Saturday, March 28, 2009

பழம் பாடல் பட்டினத்தார்

இறுதி வரை மனிதருக்குள் இருக்கும் அந்த
இன்ப விழைவொன்றாலே தடுமாறித்தான்
உறுதிப் பொருள் ஆன நந்தம் இறைவன் தன்னை
உள்ளத்துள் கொள்ளாராய் மனத்திற்குள்ளே
குருதியுடன் சீழுடனும் தான் பிறந்த
குமைக்கின்ற குறியதனை எண்ணுகின்றார்
தரும் கல்விக்கண்கள் அவை இரண்டினாலே
தகி மார்பே தேடுகின்றார் அய்யோ அய்யோ

பட்டினத்தார்
சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம்பலம் தேடி விட்டோமே-நித்தம்
பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்

1 மறுமொழிகள்:

said...

பட்டினத்தாரை உங்களைவிட யாராலும் இப்படி எழுதவோ, இயம்பவோ முடியாது அய்யா!