Wednesday, June 17, 2009

வணங்கி நிற்போம்

ஊடலிலே தோற்றவர்கள் வென்றார் என்று
உலக மறை வள்ளுவனார் சொல்லி நின்றார்
தேர்தலிலே தோற்றவரும் வென்றார் எங்கள்
தேசத்தில் பெரும் பொறுப்பில் இருக்கின்றாரே
பாட நூலில் வள்ளுவரைப் படித்தவர்தான்
பல முறையும் அவையினிலே சொன்னவர்தான்
நாடவில்லை நாணத்தை அதனால் தானே
நாணமின்றிப் பெரும் பதவி தன்னை ஏற்றார்


ஊடகங்கள் அவர் குறித்துப் பேசவில்லை
உயர்மனிதர் யாரும் வாய் திறக்கவில்லை
நாடகங்கள் நடத்துகின்றார் நாடு முற்றும்
நாணயத்தால்(பணத்தால்) வெல்லுகின்றுகின்றார் நாணமின்றி
கேடு கெட்ட மனிதர் இவர் வழிகள் சொல்வார்
கேட்டு நன்கு மகிழ்ந்திடுக இந்தியத்தார்
சூடு என்றால் சொரணை என்றால் ஏழை மக்கள்
சொத்தாக்கி வாழுகின்றார் வணங்கி நிற்போம்

2 மறுமொழிகள்:

said...

தேர்தலிலாக் கீழ்மதியன் தேர்ந்தான் என்றே
தேர்ந்துரைத்தார்!* தேர்ந்தறியத் தெரியா மக்கள்
தேர்தலிலாத் தேர்தலிலே தோற்றோன் தேர்தல்
தேர்ந்தெடுத்த பொய்யென்று தேர்ந்த றிந்தும்
தேர்தலிலா நெஞ்சினராய்த் தேர்ந்து நின்றார்;
தேர்தலிலான் தேர்ந்ததனைத் தேர்ந்து ரைத்தீர்;
தேர்தலுளாய்!* தேர்தலிலா இந்த நாட்டில்
தேவன்*வழி தேர்ந்தெடுத்துத் தேர்ந்தீர் வாழ்க!



தேர்ந்துரைத்தார் -தேர்தல் ஆணையத்தைத் குறித்தது.
தேர்தலுலாய்! -வெற்றிக்குறியவரே!
தேவன் -பொய்யா மொழிப்புலவர் வள்ளிவரைக் குறித்தது.

said...

aaha...arumai arumai... ethai paarthu vittavathu soodu soranai varuma paarpom. jananayagathai kuzhi thondi puthaithavarkalukku eethu soodum soranaiyum.

ayya kodutha saataiyadi mika mika arumai.