தமிழுக்காய்ப் பாடுகின்றான் தமிழர் நெஞ்சில்
தாக்கங்கள் ஏற்படுத்தப் பாடுகின்றான்
அமிழ்தான தமிழ் மொழியை மேலும் மேலும்
அழகாக்க அறிவாக்கப் பாடுகின்றான்
குமிண் சிரிப்பில் மனங்கள் எல்லாம் கொள்ளை கொள்ளும்
குப்புசாமி என் தம்பி அவனை வெல்ல
தமிழ் நாட்டில் இசை அறிஞர் எவரும் இல்லை
தாயவளாம் தமிழிசைக்கு அவனே எல்லை
Tuesday, October 28, 2008
புஷ்பவனம் குப்புசாமி
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
தங்களின் ஊக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள் ! என்னைப் போல படைப்பாளிகளுக்கு உங்களைப் போல சான்றோர்களின் ஆதரவு என்றென்றும் தேவை ! எல்லோரும் வாழும் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் வழியினில் மக்களுக்காக கலையினைப் படைக்கும் உம்மைப் போன்ற நல்லோர் பாதையினில் நாங்களும் அடியெடுத்து தமிழினை,தாய் நாட்டினை ,இம்மண்ணை,இப்பிரபஞ்சத்தினைப் பாட மக்கள் ஜன் நாயகத்தோடு,சுதந்திர சுவாசத்தோடு எழுதிட தங்களின் ஆசி எங்களைப் போன்றோர்க்கு என்றென்றும் தேவை!
தங்களின் கிரியாவூக்கத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ,புஷ்பவனம் குப்புசாமி,.என்னைப்போன்ற படைப்பாளிகளுக்கு தங்க்ளின் ஊக்கம் சத்துணவு போன்றது! இன்னும் சரியான திசைவழி படைப்பாளிகள் செல்லவில்லையோ என்று எனக்குள் ஒரு ஆதங்கம் ஐயா! சரியான் திசைவழி
தமிழிலக்கியம் நடைபோட தங்களைபோன்ற சான்றோர்களின் அறிவுரைகள் தேன் போன்றது!தமிழிசை மட்டுமல்ல தமிழிலக்கியம் மக்களுக்காக நிமிர்ந்து நின்று படைக்கும் காலத்தைப் படைப்போம்! நாம் அனைவரும் ஓர் அணியினில் நின்று புத்திலக்கிய உலகம் படைப்போம்!
Post a Comment