Tuesday, March 24, 2009

துட்டைத் தாங்க

ஆடுங்க பாடுங்க கொண்டாடுங்க
அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் திண்டாடுங்க
கூடுங்க கூட்டணியாய் ஏமாத்துங்க
கொடுப்பதற்காய் வாக்களிப்பார் எங்காளுங்க
சோறுங்க தண்ணிங்க எல்லாம் தாங்க
சொத்தை எல்லாம் நீங்களேதான் சேத்துக்குங்க
ஊருக்குத் தண்ணி வேண்டாம் பள்ளி வேண்டாம்
ஒங்களுக்கே வாக்களிப்போம் துட்டைத் தாங்க

1 மறுமொழிகள்:

said...

கூட்டணியை மாற்றி மாற்றி , வெற்றியையும் மாற்றி மாற்றி,
நோட்டணியை காட்டி காட்டி,
சேற்றணிவார் நம் முகத்தினிலே!