Wednesday, April 7, 2010

தெய்வங்களும் கண் திறந்து பார்த்திடாதோ

துறந்து விட்டார் ஆசிரமப் பொறுப்பையெல்லாம்
துறவு விட்ட நித்தியத்தின் ஆனந்தர் தான்
மறந்து நிற்பார் மக்கள் சில காலத்திலே
மனம் கவர வேறு ஒரு சாமி வருவார்
சிறந்தவர் காண் என்று இங்கு அவரையும் தான்
சீராட்டிப் பாராட்டி வணங்கி நிற்பார்
திருந்துவது எந்நாளோ இந்த மக்கள்
தெய்வங்களும் கண் திறந்து பார்த்திடாதோ

1 மறுமொழிகள்:

said...

உண்மையில் மக்கள் விதை விதையாகவே இருக்கவேண்டும்.ஆனால் அதிலிருந்து மரமும் வளரவேண்டும் என விரும்புகிறார்கள்.எந்த மாற்றதிர்ற்கும் தயாராக இல்லாது எல்லாம் மாறவேண்டும் என எதிர்பார்கிறார்கள்.வித்தைக்காரன் கிளியின்மீது ஒரு துணியை போட்டு பின்னர் அதை எடுக்கையில் பூனையாக காட்டுவதுபோல் எந்த சிரமமும் இன்றி நொடிநேரத்தில் தமக்கான மாற்றங்கள் நடைபெறவேண்டும் என பேராசைப்படுகிறார்கள்.இங்கே வெற்றிபெற்ற மனிதர்களது உயர்ந்த நிலைதான் அனைவராலும் விரும்பப்படுகிறது,அதற்காக அவர் உழைத்த உழைப்பு கவனிப்பாரின்றி செல்லா காசாக கிடக்கிறது. உழைப்பிற்கு பயப்பவர்கள் உயர்விற்கு மட்டும் ஆசைப்படுபவர்கள் இருக்கும்வரை இதுபோன்ற போலிகள் உருவாக்கப்பட்டுகொண்டேதான் இருப்பார்கள்.