மனிதர்களை மனிதர்களாய்ப் பார்த்தல் விட்டு
மதம் சாதி இனம் என்று பிரித்து வைத்த
கனிவற்ற மனிதர்களை எண்ணி எண்ணி
கவலையுற்று நிற்கின்ற நல்லார் தம்மை
சரியாகப் போற்றாமல் அவரைக்கூட
சாதி எனும் குறி கொண்டு திட்டித் தீர்த்தல்
அறிவானார் செயல் அன்று வேறு என்ன
அறியாமல் செய்கின்ற பிழையே ஆகும்
நான் சொன்னால் சொன்னது தான் என்று என்றும்
நாயகராம் பெரியாரும் சொன்னதில்லை
ஏன் என்று கேளுங்கள் சொன்னதெல்லாம்
எப்படித்தான் என்று நீங்கள் சிந்தியுங்கள்
நான் சொன்னேன் என்பதற்காய் நம்ப வேண்டாம்
நல்ல விதம் சிந்தித்து முடிவெடுங்கள்
தான் என்று அகம் கொண்டு பெரியார் என்றும்
தனித்துவத்தைக் காட்டுதற்கு முயலவில்லை
Monday, October 6, 2008
அவர் பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
வணக்கம் அய்யா உங்களது பாக்கள் அருமையாக உள்ளது. மதங்களில் நம்பிக்கையுள்ளவர்களின் நெஞ்சிலும் தந்தை பெரியார் உள்ளார். வாழ்த்துக்கள்.
www.aazhikkarai.blogspot.com
அருமையாக உரைத்தீர்கள் ஐயா!
Post a Comment