அவர் ஆண்ட போதிலே நிலையென்ன தெரியுமா
அவர் என்ன கேட்பதென்னை
ஆட்சியில் இருப்பவர் கேட்கின்ற கேள்வியில்
அறியாமை துள்ளுதிங்கு
அவர் வேண்டாம் என்றுதான் உங்களை அம்ர்த்தினார்
ஆட்சியில் மக்களிங்கு
ஆகவே மக்களின் ஏக்கங்கள் தீர்ப்பதே
அய்யா உம் வேலை யிங்கு
எவர் ஆளும் போதிலும் நிலையிதே கேவலம்
இனிய எம் தமிழ் மக்களே
இவர் மாறி அவர் வரின் இதுவேதான் கேள்வி நாம்
என் செய்ய தமிழ் மக்களே
அவர் ஊழல் இவர் சொல்ல இவர் ஊழல் அவர் சொல்ல
அனைத்தையும் நாம் மறப்போம்
எவருக்கோ வாக்கினை அளித்து நாம் என்றைக்கும்
இந்தியராக வாழ்வோம்
Saturday, April 10, 2010
இந்தியராக வாழ்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
அருமையான பா ஐயா!
தமிழுக்கு எம் வணக்கங்கள்!!
கவிதையின் பொருள் மனதை நெருடுகிறது..... அதுவும் கடைசி மூன்று வரிகள்... நான் இதை எதிர்பார்க்கவில்லை....
Post a Comment