போதி மரப் புத்தரினை ஆங்காங் நாட்டார்
பொருப்பினிலே மிகச் சிறப்பாய் அமர்த்தி உள்ளார்
நீதி அவன் சொன்னதெதும் நெஞ்சில் இல்லை
நிலையாமை குறித்த எண்ணம் எதுவும் இல்லை
வாய் திறந்து அண்ணாந்து பார்ப்பதற்காய்
வடிவமைத்து வைத்து உள்ளார் பெருமையாக
போய்ப் பார்த்தேன் நானுந்தான் என்ன செய்ய
பொறுமையுடன் புத்தருமே வீற்றிருந்தார்
Monday, June 15, 2009
மேலே இருந்தார்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
அண்ணா!
இந்த "பொருப்பினிலே " என்ற சொல்; இவ்விடத்தில் என்ன? பொருளில் அமைகிறது.
தங்கள் உள்ளக் கிடக்கை அழகாகப் பதிந்துள்ளது. எங்கள் இலங்கையிலும் பார்த்த இடமெல்லாம் புத்தர்
ஆனால் அவர் கொள்கைகளை எவருமே பற்றார். பிக்குகள் உட்பட
Post a Comment