Tuesday, December 11, 2012

பாரதி தான் சொல்வான்

கோயிற் பூசை செய்வோன் சிலையை
கொண்டு விற்றல் போலும்
வாயிற் காத்து நிற்போன் வீட்டை
வைத்திழத்தல் போலும்
ஆயிரங்களாய நீதி
அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் சீச்சீ
சிறியர் செய்கை செய்தான்

அந்நிய முதலீடு குறித்துப் பாரதி சொல்வது போலவே தொன்றுகின்றதே.
ஒரு வரிதான் உதைக்கின்றது மன்மோகன் சிங் தருமனாக முடியாது.

தமிழ் மக்கள் மின் தட்டுப் பாடில் தவித்து துன்புற்றிருக்கும் போது அமைச்சரவைப் பெரியவர்கள் அனைவரும் தட்டுப்பாடு இல்லாமல் அதில் துன்புறும் மக்கள் குறித்துத் துன்புறாமல் வெட்கமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது குறித்தும் அடுத்த வரிகளில் கூறுகின்றான்.

நாட்டு மக்களெல்லாம் தம் போல்
நரர்கள் என்று கருதார்
ஆட்டு மந்தையாமென்று உலகை
அரசர் எண்ணி விட்டார்.

அவன் தான் பாரதி

1 மறுமொழிகள்:

said...

ஆமாம் அப்பா . அருமையாக சொன்னீர்கள்.

தருமனாவது, தன் சொத்துகளை இழந்த பிறகு நாட்டை பணயம் வைத்தான். இப்போது நாட்டை தான் முதலில் பணயம் வைக்கின்றார்கள்.

இந்தியா முழுமையும் கொண்டாட வேண்டிய புலவன். தமிழர்களே புறக்கணித்தது தான் கொடுமை. (அவர் காலத்தில் )

அந்த பாவம் தான் , இப்போது நன்றாக அனுபவிகின்றார்கள்.

அன்புடன்
தெயவீகராஜன்