Thursday, December 20, 2012

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மாணவி ஒருவருக்கு  நடந்துள்ள கொடுமை பற்றி மத்திய அமைச்சராக இருக்கின்ற தமிழக பெண் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் எந்தக் கருத்தும் சொன்னதாகத் தகவல் இல்லை மேற்கு வங்க முதல்வரும் தமிழக முதல்வரும் பெண்கள். அவர்களும் வாய் திறக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும் இருக்கின்ற பெண்மணிகள் நாட்டில் நிறைய பேர் உண்டு. அவர்களும் கருத்துத் தெரிவித்ததாகத் தகவல் இல்லை. குறைந்த பட்சம் அவர்கள் இதைக் கண்டித்துப் பதவி விலகுவதாக சும்மா ஒரு வார்த்தைக்காகவேனும் கூறுவார்கள் என எதிர்பார்த்தேன்.

ஷீலா தீட்ஷீத் பதவி விலகியிருக்க வேண்டும். இல்லை.

மருத்துவமனையில் அந்தப் பெண் வாழ விரும்புவதாக் ம்ருத்துவர்கள் சொல்லுகின்றனர்.

என்ன செய்ய நான் மேலே சொன்ன எல்லோரும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

1 மறுமொழிகள்:

said...

வெட்கமில்லை! வெட்கமில்லை!வெட்கமென்பதில்லையே! மானம்கெட்ட வாழ்வதனை வாழுகின்ற போதிலும் வெட்கமில்லை! வெட்கமில்லை!வெட்கமென்பதில்லையே!தவறிளைக்கப்பட்டவன் மீண்டு வாழ்வதில் வைராக்கியத்தை காணலாம்,தவறை கண்டும் காணாது செல்பவனை என்னவென்று சொல்ல?சட்டசபையில் துகிலுரிந்தவன் கண்ணை கட்டிகொண்டிருக்கலாம்,ஆனால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,? என்ன சொல்வது?இன்று அந்த மாநிலத்தில் நடக்கும் தவறை கண்டித்தால் நாளை நம் மாநிலத்தில் நடக்கும்போது அவர்கள் கண்டிப்பார்களோ எனும் தயக்கமோ?இது மனித சமுதாய பிரச்சனையாக பார்க்கப்படவில்லை.ஒரு மாநிலத்தின் பிரச்சனையாகவே பார்த்து ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. நாமனைவரும் மனிதர்கள்,இந்தியர்கள்?எல்லாம் இறைவன் செயலென உணர்ந்து நடந்துகொள்ளும் பக்குவம் பெற்றவர்கள்.இந்தநிகழ்வின் பின்னரும் புத்தாண்டு கொண்டாடநட்சத்திரஅரங்குகளுக்கு முன்பதிவு செய்துவைக்க நாம் வெட்கபடுவதே இல்லை.இதுவும் கடந்துபோகும் எனும் ஞானம் கைவரப்பெற்றவர்கள் நாம். ஏனென்றால் இந்தியர்கள் நாம் ஞான பூமியில் பிறந்தவர்கள் அல்லவா?