Saturday, December 1, 2012

சிந்திப்பதற்குத் தான்

நேற்று இரண்டு கொலைக் குற்றம் சுமத்தப் பட்டவர்கள் காவற்றுறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். எதற்கென்றால் அப்போதுதானே அவர்களுக்குப் பின்னாலிருந்து தூண்டி விட்ட பெரிய மனிதர்கள் என்று அநியாயத்திற்கும் ஊர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற கொள்ளையர்
களும் அரசியல் அயோக்கியர்களையும் காப்பாற்ற முடியும். வீரப்பன் கொல்லப் பட்டதில் எத்தனை அரசியல்வாதிகள் பிழைத்தனர். குற்றவாளிகளை உருவாக்குவதே காவற்றுறையினர்தானே.


சட்டப் பேரவை வைர விழாவிற்கு திமுகவினர் போகவில்லை. சரிதானே.
சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஒரு பெண்ணை சேலையைப் பற்றி இழுத்து அடித்து உதைத்து முதல்வராக இருந்த பெரியவர் கருணாநிதி அவர்கள் ஒரு மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தையினை உச்சரித்ததனை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டதை மறந்திருக்க முடியுமா. வடக்கே எத்தனை கடுமையான விமரிசனங்களைச் செய்தாலும் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் பொது நிகழ்ச்சிகளில் பண்பாடு காக்கின்றனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த குடி  அதற்கும் முந்திய குடிகளைப் போல் நடந்து கொள்கின்றனர். விஜயகாந்தை பாராட்ட வேண்டும். முதலில் ஜெயலலிதாவை அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று எத்தனைக் காலம் அடம் பிடித்தார் பெரியவர் கருணாநிதி.

அதற்காக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்வதையெல்லாம் நான் நியாயப் படுத்துகின்றேன் என்று கருதாதீர்கள். எல்லாத் தலைவர்களின் மீதும் கூட்டங்களில் முதல்வரை அவதூறாகப் பேசியதாக வழக்குகள். மக்களாட்சி நடக்கின்ற நாட்டிலே இது எத்தனைப் பெரிய கொடுமை.

தி  மு க விற்கு ஆதரவாக பெரியவர் இராசாசி அவர்கள் பெரியவர் காமராசரை அந்தக் கருப்புக் காக்காயைக் கல்லால் அடியுங்கள் என்று சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பேசினார். காமராசர் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு நாகர்கோயில் மேடையிலே சின்ன அண்ணாமலை அவர்கள் இராசாசி என்று பேசத் துவங்கினார்.அவரது சட்டையைப் பிடித்து இழுத்த பெரியவர் காமராசர் நீ யாருன்னேன் அவரப் பேச அவர் யாரு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்  அவர் சேவை என்ன தெரியுமா. நிறுத்துன்னேன் என்று அவரைப் பேவே விடாமல் தடுத்து விட்டார்.

1 மறுமொழிகள்:

said...

பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்று கொள்ளும் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு ஏற்கும் தன்மை இல்லை எனில் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டியது தானே.


மேதகு குடியரசு தலைவர் அவர்கள் நாடக ஆசிரியர் கருணாநிதியை வைர விழாவிற்கு (முறையான அரசு விழா ) செல்லும் முன்பு சந்தித்து இருக்கிறார். இது மரபா என்பதை யாரேனும் எனக்கு சொல்லுங்களேன்.

அன்புடன்
தெயவீகராஜன்