ஏழைகள் மட்டுமே எரிகின்றார் இங்கே
இருப்பவர் சுகமாய் இருக்கின்றார்
கோழைகள் எரிந்தவர் புகழைக் கொண்டு
கொள்கைக் கூட்டம் போடுகின்றார்
வாழையைப் போலத் தமையே தந்தார்
வறுமையில் வாடிய இளைஞர் அவர்
பேழைகள் சேர்த்துப் பிழைக்கும் தலைவர்
பெரிதாய்க் கூச்சல் போடுகின்றார்
தமிழர் பிணங்கள் தம்மை வைத்து
தலைவர்கள் இங்கே வாழுகின்றார்
குதியாய்க் குதித்துக் கோபம் காட்டி
குரலை உயர்த்திப் பேசுகின்றார்
இவர்களை நம்பி இதற்கு முன்னாலே
எரிந்தவர் குடும்பம் காத்தாரா?
எவரை எதிர்த்து எரிந்தாரோ இவர்
அவரோடேயே போய்ச் சேர்ந்திட்டார்
அங்கே அழிவதும் தமிழினம்தான்
அதற்காய் எரிந்தவர் தமிழினம்தான்
இங்கே ஆடிடும் தலைவர்கள் இவர்க்கு
இதயம் இருப்பது தேர்தலில்தான்
சங்கே முழங்கு என்ற பாரதி
தாசனும் இங்கே இன்றில்லை
சரியாய் மீண்டும் ஏழைகள் தம்மைச்
சாவில் தள்ளுதல் முறை தாமோ
Thursday, February 5, 2009
ஏழைகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
அருமை அய்யா, இன்றைய அரசியல்வாதிகளின் அணுகுமுறையை அப்படியே தோலுரித்து காட்டியிருக்கிறீர். இனியேனும்
இவர்கள் தங்களது அரசியலை பணத்தோடு மட்டும் வைத்துக்கொண்டு, ஏழைகளின் பிணத்தோடும் பண்ணுவத்தை நிறுத்திக் கொள்ளட்டும்.
சிம்மபாரதி, துபாய்
Ayya, Vanakkam! Pinathai vaithup plaipu nadathum thamizhaga arasiyal thalaivargalai naraga adaiyalam kattiyulleergal. Ivargal yarum sagamattargal, aanal pilappu nadathuvargal! ivarkalaip parthuthan antha ettayapurathu mundasu kavignan " cheechee nay pizhaikum intha pizhaipu" entru solli iruppano?
S.A.Shahul Hameed
Post a Comment