள் த்ரும் போது அசிங்கப் பட்டுள்ளார். ஆமாம் புது டில்லியில் சென்ற வருடம் பதிவான் பாலியல் வன்முறை வழக்குகள் 651 என்கின்றார்.புது டில்லி முதல்வர் அவரின் கூற்றை மறுத்தூள்ளார். நேற்று எங்கள் நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 14 வயதுப் பெண் பாலியல் வன்முறையில் பலியாகின்றார். தமிழ்நாட்டுக் காவற்றுறை கணக்கின்படி அநேகமாக சென்ற ஆண்டு பாலியல் வன்முறை கணக்கு டில்லிக்குக் குறையாததாக இருக்கின்றது.

பணக்கார வீட்டுப் பிள்ளைகள் கைதாக மாட்டார்கள். ஏழைகள் எனில் உடனே கைது செய்யப் படுவார்கள். பணக்காரர்களுக்காக ஏழைகளின் வ்றுமை விலை பேசப் பட்டு ஏழைகள் அந்தக் குற்றங்களைச் செய்ததாக சிறைக்குச் செல்வார்கள். முன்னாள் நீதிபதி தர்மாதிகாரி என்பவர் மரண தண்டனை கூடாது என்கின்றார்.

நமது நாடு தாய் நாடு ஒடுகின்ற நதிகள் அனைத்தின் பெயரும் பெண்ணின் பெயர்கள். இறைவன் என்ன செய்யப் போகின்றான்.

1 மறுமொழிகள்:

said...

ஐயா!நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளதால் அவள் தன் செவிவழி கேட்க்கும் குறிப்பைவைத்தே வழிஉணர்ந்து பயணிக்கிறாள்.துரதிஸ்ட்டவசமாக நேர்மையற்றோரே அவளைநெருங்கி பலமான குரலில் தவறாக வழிகாட்டிவிடுகிறார்கள்.அதனால் நீதிதேவதை தான் நியாயமாக செல்லவேண்டிய இலக்கு மாறி நல்லோர் செல்ல மறுக்கும் ஒரு தவறான இடத்திற்குசென்றுவிடுகிறாள்.
ஊர் கூடி தேரிழுக்க வடம்பிடிக்கையில் திருவிழாவிற்க்காக உண்மையாக உழைத்தொரேல்லாம் பின்னுக்குநிற்க நோகாமல் காரில் வந்திறங்கும் கனவான்களுக்கு மட்டும் தேருக்கு அருகில் வடக்கயிறு பிடிக்க முன்னுரிமை தரப்படும். அவ்வாறு வடம் பிடிப்போரும் தத்தம் வீடுகளுக்கு தேரை இழுத்துகொண்டுபோனால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது இன்றைய நீதித்துறை
மேலும் நீதிதேவதியின் பாதையில் ஒதுங்க கூட சாமானிய மக்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டுவருகிறது.இந்த இழிநிலைக்கு வழக்குரைஞர்கள்,நீதிபதிகளின் செயல்பாடுகளும் ஒரு காரணம்.
அனைத்து துறைகளையும் போலவே நீதித்துறையிலும் சில நிறுவாக காரணங்களுக்காக பல வழிமுறைகள்,விதிமுறைகள் ஏற்ப்படுத்தப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.
அத்தகைய வழிமுறைகள்,விதிமுறைகள், மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகளை முறைப்படி அறிந்தவர்களாகவும்,தன்னை நாடிவரும் பொதுமக்களுக்கும்,நிறுவங்களுக்கும் அத்தகைய வழிமுறைகளின்படி செயலாற்றும் சட்டத்தின் பிரதிநிதியாகவும் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கலே வழக்கறிஞர் என்போர்.
வழக்கறிஞர்களின் பணிஎன்பது வங்கியில் நாம் செலுத்தும் அல்லது பெறும் பணத்தை நிர்வாகத்தின் வழிமுறைப்படி கணக்கு வைத்து, உரிய நிர்வாகத்திடம் சேர்க்க வங்கிப்பணியாளர் பணியாற்றுவதுபோல தன்னிடம் வரும் கட்சிக்காரரின் செயல்பாடுகளில் உள்ள சட்டதிற்குஉகந்த மற்றும் சட்ட மீறல்களைபற்றியும்,தனது கட்சிக்காரரின் இயல்பு,குடும்ப,சமுதாயவாழ்வில் அவரது தன்மை,குற்றம் புரிய நேர்ந்த சூழ்நிலை, குற்றமிழைத்ததைப்பற்றிய அவரின் மன நிலை,பாதிக்கப்பட்டோருக்கு அவர் செய்ய இருக்கும் இழப்பீடு இவற்றை முறைப்படி குறிப்பிட்டு நீதிபதியின் முன்வைப்பதே தவிர குற்றமிழைத்தவரை சட்டத்தின் சில சலுகைகளைப்பயன்படுத்தி நிரபராதியாக சமூகத்தில் உலவவிடுவதல்ல.
ஓட்டையில்லாத சட்டத்தை யாராலும் கொண்டுவரமுடியாது.ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்துவதை தொலைநோக்குப்பார்வை உள்ளவர்களால் தவிர்க்கமுடியும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் சப்பிட்டுகொள்ளலாம் என்று நினைத்து உணவுக்கட்டுப்பாட்டை சில நேரங்களில் தளர்த்திகொல்வதுபோல சட்டத்தை வளைக்கும் வழக்கறிஞர்கள்,நீதிபதிகள் இருப்பதை தமக்கு சாதகமாக எடுத்துகொண்டு சட்டத்தை மீறுபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
தன் தரப்புவாதியின் நியாங்களை வெளிப்படுத்துவதுதான் ஒரு வழக்கறிஞரின் பணியே தவிர போலியாக நியாயங்களை உருவாக்குவதல்ல.
பணியின் நோக்கம் ஒன்று உள்ளதே தவிர தொழில் தர்மம் என்று ஒன்று கிடையாது.அதர்மம் செய்வோர்மட்டுமே தர்மத்தை துணைக்கழைப்பார்கள்.
வழக்கறிஞர்கள்,நீதிபதிகள் தங்களின் பணி நோக்கத்தைஉணர்ந்து பணியாற்றினால் நிச்சயமாக நாட்டில் நிலவும் அநீதிகளை அழித்துவிடமுடியும்.